Home
News

அசூர விற்பனை.. ரூ.7,999 விலை.. புது நிறத்துடன் அதகளம் செய்யும் Redmi 13C.. எப்படி சலுகையை பெறுவது?

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி (Redmi) கடந்த மாதம் ரெட்மி 13C (Redmi 13C) என்ற ஸ்மார்ட்போன் (Smartphone) மாடலை அறிமுகம் செய்தது. இது இப்போது புதிய நிறத்துடன் (நியூ Colour) புதிய சலுகையை (Discount) பெற்றுள்ளது.

ரெட்மி நிறுவனம் கடந்த மாதம் ரெட்மி 13C சீரிஸ் மாடலை அறிமுகம் செய்தது. இந்த சீரிஸ் இன் கீழ் நிறுவனம் 4ஜி (4G) மற்றும் 5ஜி (5G) என இரண்டு மாடல்களை கொண்டுள்ளது. அதவாது, ரெட்மி 13C 4ஜி (Redmi 13C 4G) மற்றும் ரெட்மி 13C 5ஜி (Redmi 13C 5G) என்ற 2 மாடல்களை கொண்டுள்ளது.

அசூர விற்பனை.. ரூ.7,999 விலை.. புது நிறத்துடன் Redmi 13C அதகளம்..

இதில் ரெட்மி 13C 4ஜி இந்திய சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. இதற்கான முக்கிய காரணம் இதன் விலை ரூ.8999 என்பதனால் தான் என்றே கூட கூறலாம். ரெட்மி நிறுவன இதற்கு முன்பு வரை ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சாதனத்தை ஸ்டார்ஷைன் க்ரீன் (Starshine Green) மற்றும் ஸ்டார்ஷைன் பிளாக் (Starshine Black) நிறங்களில் வந்தது.

ரெட்மி 13C ஸ்டார்பிரோஸ்ட் வைட் (Redmi 13C Starfrost White):

இப்போது நிறுவனம் ஸ்டார்பிரோஸ்ட் வைட் (Starfrost White) என்ற புதிய ஜொலிக்கும் வெள்ளை நிறத்தில் ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆரம்பத்தில், இந்த சாதனம் 2 நிறங்களில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இப்போது இந்த புதிய நிறத்துடன், இப்போது ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 3 நிறங்களில் வாங்க கிடைக்கிறது.

இந்த புதிய நிறத்துடன் நிறுவனம் சில புதிய சலுகை மற்றும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.8,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் முறையே ரூ.9,999 மற்றும் ரூ.11,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் சலுகை (Redmi 13C Smartphone OFFERS):

சியோமியின் Mi.com வழியாக இந்த ஸ்மார்ட்போன் மீது கூடுதலாக ரூ.1000 சலுகை கிடைக்கிறது. இந்த சலுகையை பெற நீங்கள் ஒரு SBI, ICICI அல்லது HDFC வங்கி வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும். உரிய வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த கூடுதல் ரூ.1000 தள்ளுபடியை பெறலாம். இந்த தள்ளுபடியுடன் ரெட்மி 13C விலை இன்னும் கணிசமாக குறைகிறது.

அசூர விற்பனை.. ரூ.7,999 விலை.. புது நிறத்துடன் Redmi 13C அதகளம்..

இந்த ரூ.1000 தள்ளுபடிக்கு பிறகு, ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சாதனத்தின் விலை 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ.7,999 என்று விலை குறைகிறது. அதேபோல், இதன் மற்ற ஸ்டோரேஜ் மாடல்களான 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல்கள் முறையே ரூ.8,999 மற்றும் ரூ.10,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி 13C சிறப்பம்சம் (Redmi 13C Specifications):
- 6.74' இன்ச் LCD HD+ டிஸ்பிளே (display)
- 90Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே
- 50MP + 2 MP + 2MP கேமரா (camera)
- 8MP செல்பி கேமரா
- மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85)
- 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் (storage)

- 8GB விர்ச்சுவல் ரேம் (virtual RAM)
- மைக்ரோஎஸ்டி 1TB வரை (microSD)
- ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் MIUI 14
- 4G VoLTE
- வைஃபை (Wi-Fi)
- (Bluetooth) 5.1 ப்ளூடூத் 5.1,
- ஜிபிஎஸ் (GPS)

- யுஎஸ்பி போர்ட் சி (USB-C port)
- 3.5mm ஆடியோ ஜாக் (audio jack)
- 5,000mAh பேட்டரி (battery)
- 18W பாஸ்ட் சார்ஜிங் (fast charging) அம்சங்களை கொண்டுள்ளது. குறைந்த ஸ்டாக் மட்டுமே இருப்பதனால், உடனே முந்துங்கள் மக்களே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 13C Now Available In New Starfrost White Colour Starshine Green and Starshine Black In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X