பட்ஜெட் செக்மென்ட்டில் அடுத்த பெரிய அடி இந்த போன் தான்.. Redmi 13C ரெடியா? என்னங்க சொல்றீங்க?
ரெட்மி நிறுவனம் இதற்கு முன்பு சமீபத்தில், ரெட்மி 12சி (Redmi 12C) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம்படுத்திய பிறகு, அடுத்தபடியாக ரெட்மி 13சி (Redmi 13C) மிக விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த புதிய போன் பற்றிய விபரங்களை இப்போது டிப்ஸ்டர்கள் இணையத்தில் கண்டுள்ளனர்.
இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் IMEI தரவுத்தளத்தில் காணப்பட்டது. இது ரெட்மி ஸ்மார்ட்போனின் 4G மற்றும் 5G வரிசையில் புது வகை போன்களாக கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 13சி (Redmi 13C ) பற்றிய விபரங்கள் இப்போது லீக் ஆக துவங்கியுள்ளன. இப்போது, இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் போது, இந்த போன் NBTC மற்றும் EEC சான்றிதழ் பக்கத்தில் தோன்றியுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனின் மார்க்கெட்டிங் பெயர் மற்றும் மாதிரி எண்ணை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மைஸ்மார்ட்பிரைஸ் (MySmartPrice) ஆல் கண்டறியப்பட்ட NBTC சான்றிதழ் பக்கத்தில் வெளியான தகவல் படி, ரெட்மி 13சி (Redmi 13C) இன் சந்தைப்படுத்தல் பெயரை உறுதிப்படுத்துகிறது. இது 23106RN0DA மாடல் எண்ணைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4G LTE இணைப்பை வழங்கும் என்று சான்றிதழ் காட்டுகிறது. இதே வேரியண்ட் மாடல் EEC சான்றிதழையும் பெற்றுள்ளது. இந்த மாடல் எண் மற்றும் மோனிக்கரை உறுதிப்படுத்துவதைத் தவிர, NBTC மற்றும் EEC சான்றிதழ்கள் எந்த வன்பொருள் விவரக்குறிப்புகளையும் வெளிப்படுத்தாது. Redmi 13C 4G ஆனது POCO C65 என மறுபெயரிடப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரெட்மி 13சி (Redmi 13C) ஃபோனின் 4G பதிப்பு சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85 SoC) சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புது ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 (android 13) அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் உடன் அனுப்பப்படும் என நம்பப்படுகிறது.
மற்றொரு வதந்தி, இந்த புதிய ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் மாடல் (Redmi 13C 5G) ஆனது மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ (MediaTek Dimensity 6100+) சிப்செட் மூலம் இயக்கப்படும் என வதந்தி பரவியுள்ளது. ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) மற்றும் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு வேரியண்ட் ஸ்மார்ட்போன்களும் 50MP பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளூ, பிளாக், மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா மற்றும் கவனிக்கத்தக்க பெசல்களை வைக்க முன்பக்கத்தில் வாட்டர் டிராப் நாட்ச் கொடுக்கப்பட்டுளது.
இந்த போனின் வலது விளிம்பில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்கள் உள்ளன. இதன் சிம் ட்ரேய் இடது பக்கத்தில் இருக்கும் போது. இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு வட்ட வளையங்கள் உள்ளன, மேலும் இவை மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் '50MP' என்ற வார்த்தைகள் பொறுக்கப்பட்டுள்ளது. இதில் 3.5mm ஆடியோ ஜாக், USB டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன் உள்ளது.


Click it and Unblock the Notifications








