அமேசான்: கம்மி விலையில் வாங்க கிடைக்கும் 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி.!
ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அமேசான் தளத்தில் ரெட்மி ஸ்மார்ட் டிவிகளுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது தற்போது அமேசான் தளத்தில் ரெட்மி 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (L43M6-RA) மாடலுக்குவிலைகுறைக்கப்பட்டு ரூ.23,999-விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிக்கு 31 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சிறப்பு சலுகைகளும் இந்த ஸ்மார்ட் டிவிமாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1920x1080
பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 Degree wide viewing angle ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.

யூ கிரேடு LED பேனல், விவிட் பிக்சர் எஞ்சின் மற்றும் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் மெய்நிகர்: எக்ஸ் ஆதரவுடன்வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக மேலும் 20W ஸ்பீக்கர்கள் கொண்டு
வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல். கூடுதலாக, மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக Dolby Audio ஒலிஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி ஸ்மார்ட் டிவி .

இந்த 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது ஆண்ட்ராய்டு டிவி 11 இல் இயங்கும் பேட்ச்வால் 4-ஐ அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் மேலும் ஐஎம்டிபி ஒருங்கிணைப்பு மற்றும் யுனிவர்சல் சர்ச், கிட்ஸ் மோட் மற்றும் லாங்குவேஜ் யுனிவர்ஸ் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு வருகிறது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியில் க்ரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் பிரத்யேக கூகிள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் க்யூக் மியூட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய புதிய Mi ரிமோட் வசதியை கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இந்த ரிமோட்டில் ஒரு குயிக் வேக் அம்சமும் அடங்கும்.
ரெட்மி நிறுவனத்தின் இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் சக்திவாய்ந்த 64-பிட் குவாட்-கோர் பிராசஸர் வசதியும் உள்ளது. பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்.

வயர்லெஸ் இணைப்பு விருப்பங்களில் டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் வி 5.0 ஆகியவை அடங்கும். மேலும் லேட்டஸ்ட் மிராக்காஸ்ட் ஆப், ஆட்டோ லோ லேடென்சி மோட் போன்ற அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது. அதேபோல் இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி 2.0, ஏவி, 3.5mm ஹெட்ஜாக், ஈதர்நெட்,ஆண்டெனா போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி சாதனம்.


Click it and Unblock the Notifications