ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.10000 பட்ஜெட்ல 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களை ஒட்டுமொத்தமாக தட்டித்தூக்கும் விதமாக ரெட்மி 13சி சீரிஸ் (Redmi 13C Series) போன்கள் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகின்றன. இந்த போன்களின் டிசைன் மற்றும் கலர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரம் இதோ.
இந்த ரெட்மி 13சி சீரிஸ் மாடல்களில் ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) மற்றும் ரெட்மி 13சி (Redmi 13C) ஆகியவை வெளியாகின்றன. இதன் 5ஜி மாடலானது, ஸ்டார்ட்ரெயில் பிளாக், ஸ்டார்ட்ரெயில் சில்வர் மற்றும் ஸ்டார்ட்ரெயில் கிரீன் ஆகிய 3 கலர்களில் வருகிறது. அதேபோல 4ஜி மாடலில் ஸ்டார்டஸ்ட் பிளாக் மற்றும் ஸ்டார்ஷைன் கிரீன் ஆகிய 2 கலர்கள் வருகிறது.

ரெட்மி 13சி அம்சங்கள் (Redmi 13C 4G Specifications): இந்த போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.74 இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் கொண்டுள்ளது.
இந்த ரெட்மி 13சி 4ஜி போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதோடு 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது. இதற்கு யுஎஸ்பி டைப் - சி சார்ஜிங் வருகிறது. மேலும், டூயல் 4ஜி (Dual 4G), வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.1 மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த போன் முன்னதாக நைஜீரியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,160ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,242ஆகவும் இருக்கிறது. இந்தியாவிலும், இதே விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ரெட்மி 13சி 5ஜி அம்சங்கள் (Redmi 13C 5G Specifications): இந்த போனின் முழு அம்சங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், முக்கிய அம்சங்கள் மட்டும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில், இந்த 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100 Plus) சிப்செட் வருகிறது.

8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் கொண்டிருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) டிஸ்பிளே பாதுகாப்பு வருகிறது. இந்த போனின் ஆரம்ப விலையானது, ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த போன்கள் நல்ல டிசைன், கேமரா, ரேம் மற்றும் பேட்டரி கொண்டுள்ளதால், நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








