Google Pay, PhonePe கதை முடிஞ்சது.. புதுப்புது வசதிகளுடன் RediffPay.. Axis வங்கி ஆதரவுடன் புதிய UPI சேவை!
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் இந்திய யுபிஐ (UPI) சந்தைக்குள் தைரியமாக நுழைகிறது இன்ஃபிபீம் அவன்யூஸின் (Infibeam Avenues) துணை நிறுவனமான ரெடிஃப்பே (RediffPay). இது நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ரெடிஃப்.காம் (Rediff.com) நிறுவனமானது, என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்திடமிருந்து (National Payments Corporation of India) இருந்து, இந்தியாவிற்கான தேர்ட் பார்ட்டி தரப்பு அப்ளிகேஷன் ப்ரொவைடர் (Third Party Application Provider - TPAP) உரிமத்தை பெற்றுள்ளது.

ரெடிஃப்.காம் வழியாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ரெடிஃப்பே-வின் யுபிஐ சேவைக்கு ஆக்சிஸ் வங்கி ஆனது பேமெண்ட் சிஸ்டம் வழங்குநர் (Payment System Provider) பேங்க் ஆக செயல்படும். மேலும் இது பயனர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கிரெடிட் மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் தயாரிப்புகள் உட்பட பலவிதமான புதிய நிதி சேவைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
ரெடிஃப்பே ஆனது ரெடிஃப்,காம் வலைத்தளத்தின் கணிசமான வெப் டிராபிஃக்கையும், இன்ஃபிபீம் அவன்யூஸின் ஃபின்டெக் நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி, நாம் எதிர்பார்ப்பதை விட வேகமான வளர்ச்சி மற்றும் பிரபலத்தன்மையை அடையும் என்றும், இது பாதுகாப்பான மற்றும் திறமையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான யூசர் பிரென்டலி பிளாட்ஃபார்மை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
ரெடிஃப்ஒன் (RediffOne) அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெடிஃப்ஒன் மற்றும் ரெடிஃப்பே ஆகிய இரண்டும் எங்களுடைய பயணத்தின் முக்கிய தூண்கள் ஆகும் மற்றும் அளவிடக்கூடிய, உயர்-வளர்ச்சி எதிர்காலத்திற்கான களத்தை அமைக்கின்றன. மேலும் ரெடிஃப் வழியாக எங்கள் வருவாயில் 2-4 சதவீத பங்களிப்பை எதிர்பார்க்கிறோம், வரவிருக்கும் ஆண்டுகளில் இது 10% ஆக வளர வாய்ப்புள்ளது என்று விஷால் மேத்தா (நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்) கூறியுள்ளார்.
ரெடிஃப்பே-வின் நுழைவு ஒருபக்கம் இருக்க, ஃபின்டெக் நிறுவனமான போன்பே (PhonePe) ஆனது, ஏஏ (AA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தனது அக்கவுண்ட் அக்ரிகேட்டர் (Account Aggregator) வணிகத்தில் இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் அதன் என்பிஎப்சி-ஏஏ உரிமத்தை (NBFC-AA License) இந்திய ரிசர்வ் வங்கியிடம் (Reserve Bank of India - RBI) ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
போன்பே நிறுவனமானது, - துணை நிறுவனமான போன்பே டெக்னாலஜி சர்வீசஸ் (PhonePe Technology Services - PTSPL) மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டில் தான் அதன் ஏஏ சேவைகளை அறிமுகப்படுத்தியது. 2 ஆண்டுகளில் அதன் ஏஏ தளத்தில் வெறும் சுமார் 50 மில்லியன் வாடிக்கையாளர்களை பதிவு செய்தது.
இருப்பினும் போட்டித்தன்மை காரணமாக, நாங்கள் விரும்பும் அளவிற்கு ஃபைனான்ஷியல் இன்ஃபர்மேஷன் ப்ரொவைடர்களை (Financial information providers) எங்கள் தளத்திற்கு இணைக்க முடியவில்லை என்று போன்பே நிறுவனம் வெளிப்படையாக கூறியுள்ளது. இந்த முடிவு போன்பே ஏஏ தளத்தில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் போன்பே நிறுவனம் கூறியுள்ளது.
ஏஏ உரிமமானது, நிறுவனங்கள் தங்கள் ஒப்புதலுடன் பயனர்களின் நிதி சார்ந்த தகவலை (financial information of users) பெறவும்.. லோன், கிரெடிட் கார்டு (Loan, credit card) போன்ற நிதி சேவைகளை வழங்குவதற்காக அந்த தகவல்களை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.
2023 ஆம் ஆண்டில் ஏஏ பிஸ்னஸில் அதிக எணிக்கையிலான நிறுவனங்கள் அல்லது போட்டியாளர்கள் இல்லாதபோது போன்பே நிறுவனம் அதன் ஏஏ உரிமத்தை பெற்றது. ஆனால் இப்போது அப்படி இல்லை. தனது உரிமத்தை ஆர்பிஐ-யிடம் ஒப்படைக்க உள்ள நிலையில், இந்தியாவில் நிதிச்சேர்க்கைக்கு ஏஏ சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சி முக்கியமானது என்று போன்பே நிறுவனம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








