Home
News

ரூ.8,300-க்கு 128ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்- 5000 எம்ஏச் பேட்டரி, 6ஜிபி ரேம்!

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ஆனது இந்திய மதிப்புப்படி ரூ.8,300 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

மலிவு விலை சாதனமாக ரெட்மி 10ஏ

மலிவு விலை சாதனமாக ரெட்மி 10ஏ

ரெட்மி 10 தொடரில் சமீபத்திய ஸ்மார்ட்போனாக ரெட்மி 10ஏ அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது மலிவு விலை சாதனமாக சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனானது 2020-ல் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9ஏ சாதனத்தின் வாரிசாக இருக்கிறது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது ரெட்மி 9ஏ சாதனத்துக்கு இணையான அம்சங்களை கொண்டிருக்கிறது. அதாவது ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி அம்சம் மற்றும் ஒற்றை 13 எம்பி பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

128 ஜிபி உள்சேமிப்பு வசதி

128 ஜிபி உள்சேமிப்பு வசதி

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் இளம் வாடிக்கையாளர்களை கவருவதற்கு என கூடுதல் அம்சங்களைக் கொண்டிருக்கிறது. காரணம் ரெட்மி 9ஏ சாதனமானது வெறும் 32 ஜிபி சேமிப்பகத்தை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.8,300 என இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக சலுகையாக இதன் விலை ரூ.7,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.9500 ஆக இருக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.10,700 ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்டே இதன் டாப் எண்ட் வேரியண்ட் ஆக இருக்கிறது.

இந்திய அறிமுகம் குறித்த விவரங்கள்

சியோமி நிறுவனம் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனை சீனாவில் ஷேடோ பிளாக், ஸ்மோக் ப்ளூ மற்றும் மூன்லைட் சில்வர் வண்ண விருப்பங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நாட்டில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது எனவும் விற்பனை மார்ச் 31 முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்த விவரங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் ரெட்மி இந்தியா டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து டுவிட் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்னாப்டிராகன் 680 என குறிப்பிடப்பட்டுள்ளதன் காரணத்தால் இந்திய மாறுபாட்டின் வேரிண்ட் வேறுமாதிரியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிசைன்

வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிசைன்

ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம், இந்த ஸ்மார்ட்போனானது இரட்டை நானோ சிம், ஆண்ட்ராய்டு எம்ஐயூஐ 12.5 உடன் இயங்குகிறது. இந்த ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது 6.53 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) தீர்மானத்துடன் வருகிறது. 400 நிட்ஸ் உச்ச பிரகாசம் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிசைன் உடன் வருகிறது. ஹூட்டின் கீழ் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 13 எம்பி கேமரா வசதி இருக்கிறது. அதேபோல் சியோமியின் ஏஐ அங்கீகாரத்துடன் வருகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என ரெட்மி 10ஏ சாதனத்தின் முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு என ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. இதன்மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனில் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 10A Smartphone Launched at Low Price with 128GB internal storage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X