Home
News

அதிரும் அமேசான்.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ரெட்மி போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?

இந்தியாவில் வரும் டிசம்பர் 6-ம் தேதி ரெட்மி 13சி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவுக்கு வர இருப்பதால் ரெட்மி 12சி ஸ்மார்ட்போனின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 12சி ஸ்மார்ட்போனுக்கு தற்போது 51 சதவீதம் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 12சி போனை ரூ.6,799-க்கு வாங்க முடியும். பின்பு இந்த போனின் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் தற்போது ரூ.8,299-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் இப்போது ரெட்மி 12சி போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ரெட்மி போனுக்கு விலைகுறைப்பு..

6.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 1,650 x 720 பிக்சல்கள் கொண்ட திறனுடன் 20.6:9 விகிதம், 500nits பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 12சி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி போன். அதாவது இந்த போனில் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + இரண்டாம் நிலை QVGA லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 12சி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக 1080பிக்சல் வீடியோ பதிவு செய்யும் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 12சி ஸ்மார்ட்போன் மாடல். இரட்டை சிம் ஆதரவு, Wi-Fi, புளூடூத் 5.1, FM ரேடியோ, 3.5mm ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redmi 12C price cut ahead of Redmi 13C launch: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X