Home
News

ரேம் பூஸ்டர் வசதி, பெரிய டிஸ்ப்ளே, பெரிய பேட்டரியோடு ரூ.10,000 விலையிஸ் ரெட்மி 10ஏ- ஏப்ரல்20 வரை காத்திருங்கள்

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு ஏப்ரல் 20 ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ரேம் பூஸ்டர் அம்சத்தோடு வரும் என டீஸ் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது அமேசானில் விற்பனை செய்யப்படும் எனவும் இதன் விலை ரூ.10,000 என்ற பிரிவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன்

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன்

அமேசானின் மைக்ரோசைட் தகவலின்படி, இந்தியாவில் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது பெரிய டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி அம்சத்தோடு வரும் என டீஸ் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் ரேம் பூஸ்டர் வசதியைக் கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ரெட்மி சாதனம் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இந்த ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி சிப்செட்டை கொண்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

ரெட்மி 10ஏ சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் சமீபத்திய அறிக்கையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ரெட்மி ஸ்மார்ட்போனின் விலையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அமேசானின் மைக்ரோசைட் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் இவோல் வடிவமைப்போடு ரேம் பூஸ்டர் அம்சத்தைக் கொண்டிருக்கும் என டீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்து பார்க்கலாம். ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.10,000 என இருக்கும் என்று டீஸ் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு சேமிப்பக விருப்பங்களில் கிடைக்கும் என தகவல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், ப்ளூ மற்றும் ஆஷ் வண்ண விருப்பங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை தோராயமாக ரூ.8,300 என இருக்கிறது.

ரெட்மி 10ஏ விவரக்குறிப்புகள்

ரெட்மி 10ஏ விவரக்குறிப்புகள்

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது எம்ஐயூஐ 12.5 உடன் ஆண்ட்ராய்டில் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 20:9 என்ற விகிதத்துடன் 6.53 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது (720x1,600 பிக்சல்கள்) தீர்மானத்தை கொண்டிருக்கிறது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி சிப்செட் ஆதரவோடு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. கூடுதலாக இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் மெமரி விரிவாக்க வசதிக்கு 512 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 எம்பி கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் சியோமியின் ஏஐ கேமரா 5.0 உடனான 27 காட்சிகளுக்கான காட்சி அங்கீகாரத்தை பெறும் என தெரிவிக்கப்படுகிறது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என இதன் முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் இதில் நிலையான 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5 மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

Best Mobiles in India

English summary
Redmi 10A Smartphone Set to Launch on April 20 in India With Ram Booster- Expected price, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X