Home
News

Redmi 13C: வந்தே 10 நாள் தான் ஆச்சு.. அதிரடி தள்ளுபடி.. ரூ.7,999 விலைக்கு வந்த புது போன்.. உடனே வாங்கிடுங்க..

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்ட்டான ரெட்மி (Redmi) கடந்த வாரம், ரெட்மி 13C (Redmi 13C) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் விற்பனைக்கும் வந்து, அதிக யூனிட்களை குறைந்த நேரத்தில் விற்று தீர்த்தது.

இப்போது, இந்த ரெட்மி 13C (Redmi 13C) சாதனத்தின் விலை அறிமுகம் சலுகையை விட இன்னும் அதிகமாக குறைந்துள்ளது. அமேசான் தளத்தில் இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தின் மீது அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டு 15 நாட்கள் கூட முழுமையாக நிறைவடையாத நேரத்தில், புத்தாண்டை ஒட்டி இதன் விலை குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Redmi 13C: வந்தே 10 நாள் தான் ஆச்சு.. அதிரடி தள்ளுபடி..

புத்தாண்டை வரவேற்கும் நல்ல விதமாக, சியோமி வழங்கியுள்ள இந்த சலுகை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்த புத்தம் புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் முன்பை விட குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. தெரியாதவர்களுக்கு, இதுவொரு 4ஜி (4G) சாதனமாகும்.

ரெட்மி 13C ஆஃபர் விலை (Redmi 13C Offer Price):

இது இப்போது 3 வேரியண்ட் (variants) மாடல்களில் வாங்க கிடைக்கிறது. இது இப்போது 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் (storage) உடன் ரூ. 8,999 விலையில் (Redmi 13C price) இன்று முதல் வாங்க கிடைக்கிறது. இதன் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 9,999 விலையிலும், 8GB ரேம் + 256GB வேரியண்ட் மாடல் ரூ.11,499 விலையிலும் அமேசான் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் வழியாக வாங்க கிடைக்கிறது.

அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் ரூ.9,999 என்ற விலையில் வழங்கி வந்தது. இதன் அசல் விலை பட்டியலின் படி, ரூ.11,999 ஆகும். தற்போது இதன் மீது ரூ,1000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரெட்மி 13C ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 ஆக குறைந்துள்ளது.

இந்த ரூ.1000 அதிரடி தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ.1000 தள்ளுபடியை பெரும் வாய்ப்பும் இப்போது கிடைக்கிறது. HDFC, ICICI, SBI வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம், ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சாதனத்தை முன்பை விட மிகவும் குறைந்த விலையில் உங்களால் வாங்க முடியும்.

இந்த கூடுதல் சலுகையுடன், ரெட்மி 13C ஸ்மார்ட்போனை வெறும் ரூ.7,999 என்ற (Redmi 13C offer price) விலைக்கு வங்கி வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

ரெட்மி 13C சிறப்பம்சம் (Redmi 13C Specifications):
- 6.74' இன்ச் LCD HD+ டிஸ்பிளே (display)
- 90Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே
- 50MP + 2 MP + 2MP கேமரா (camera)
- 8MP செல்பி கேமரா
- மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85)
- 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் (storage)
- 8GB விர்ச்சுவல் ரேம் (virtual RAM)
- மைக்ரோஎஸ்டி 1TB வரை (microSD)
- ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் MIUI 14
- 5,000mAh பேட்டரி (battery)
- 18W பாஸ்ட் சார்ஜிங் (fast charging)
- 4G VoLTE
- வைஃபை (Wi-Fi)
- (Bluetooth) 5.1 ப்ளூடூத் 5.1,
- ஜிபிஎஸ் (GPS)
- யுஎஸ்பி போர்ட் சி (USB-C port)
- 3.5mm ஆடியோ ஜாக் (audio jack)

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 13C Stardust Black 4GB RAM 128GB Storage Mediatek Helio G85 90Hz Display 50MP AI Triple Camera Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X