சியோமி ரெட்மி 9 சி ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா?

|

சியோமி நிறுவனம் அதன் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன் மாடலில் புதிய வேரியண்ட் மாடலை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. சியோமி ரெட்மி 9C போனில் தற்பொழுது நிறுவனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலை மலேசிய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சியோமி நிறுவனம் இதற்கு முன்பு 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் வசதி கொண்ட 32 ஜிபி மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் வகைகளைக் கடந்த ஆண்டு மலேசியாவில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்

தற்பொழுது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன் சாதனத்தின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ஆர்எம் விலை படி 499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 8,780 ஆக விலை இருக்கிறது. இந்த புதிய மாறுபாட்டு வேரியண்ட் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் மலேசியச் சந்தையில் விற்பனைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீலம் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் வருகிறது.

Redmi 9c ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Redmi 9c ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Redmi 9c ஸ்மார்ட்போன் சாதனம் 6.53' இன்ச் உடன் 1600 x 720 பிக்சல்கள் கூடிய எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2.3GHz ஆக்டா கோர் மீடியா டேக் ஹீலியோ G35 செயலி மூலம் IMG PowerVR GE8320 GPU உடன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு உடன் வருகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கப்படலாம். 5,000 எம்ஏஎச் பேட்டரியை ஆதரிக்கிறது.

செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்.. இதோ..செவ்வாயில் இருந்து வந்த மெயில்.. உலகம் முழுக்க வைரல் ஆகும் புகைப்படங்கள்.. இதோ..

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

இது கைரேகை சென்சார், ஐஆர் பிளாஸ்டர், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. கேமராவை பொறுத்த வரை 13 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பு கொண்டுள்ளது.

புதிய ரெட்மிபுக் (RedmiBook) லேப்டாப் நாளை அறிமுகமா?

புதிய ரெட்மிபுக் (RedmiBook) லேப்டாப் நாளை அறிமுகமா?

முன்பக்கத்தில், செல்ஃபிக்காக 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த சாதனம் MIUI 12 உடன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஓஎஸ் உடன் வருகிறது. கூடுதலாக, இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, GPS + GLONASS, USB Type-C போன்ற இணைப்பு அம்சங்கள் உள்ளது.கேபோல், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மிபுக் (RedmiBook) லேப்டாப் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ரெட்மிபுக் லேப்டாப் சாதனம் ரூ .50,000-க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நூற்றாண்டிற்கு பின் ஐன்ஸ்டீன் கோட்பாடு உண்மையானது.. கருந்துளைக்கு பின்னாலிருந்து வெளிவந்த ஒளி.!ஒரு நூற்றாண்டிற்கு பின் ஐன்ஸ்டீன் கோட்பாடு உண்மையானது.. கருந்துளைக்கு பின்னாலிருந்து வெளிவந்த ஒளி.!

என்ன-என்ன அம்சங்கள் எல்லாம் எதிர்பார்க்கலாம்?

என்ன-என்ன அம்சங்கள் எல்லாம் எதிர்பார்க்கலாம்?

சிகோமி ஏற்கனவே ரெட்மிபுக் சார்க்கோள் க்ரெய் வண்ண விருப்பத்தில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளேவை கொண்டிருக்க வேண்டும். இன்டெல் 11 வது ஜென் கோர் ஐ 3 மற்றும் கோர் ஐ 5 ப்ராசசர் விருப்பங்களை 8 ஜிபி ரேம் உடன் வர வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 9C New Variant Launched With 4GB RAM and 128GB storage : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X