Home
News

ரூ.8,499-க்கு புதிய ஸ்மார்ட்போன்- 64 ஜிபி உள்சேமிப்பு வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி 10ஏ அறிமுகம்!

64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரூ.10,000 விலைப் பிரிவில் ரெட்மி 10ஏ சாதனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது ரெட்மி 9ஏ சாதநத்தின் வாரிசாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன்

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனததின் துணை பிராண்டான ரெட்மி சமீபத்திய மலிவு விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் வாரிசாக இந்த ரெட்மி 10ஏ சாதனம் இருக்கிறது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி சிப்செட் ஆதரவு மற்றும் ஒற்றை 13 எம்பி பின்புற கேமரா என பல ஒற்றுமைகளைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் ரெட்மி 9ஏ சாதனத்தைவிட ரெட்மி 10ஏ பல மேம்பாடு அம்சங்களை கொண்டிருக்கிறது. ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனானது 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆக கிடைக்கும் நிலையில் இந்த ரெட்மி 10ஏ சாதனம் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் என கிடைக்கிறது.

ரெட்மி 10ஏ இந்திய விலை

ரெட்மி 10ஏ இந்திய விலை

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்த விவரங்களை பார்க்கலாம். ரெட்மி 10 ஏ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.8,499 என அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.9499 என கிடைக்கிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது சியோமி இணையதளம் மற்றும் அதிகாரிப்பூர்வ கடைகளில் வாங்குவதற்கு கிடைக்கும். இந்த ரெட்மி 10 ஏ ஸ்மார்ட்போனானது சார்கோல் பிளாக், சீ ப்ளூ மற்றும் ஸ்லேட் க்ரே என்ற வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் பின்புற பேனல் கடினமானதாக இருக்கும் என சியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

செப்டம்பர் 2020 இல் கிடைத்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.6,799 எனவும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.7499 எனவும் கிடைத்தது. ரெட்மி 10ஏ மார்ச் மாத இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி 10 ஏ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.8300 எனவும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.9,500 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.10,700 எனவும் அறிமுகம் செய்யப்பட்டது.

ரெட்மி 10ஏ சிறப்பம்சங்கள்

ரெட்மி 10ஏ சிறப்பம்சங்கள்

ரெட்மி 10ஏ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் இரட்டை நானோ சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு அடிப்படையிலான எம்ஐயூஐ 12.5 மூலம் இயங்குகிறது. இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு கிடைக்கிறது. இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 எம்பி பிரதான கேமரா மற்றும் எல்இடி ஃப்ளாஷ் வசதி இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ரெட்மி 10 ஏ ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

64 ஜிபி உள்சேமிப்பு வசதி

64 ஜிபி உள்சேமிப்பு வசதி

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ரெட்மி 10 ஏ ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டை பயன்படுத்தி மெமரி விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், இந்த சாதனம் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ் ஏஜிபிஎஸ் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் மற்றும் பாதுகாப்பு அம்சத்துக்கு என பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. சியோமி ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Redmi 10A Smartphone Launched in India With 64GB Internal Storage, 5000 mAh Battery and More: Low Price Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X