அடி தூள்:பிரபலமான 5G ஸ்மார்ட்போனுக்கு விலையைக் குறைத்த Redmi.! உடனே முந்துங்கள்.!
ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஒப்போ, விவோ நிறுவனங்களுக்குப் போட்டியாக 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது இந்த ரெட்மி நிறுவனம்.

ரெட்மி 11 பிரைம் 5ஜி
இந்நிலையில் பிரபலமான ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது ரெட்மி நிறுவனம். அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Redmi 11 Prime 5G ஸ்மார்ட்போன் ரூ.13,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6ஜிபி வேரியண்ட்
அதேபோல் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.14,999-விலையில் வாங்கக் கிடைக்கிறது. குரோம் சில்வர் மற்றும் தண்டர் பிளாக், மீடோ கிரீன் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த ரெட்மி 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1,080x2,400 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:7:9 ஆஸ்பெக்ட் ரேஷியோm 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

Dimensity 700 சிப்செட்
ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் 7என்எம் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் உடன் Mali-G57 GPU ஆதரவும் உள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த
ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 5ஜி போன். எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி ஆதரவு
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications