புது போன் எதுவும் வாங்காதீங்க.! பட்ஜெட்ல Redmi 12 வருது! 3 கேமரா பெரிய பேட்டரி! எல்லாமே சூப்பர்!
சியோமி (Xiaomi) இன் துணை பிராண்டான ரெட்மி (Redmi), இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. ரெட்மி நிறுவனம் இந்த மாத இறுதியில் புதிய நம்பர் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக உறுதியாகியுள்ளது.
வரவிருக்கும் புதிய சாதனத்தின் பெயர் குறித்த விபரங்களை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், Xiaomi மற்றும் Redmi அதிகாரிகள் இந்த சாதனத்தை ரெட்மி 12 (Redmi 12) என்ற பெயருடன் குறிப்பிடுகிறார்கள். இந்த போனின் வெளியீட்டைக் குறிக்கும் டீஸர் வீடியோவும் இப்போது வெளியாகியுள்ளது. ரெட்மி இந்தியா ட்விட்டர் கணக்கு வழியாக டீஸர் வீடியோ வெளிவந்துள்ளது.

இந்த டீஸர்கள் ரெட்மி 12 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கிறது. Xiaomi ஏற்கனவே சில உலகளாவிய சந்தைகளில் Redmi 12 போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் 4ஜி இல் இயங்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலாகும். இதன் விலை இந்தியாவில் ரூ.12,000 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Redmi 12 என்ன அம்சங்களுடன் வெளிவரும் என்று பார்க்கலாம் வாங்க.
Redmi 12 ஆனது Xiaomi இன் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் ரூ.15,000 விலைக்குக் கீழ் அறிமுகம் செய்யப்படும். இந்த போன் ஜூலை மாத இறுதிக்குள் அறிமுகமாகும் என தெரிகிறது. சமீபத்திய டீஸர் வீடியோவில், வரவிருக்கும் ரெட்மி 12 போனின் பின்புற பேனல் வடிவமைப்பை காண்பித்துள்ளது. இதில் போனின் டிரிபிள் கேமரா அமைப்பு தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது.
போனின் பின்புறத்தில் மூன்று வட்ட வடிவ கட்அவுட்களை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த ரெட்மி 12 போனில் USB Type-C போர்ட் மற்றும் கீழ் விளிம்பில் ஸ்பீக்கர் கிரில் உள்ளது என்று மற்றொரு லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. டீசர் வீடியோவில் ரெட்மி 12 போனின் போலார் சில்வர் வேரியண்ட் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் மிட்நைட் பிளாக், ஸ்கை ப்ளூ மற்றும் சில்வர் ஆகிய 3 நிறங்களில் வெளிவரும்.

இந்த புதிய Redmi 12 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது 6.79' இன்ச் கொண்ட 2460 x 1080 பிக்சல்கள் உடைய 396 PPI பிக்சல் அடர்த்தியுடன் கூடிய முழு HD+ டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 550 நிட்ஸ் பிரைட்னஸ் 70 சதவீத வண்ண வரம்பையும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இது MediaTek Helio G88 சிப்செட் உடன் Mali-G52 GPU உடன் வருகிறது.
இது 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டிருக்கும். ரெட்மி 12 போன் 4ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் உடன் வருகிறது.
இதன் முன்பக்கத்தில் 8MP கேமரா வழங்கப்பட்டிருக்கும். இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 உடன் இயங்கும். இதன் விலை பற்றி பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் விருப்பம் ரூ.12,000 விலை பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் புது போன் வாங்க விரும்புவோர் இந்த போனிற்காக காத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications








