மார்க்கெட்டே அள்ளுவிடுது.. வெறும் ரூ.8000 விலை..1TB மெமரி..8GB ரேம்.. 3 கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரூ.8000 விலையில் ஒரு தரமான ஸ்மார்ட்போன் வாங்க முடியுமா? என்ற சந்தேக கேள்விக்கு "முடியும்" என்ற பதிலை ரெட்மி (Redmi) அதன் புதிய ரெட்மி 13C (Redmi 13C) சாதனத்தின் மூலம் உறக்கச் சொல்லியுள்ளது. இந்த போனின் முழு விபரம் இதோ.
ரெட்மி (Redmi) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ரெட்மி 13C (Redmi 13C) ஸ்மார்ட்போன் சீரிஸ் சாதனத்தை உலக சந்தையில் அறிமுகம் செய்தது. உலக சந்தையில் நிறுவனம் ரெட்மி 13C 4ஜி (Redmi 13C 4G) மாடல் மற்றும் ரெட்மி 13C 5ஜி (Redmi 13C 5G) மாடல் என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மி 13C இந்தியாவில் அறிமுகம் (Redmi 13C launched in India):
இப்போது நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், அதன் மிகவும் மலிவான மற்றும் சக்தி வாய்ந்த ரெட்மி 13C (Redmi 13C) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த விலை பிரிவில் இப்போது இந்த ஸ்மார்ட்போன் மாடலானது மிகவும் சக்தி வாய்ந்த சாதனமாக பார்க்கப்படுகிறது. காரணம், இந்த புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் ரூ.8000 விலைக்குள் சிறந்த ஸ்பெக்ஸ்களை பேக் செய்துள்ளது.
ரெட்மி 13C சிறப்பம்சம் (Redmi 13C Specifications):
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்களை பற்றிய முழு விபரம் இதோ. ரெட்மி 13C (Redmi 13C) ஸ்மார்ட்போன் ஆனது தட்டையான ஃபிளாட் பிரேம் வடிவமைப்பை (flat frame design) கொண்டுள்ளது. இந்த போனின் முன்பக்கத்தில், அதன் டிஸ்பிளே மையத்தில் ஒரு வாட்டர் ட்ராப் நாட்ச் (water drop notch) கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8MP செல்பி ஷூட்டர் கேமரா (selfie shooter camera) பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 6.74" இன்ச் உடன் 1600 x 720 பிக்சல்கள் உடைய HD+ LCD டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate) வீதம் மற்றும் 600 nits பீக் பிரைட்னஸ் (peak brightness) ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே டிசி டிமிங் அம்சத்தை (DC dimming) ஆதரிக்கிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் (corning gorilla glass) பாதுகாப்புடன் வருகிறது.
ரெட்மி 13C ஸ்டோரேஜ் (Redmi 13C Storage):
இந்த சாதனம் 4ஜிபி, 6ஜிபி, 8ஜிபி LPDDR4x RAM விருப்பத்துடன் 128ஜிபி மற்றும் 256ஜிபி eMMC 5.1 ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வருகிறது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான MIUI 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதன் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP கொண்ட பிரைமரி கேமராவை கொண்டுள்ளது.

இத்துடன் 2MP மேக்ரோ ஸ்னாப்பர் மற்றும் விபரம் குறிப்பிடப்படாத ஒரு சென்சார் உடன், இந்த ரெட்மி 13C சாதனம் டிரிபிள் கேமரா (triple camera) அமைப்புடன் வருகிறது. முன்பே சொன்னது போல இது முன்பக்கத்தில் 8MP கேமராவை பேக் செய்துள்ளது. இது டூயல் சிம் (dual SIM), 4ஜி (4G), டூயல்-பேண்ட் வைஃபை (dual band WiFi), புளூடூத் 5.3 (Bluetooth 5.3) உடன் வருகிறது.
இதில் ஜிஎன்எஸ்எஸ் (GNSS) மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB type-c), 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் (35.mm audio headphone jack), மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1TB மெமரி (microSD card slot) மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் (fingerprint sensor) ஆகியவற்றுடன் வருகிறது. Redmi 13C சாதனம் 5,000mAh பேட்டரியை 18W சார்ஜிங்கை ஆதரவுடன் பேக் செய்கிறது.
ரெட்மி 13C இந்திய விலை என்ன (Redmi 13C Price in India):
இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய ரெட்மி 13C (Redmi 13C) ஸ்மார்ட்போன் சாதனத்தின் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.8,999 விலையில் வருகிறது. இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.9,999 விலையில் வருகிறது. இறுதியாக, இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மாடல் ரூ.11,999 என்ற விலையில் வருகிறது.
இதன் விற்பனை வரும் டிசம்பர் 12ம் தேதி 12 மணி முதல் துவங்குகிறது. இது அமேசான் (Amazon), Redmi இந்தியா ஆன்லைன் தளம் மற்றும் சில்லறை விற்பனையாளர் மூலம் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








