மார்ச் 17 உறுதி: அடுத்த மலிவு விலை ஸ்மார்ட்போன் தயார்- சிறந்த அம்சங்களோடு வருகிறது ரெட்மி 10!
ரெட்மி 10 ஸ்மார்ட்போனானது மார்ச் 17 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ரெட்மி 10 ஸ்மார்ட்ஃபோன்
ரெட்மி 10 ஸ்மார்ட்ஃபோன் மார்ச் 17, அதாவது அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாவோமி இந்தியா இணையதளத்திலும் ரெட்மியின் டிவிட்டர் பக்கத்திலும் இது தொடர்புடைய டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு உலகளவில் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல் மேம்படுத்தப்பட்ட அம்சங்களோடு தற்போது இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

50 மெகாபிக்சல் முதன்மை சென்சார்
ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா, வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இது முந்தைய தலைமுறையை விட இரண்டு மடங்கு வேகமான குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியோடு வருகிறது. ரெட்மி அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் டுவிட்டர் பதிவு மூலம் தகவலை உறுதிப்படுத்தியது. ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் கூடுதல் அம்சங்களை வரும் நாட்களில் வெளியிட வாய்ப்புள்ளது.

பல மாற்றங்களுடன் வரும் என எதிர்பார்ப்பு
கடந்த மாதம் ரெட்மி 10 2022 மாடல் ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரெட்மி 10 ஆரம்ப மாடலின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். ரெட்மி 10 ஸ்மார்ட்போனானது இந்திய சந்தையில் பல மாறுபாடுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி 10 ஸ்மார்ட்போனானது காட்சி, பின்புற கேமரா அமைப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் பல மாற்றங்களுடன் வரும் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ டீசர்கள் மற்றும் இணையதளங்கள் அனைத்தும் இதற்கு உத்தரவாதம் அளிக்கின்றன.

ரெட்மி 10 விலை எதிர்பார்ப்புகள்
இந்தியாவில் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 2020-ல் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் அதே வரிசையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 8,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 10 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 10 பிரைமை விட குறைந்த விலையில் இந்தியாவில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499 ஆக இருக்கிறது.

ரெட்மி 10 விவரக்குறிப்புகள்
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ரெட்மி 10 ஸ்மார்ட்போனானது வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உடன் வருகிறது. இது உலகளவில் வெளியிடப்பட்ட ரெட்மி 10 மற்றும் ரெட்மி 10 2022 மாடல்களுக்கு முற்றிலும் மாறாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு சாதனங்களும் ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 10 மற்றும் ரெட்மி 10 2022 மாடல்கள் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதே போல், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் 6 நானோமீட்டர் ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி இருக்கும் என்று டீஸர்கள் குறிப்பிடுகின்றன.

பின்புற பேனலில் பாதுகாப்பு அம்ச வசதி
டீஸர்களின்படி, ரெட்மி 10 ஆனது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமராவுடன் இந்தியாவில் கிடைக்கும். உலகளாவிய சந்தையில், ரெட்மி 10 மற்றும் ரெட்மி 10 2022 ஆகியவை குவாட் ரியர் கேமராவுடன் வந்தன. அதே நேரத்தில், ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் அனைத்து மாடல்களிலும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராக்கள் உடன் வருகின்றன. மைக்ரோசைட் தகவலின்படி, ரெட்மி 10 ஆனது கடினமான வடிவமைப்புடன் ஸ்மட்ஜ் இல்லாத பூச்சு வடிவமைப்போடு இந்தியாவில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் அதிக சேமிப்பு, பெரிய பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. அதேபோல் இந்த சாதனம் பிரமாண்ட காட்சி வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் பாதுகாப்பு அம்சத்துக்கு என கைரேகை ஸ்கேனர் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications