வெறும் ரூ. 9,499 விலையில் மிரட்டலான போன் வாங்க ஆசையா? அப்போ இந்த Redmi போன் தான் சரி..

|

மலிவு விலையில் அனைத்து முக்கிய அம்சங்களுடன் மிரட்டலான தோற்றத்தில் புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் பயனர்களுக்கான பதிவு தான் இது. இந்தியாவில் ரெட்மி நிறுவனம் இப்போது ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் விற்பனையை இப்போது துவங்கி வைத்துள்ளது. இந்த புதிய ரெட்மி போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அசல் ரெட்மி 9 மாடலுக்கு ஒத்ததாகும். இது புதிய வண்ண விருப்பங்கள் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட டாப்-எண்ட் வேரியன்ட் உடன் இப்போது ஆக்டிவ் மாடலாக வருகிறது.

மிரட்டலான போன் மலிவு விலையில் : ரெட்மி 9 ஆக்டிவ்

மிரட்டலான போன் மலிவு விலையில் : ரெட்மி 9 ஆக்டிவ்

மலிவு விலையில் அருமையான ஸ்மார்ட்போன் சாதனம் வாங்க வேண்டும் என்பவர்கள் இந்த மாடலை உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். மலிவு விலையில் இது என்ன சிறப்பம்சங்களை வழங்குகிறது, இதன் வெவ்வேறு வேரியண்ட் மாடல்கள் என்ன விலையில் வருகிறது என்பது போன்ற விபரங்களை பார்க்கலாம். ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் 20: 9 டிஸ்ப்ளே மற்றும் இரட்டை பின்புற கேமராக்களை வழங்குகிறது. இந்த போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்தியாவில் ரெட்மி 9 ஆக்டிவ் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்தியாவில் ரெட்மி 9 ஆக்டிவ் விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்தியாவில் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் மாடலான 4 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 9,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு விருப்பத்தின் விலை ரூ. 10,999 ஆக இருக்கிறது. இது கார்பன் பிளாக், கோரல் க்ரீன் மற்றும் மெட்டாலிக் பர்பிள் வண்ண விருப்பங்களைக் கொண்டுள்ளது. இது அமேசான், Mi.com, மி ஹோம் மற்றும் மி ஸ்டுடியோ வழியாக வாங்குவதற்குக் கிடைக்கிறது.

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் 720 x 1,600 பிக்சல்கள் உடைய டாட் டிராப் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 20: 9 விகித விகிதம் மற்றும் 400 நிட்ஸ் உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட் மூலம் 6 ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் டூயல் நானா சிம் அம்சத்துடன் செயல்படுகிறது. இது ரெட்மி 9 ஆக்டிவ் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான MIUI 12 இல் இயங்குகிறது.

டூயல் பின்புற கேமரா அமைப்பு

டூயல் பின்புற கேமரா அமைப்பு

இது டூயல் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f/2.2 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் f/2.4 லென்ஸுடன் வருகிறது. பின்புற கேமரா அமைப்பு ஒரு ஒற்றை LED ஃப்ளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் AI பியூட்டிஃபை 5.0 மற்றும் AI சீன் டிடெக்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, f/2.2 லென்ஸ் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

செவ்வாயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிலநடுக்கமா? இன்சைட் லேண்டரை அதிரவிட்ட 'மார்ஸ்குவேக்'..செவ்வாயில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நிலநடுக்கமா? இன்சைட் லேண்டரை அதிரவிட்ட 'மார்ஸ்குவேக்'..

ஸ்டோரேஜ் மற்றும் இணைப்பு விருப்பங்கள்

ஸ்டோரேஜ் மற்றும் இணைப்பு விருப்பங்கள்

Redmi 9 Activ ஸ்மார்ட்போன் ஆனது 128 ஜிபி வரை eMMC 5.1 சேமிப்பகத்தை உள்ளடக்கியது. இந்த சாதனம் பிரத்யேக ஸ்லாட் வழியாக மைக்ரோ SD அட்டை மூலம் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் v5, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், FM ரேடியோ மற்றும் மைக்ரோ யஎஸ்பி போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது. போர்டில் உள்ள சென்சார்களில் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும். பின்புறத்தில் கைரேகை ஸ்கேனரும் உள்ளது.

ரெட்மி 9 ஆக்டிவ் போல ரெட்மி 9 இப்போது என்ன விலையில் கிடைக்கிறது?

ரெட்மி 9 ஆக்டிவ் போல ரெட்மி 9 இப்போது என்ன விலையில் கிடைக்கிறது?

சியோமி நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்திற்கு 10W கொண்ட சார்ஜிங் அம்சத்துடன் Redmi 9 Activ ஒரு 5,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 164.9x77.07x9.0 மிமீ மற்றும் 194 கிராம் எடை கொண்டது. ரெட்மி 9 ஆக்டிவ் போலவே, இந்தியாவில் ரெட்மி 9 விலை தற்போது 4 ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாடலுக்கு ரூ. 9,499 ஆகவுள்ளது. ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு வகை ரூ. 9,999 என்ற விலையில் இப்போது வாங்குவதற்குக் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi 9 Activ With Dual Rear Cameras Goes on Sale in India Know The Price And Specification : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X