இதான் சார் ரெட்மி: குறைந்த விலையில் 50 எம்பி கேமரா, 6ஜிபி ரேம் உடன் ரெட்மி 10 ஸ்மார்ட்போன்!

|

ரெட்மி நோட் தொடர் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் தொடர்களில் ஒன்றாகும். இந்திய சந்தைகளை ஆக்கிரமித்து இருக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் சியோமிக்கு பெரும் பங்கு உண்டு. சியோமி நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கும் வாடிக்கையாளர்களிடையே கிடைக்கும் வரவேற்புக்கும் காரணம் குறைந்த விலையில் சிறந்த அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை வழங்குவது ஆகும்.

ரெட்மி 10 ஸ்மார்ட்போன்

ரெட்மி 10 ஸ்மார்ட்போன்

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் தொடருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த தொடரில் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வரிசையில் நிறுவனம் ரெட்மி 10 ஸ்மார்ட்போனை சற்று குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. டிப்ஸ்டர் முகுல் சர்மா வெளியிட்ட தகவல்படி இந்த சாதனம் என்பிடிசி சான்றிதழ் இணையதளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை வெளிப்படுத்தினார்.

என்பிடிசி சான்றிதழ் இணையதளம்

என்பிடிசி சான்றிதழ் இணையதளம்

இந்த ஸ்மார்ட்போன் என்பிடிசி சான்றிதழ் இணையதளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்த சாதனம் முதல்முறையாக தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

ரெட்மி 10 அறிமுகம் செய்யப்படும்

ரெட்மி 10 அறிமுகம் செய்யப்படும்

கடந்த ஆண்டு ரெட்மி நோட் 9 சீரிஸை அறிமுகப்படுத்திய பிறகு நிறுவனம் ரெட்மி 9 தொடரை அறிமுகம் செய்தது. இந்த சாதனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது ஆதிக்கத்தை செலுத்த பெரிதளவு உதவியது. அதேபோல் தற்போது ரெட்மி நோட் 10 சீரிஸை அடுத்து ரெட்மி 10 அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மலிவான சாதனமாக வெளியாகும்

மலிவான சாதனமாக வெளியாகும்

ரெட்மி 9 ஸ்மார்ட்போனை போன்றே ரெட்மி 10 ஸ்மார்ட்போனும் மலிவான சாதனமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 சாதனத்தைவிட மலிவான ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. மாடல் எண் 21061119AG-ன் கீழ் NBTC சான்றிதழ் இணையதளத்தில் Redmi 10 காணப்பட்டது. வலைதளத்தின் சான்றிதழ் மூலம் சாதனம் என்ன என்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த சாதனம் விரைவில் தாய்லாந்து சந்தைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. ரெட்மி 10-ன் அறிக்கைகள் வெளியாவது இது முதன்முறையல்ல, இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் முன்பே இ-காமர்ஸ் தளத்தில் காணப்பட்டுள்ளன.

ரெட்மி 10 அம்சங்கள்

ரெட்மி 10 அம்சங்கள்

ரெட்மி 10 அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் எனவும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வரும் எனவும் இது மீடியா டெக் ஹீலியோ ஜி88 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் சக்தி வாய்ந்த சாதனமாக இது இருக்கும்.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

அதேபோல் ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் இ-காமர்ஸ் இணையதளம் மூலம் கசிந்தன. சாதனத்தில் முதன்மை கேமராக 50 எம்பி சென்சார் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் இரட்டை 2 மெகாபிக்ச்ல கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த கேமராக்கள் எந்த மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் என்பதற்கு எந்த தகவலும் இல்லை. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் வீடியோ அழைப்புகளுக்கு என 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூற்பபடுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. சியோமி ரெட்மியின் சமீப சாதனம் போன்றே இதுவும் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எம்ஐயூஐ மூலம் இயக்கப்படும் எனவும் இந்தியாவில் ரெட்மி போன்கள் புகழ் பெற்ற நிலையில் இருப்பதால் தாய்லாந்து சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Redmi 10 Smartphone May Launching With 50Mp Primary Camera, 6GB Ram and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X