Home
News

மாஸ் காட்டும் Redmi 13C.. பட்ஜெட்டில் 8GB ரேம்.. 1TB மெமரி.. 50MP உடன் 3 கேமரா.. இன்று விற்பனை.. விலை என்ன?

சியோமி (Xiaomi) நிறுவனத்திரு சொந்தமான ரெட்மி (Redmi) பிராண்ட், கடந்த வாரம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான ரெட்மி 13C (Redmi 13C) சாதனத்தை அறிமுகம் செய்தது. இது இன்று விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் சலுகை விபரங்கள் இதோ.

ரெட்மி 13C (Redmi 13C) ஸ்மார்ட்போன் கடந்த வாரம் உலக சந்தை மற்றும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் செக்மென்ட்டில் (budget segment) பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் இது அறிமுகம் செய்யப்பட்டு, இந்திய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை ஏகுறச் செய்தது. நைஜீரியா போன்ற சந்தைகளில் இது ஏற்கனவே வாங்க கிடைக்கிறது. இப்போது இந்தியாவில் இதன் விற்பனை ஆரம்பமாகவுள்ளது.

மாஸ் காட்டும் Redmi 13C.. பட்ஜெட்டில் 8GB ரேம்.. 1TB மெமரி..

ரெட்மி 13C இன்று விற்பனை (Redmi 13C Goes On Sale Today):

ஆம், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த புத்தம் புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு (Redmi 13C sale today) வருகிறது. இதுவொரு 4ஜி (4G) சாதனமாகும். இது இப்போது 3 வேரியண்ட் (variants) மாடல்களில் வாங்க கிடைக்கிறது. இது இப்போது 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் (storage) உடன் ரூ. 8,999 விலையில் (Redmi 13C price) இன்று முதல் வாங்க கிடைக்கிறது.

இதன் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 9,999 விலையிலும், 8GB ரேம் + 256GB வேரியண்ட் மாடல் ரூ.11,499 விலையிலும் வருகிறது. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, ரெட்மி 13C ஸ்மார்ட்போனை வாங்கும் ICICI கார்டு பயனர்களுக்கு ரூ.1000 சலுகை (Redmi 13C offers) கிடைக்கிறது. இது EMI விருப்பத்துடன் வருகிறது. இதன் மூலம் ரெட்மி 13C விலை ரூ.7999 என்ற விலையில் (Redmi 13C offer price) வாங்க கிடைக்கிறது.

இந்த சலுகை ரெட்மி 13C மாடலின் 3 வேரியண்ட் மாடல்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். இந்த விற்பனை 12 மணி முதல் அமேசான் (Amazon) விற்பனைக்கு வருகிறது. இது Mi.com மற்றும் சியோமி ரீடெய்ல் ஸ்டோர் (Xiaomi retail stores) வழியாக வாங்க கிடைக்கிறது. இது பிளாக் (Black) மற்றும் ஸ்டார்ஷைன் (Starshine) நிறங்களில் வருகிறது.

மாஸ் காட்டும் Redmi 13C.. பட்ஜெட்டில் 8GB ரேம்.. 1TB மெமரி..

ரெட்மி 13C சிறப்பம்சம் (Redmi 13C Specifications):
- 6.74' இன்ச் LCD HD+ டிஸ்பிளே (display)
- 90Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே
- 50MP + 2 MP + 2MP கேமரா (camera)
- 8MP செல்பி கேமரா
- மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85)
- 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் (storage)
- 8GB விர்ச்சுவல் ரேம் (virtual RAM)
- மைக்ரோஎஸ்டி 1TB வரை (microSD)
- ஆண்ட்ராய்டு 13 (Android 13) உடன் MIUI 14
- 5,000mAh பேட்டரி (battery)
- 18W பாஸ்ட் சார்ஜிங் (fast charging)
- 4G VoLTE
- வைஃபை (Wi-Fi)
- (Bluetooth) 5.1 ப்ளூடூத் 5.1,
- ஜிபிஎஸ் (GPS)
- யுஎஸ்பி போர்ட் சி (USB-C port)
- 3.5mm ஆடியோ ஜாக் (audio jack)

ரெட்மி 13C 5ஜி விற்பனை தேதி (Redmi 13C 5G sale date):

இதேபோல், ரெட்மி 13C 5ஜி (Redmi 13C 5G) என்ற ஸ்மார்ட்போன் ரூ.10,999 விலையில் டிசம்பர் 16ம் தேதி முதல் வாங்க கிடைக்கும். மலிவு விலையில் 5ஜி (5G) ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், தாராளமாக இந்த புதிய ரெட்மி 13C 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 13C 4G Goes On Sale Today With 8GB RAM 50MP Triple Camera MediaTek Helio G85 SoC Price and Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X