வாட்ஸ்அப்பில் பஸ் டிக்கெட் புக்கிங்.. ஊரு பேர தட்டுனா போதும்.. E-Ticket அனுப்பும் ரெட்பஸ்!
இந்தியாவில் எந்த மாநிலத்துக்கு செல்ல வேண்டுமானாலும் சரி, எந்த மாவட்டத்துக்கு செல்ல வேண்டுமானாலும் சரி, உங்களிடம் வாஸ்ட்அப் (WhatsApp) இருந்தால் மட்டும் போதும், 24 மணி நேரமும் பஸ் டிக்கெட் புக் செய்து கொள்ள முடியும். இதுகுறித்த முழு விவரம் இதோ.
இப்போதெல்லாம், வெளி மாநிலங்கள் அல்லது வெளி மாவட்டங்களுக்கு செல்ல யாரும் பேருந்து நிலையத்துக்கு சென்று டிக்கெட் எடுப்பதில்லை. ரெட்பஸ் (redBus), அபிபஸ் (AbhiBus) போன்ற ஆப்கள் மூலமே இருக்கும் இடத்தில் இருந்து புக் செய்து விடுகின்றனர். இருப்பினும், பலருக்கு அதுபோன்ற ஆப்களை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறது.

இவர்களுக்காகவே ரெட்பஸ் நிறுவனம் வாஸ்ட்அப் மூலம் டிக்கெட் புக் செய்யும் பிரத்யேக அம்சத்தை கொண்டுவந்துள்ளது. ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப தெரிந்தால் மட்டுமே போதும், அவர்களால் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ள முடியும். இந்த புதிய அம்சத்துக்கு ரெட்பஸ் வாட்ஸ்அப் சாட்பாட் (redBus WhatsApp Chatbot) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அம்சம் குறித்து, ரெட்பஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி மனோஜ் அகர்வால் கூறுகையில், "எங்களது வாடிக்கையாளர்கள் மட்டுமல்லால், யார் வேண்டுமானாலும் இந்த அம்சம் மூலம் சில நிமிடங்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி பஸ் டிக்கெட்டை புக் செய்து கொள்ள முடியும். உங்களது விவரங்களை மேசேஜ் செய்தால் மட்டுமே போதும், இ-டிக்கெட்டை பெற்று கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், 24 மணி நேர கஸ்டமர் சப்போர்ட்டும் வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி? முதலில் ரெட்பஸ் நிறுவனத்தின் வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) மொபைல் நம்பரை (8904250777) உங்களது காண்டாக்ட் லிஸ்டில் சேமித்து கொள்ளுங்கள். அதன்பின் வாட்ஸ்அப்பை திறந்து, அந்த நம்பருக்கு ஹாய் (Hi) என்று மெசேஜ் அனுப்புங்கள்.
இந்த மெசேஜ் அனுப்பப்பட்ட உடன் உங்களுக்கு பதில் அளிக்கப்படும். அதில், மொழியை தேர்வு செய்யக் கோரி ஆங்கிலம் (English) அல்லது இந்தி (Hindi) மொழிகள் இடம்பெற்றிருக்கும். அதில் விருப்பான மொழியை தேர்வு செய்த பின்பு டிக்கெட்டை புக் செய்யலாம். அதாவது, நீங்கள் ஆங்கில மொழியை தேர்வு செய்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அதன்பின் உங்களுக்கு புக் பஸ் டிக்கட் (Book Bus Ticket) என்னும் ஆப்சன் தோன்றும். அதை கிளிக் செய்தால், உங்களது லோகேஷனை வெரிஃபை செய்யவதற்கு அனுமதி கேட்கப்படும். அதற்கு அனுமதி கொடுத்தால், எந்த தேதியில் செல்கிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும்.
இந்தத் தகவலையும் கொடுத்தால், ஏசி (AC) மற்றும் ஏசி அல்லாத (NON AC) பேருந்துகளின் பட்டியல் உங்களுக்கு தோன்றும். அதில் அந்த பேருந்து புறப்படும் நேரம் மற்றும் இடம், சென்று சேரும் இடம் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த பேருந்துகளில் உங்களது பட்ஜெட்டுக்கும், நேரத்துக்கும் ஏற்ப இருக்கும் பேருந்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
இப்போது, பேமெண்ட் (Payment) பக்கம் உங்களுக்கு தோன்றும். அதில் கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe) போன்ற பணப்பரிவர்த்தை ஆப்கள் முதல் வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் ஆன்லைன் பேங்கிங் வரையில் பயன்படுத்தி பணம் செலுத்திக் கொள்ளலாம்.
பணம் செலுத்தப்பட்ட பின்பு, உங்களது பெயர், பேருந்து புறப்படும் இடம் மற்றும் நேரம், டிக்கெட் விலை விவரங்கள் ஆகியவை குறிப்பிடப்பட்ட இ-டிக்கெட் (e-ticket) வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கப்படும். அதை காண்பித்தாலே பேருந்தில் அனுமதி வழங்கப்படும். இதுமட்டுமல்லால், டிக்கெட் கேன்சலிங், பஸ் டிராக்கிங் அம்சங்களும் இந்த வாட்ஸ்அப் சாட்பாடில் கொடுக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








