பட்ஜெட் விலையில் ஒரு பக்கா போன்.. இந்த Redmi மாடலை கண்ண மூடிக்கிட்டு வாங்க 5 காரணங்கள்!
ரெட்மி 13சி (Redmi 13C) ஸ்மார்ட்போனின் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்கள் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது கடந்த டிசம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 12சி (Redmi 12C) ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்திய சந்தைக்கு வருகிறது.
சந்தேகத்திற்கு இடமின்றி ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ரெட்மி 12சி மாடலை போலவே சூப்பர்-பட்ஜெட் விலையின்கீழ் தான் அறிமுகமாகும். இருப்பினும் ஒப்பீட்டளவில் மிகப்பெரிய மேம்பாடுகளை பெறும். அதென்ன மேம்பாடுகள்? இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பெறும்? இந்த ஸ்மார்ட்போனை ஏன் நம்பி வாங்கலாம்? இதோ விவரங்கள்:

01. 4ஜி-யும் உண்டு.. 5ஜி-யும் உண்டு! டிசம்பர் 6 ஆம் தேதியன்று ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) மாடலுடன் சேர்த்து, ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) மாடலும் அறிமுகமாகும். ரெட்மியின் இந்த நடவடிக்கை, மேம்பட்ட நெட்வொர்க் திறன்களை பரந்த அளவிலான பயனர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றும். வாடிக்கையாளர்கள் தத்தம் பட்ஜெட்டின் அடிப்படையில் 4ஜி அல்லது 5ஜி போனைத் தேர்வுசெய்யலாம்.
02. சக்திவாய்ந்த செயல்திறன்! ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் 6என்எம் மீடியாடெக் 6100 பிளஸ் சிப்செட் (6nm MediaTek Dimensity 6100+ Chipset) மூலம் இயக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதே சிப்செட் தான் ரியல்மி 11எக்ஸ் (Realme 11X) மற்றும் ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) போன்களிலும் உள்ளது. இந்த சிப்செட் மென்மையான மற்றும் ரெஸ்பான்சிவ் யூஸர் எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

03. நல்ல கேமரா செட்டப்! ரெட்மி 13சி ஸ்மார்ட்போனில் 50எம்பி டூயல் கேமரா செட்டப் (50MP Dual Rear Camera) பேக் செய்யப்படும் என்பதை ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. பெரும்பாலான போன்களில் 50எம்பி கேமரா இடம்பெறுவதால், இதையொரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் விலையை கருத்தில் கொண்டால், இது நல்ல கேமரா செட்டப் தான் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
04. கண்ணை கவரும் கலர் ஆப்ஷன்ஸ்! ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் பலவிதமான கலர் ஆப்ஷன்களில் (Colour Options) வரும் என்று வதந்தி பரவுகிறது. ரெட்மியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இரண்டு கிரேடியன்ட் ஃபினிஷ்களை (Gradient Finish) மட்டுமே காட்சிப்படுத்துகிறது: ஸ்டார்டஸ்ட் பிளாக் (Stardust Black) மற்றும் ஸ்டார் ஷைன் கிரீன் (Star Shine Green). இதனுடன் இன்னும் சில கலர் ஆப்ஷன்களும் வெளியாகலாம்.

05. பட்ஜெட் விலையில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும்! மேற்கூறிய ஈர்க்கக்கூடிய அம்சங்களை பேக் செய்யும் மறுகையில் ரெட்மி 13சி 4ஜி மற்றும் ரெட்மி 13சி 5ஜி ஆகிய இரண்டுமே பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே இந்திய சந்தையில் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி 13சி-யின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை (இதன் க்ளோபல் வேரியண்ட் ஆனது), ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான எம்ஐயுஐ 14 (MIUI 14) உடன் அனுப்பப்படுகிறது மற்றும் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியானது: 4ஜிபி+ 128ஜிபி, 6ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 256ஜிபி. இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.74-இன்ச் (720 x 1600 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. கடைசியாக 18வாட்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








