ஸ்மார்ட்போன் டிஸ்பிளே.. பிரீமியம் தரத்தில் Red Magic கேம்பேட்.. இனி கேம்ஸ் இப்படி தான் விளையாடனும்..
ரெட் மேஜிக் (Red Magic) நிறுவனம் சமீபத்தில் ரெட் மேஜிக் 9 சீரிஸ் (Red Magic 9 Series Smartphone) போனுடன் ரெட் மேஜிக் ஷடோவ் பிளேடு 2 கேம்பேட் (Shadow Blade 2 Gamepad) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்தது.
இதனை தொடர்ந்து, தற்போது ரெட் மேஜிக் நிறுவனம், அதன் ரெட் மேஜிக் ஷடோவ் பிளேடு 2 கேம்பேட் (Red Magic Shadow Blade 2 Gamepad) சாதனத்தை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம். நீங்கள் ஒரு கேமர் (gamer) அல்லது கேம் பிரியர் என்றால், கட்டாயம் இந்த கேம்பேட் சாதனத்தை வாங்கலாம்.

இந்த புதிய Red Magic Shadow Blade 2 Gamepad டிவைஸ் ALPS லெப்ட் ஸ்டிக் (ALPS left stick), கிராஸ் பட்டன் (cross buttons), ஸ்க்ரீன்ஷாட் கீ (screenshot key), ரெட் மேஜிக் பட்டன் (Red Magic button), ALPS ரைட் ஸ்டிக் (ALPS right stick), மற்றும் RT கீஸ் (RT key) போன்றவற்றுடன் வருகிறது.
ரெட் மேஜிக் ஷடோவ் பிளேடு 2 கேம்பேட் (Red Magic Shadow Blade 2 Gamepad):
இந்த கேம்பேட் பின்னணியில் 256 லேயர் மாறும் லீனியர் ட்ரிக்கர்ஸ் (linear triggers) வழங்கப்பட்டுள்ளது. இது 0.1mm ரெஸ்பாஸ் நேரத்தை (response interval time) ஆதரிக்கிறது. ரெட் மேஜிக் நிறுவனத்தின் தகவல் படி, இது பிளேக்சிபில் (flexible), ஸ்மூத் (smooth) மற்றும் ஈஸி கண்ட்ரோல் (easy to control) அனுபவத்தை செல்ப் டெவலப்மென்ட் IC மூலம் வழங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ரெட் மேஜிக் ஷடோவ் பிளேடு 2 கேம்பேட் (Red Magic Shadow Blade 2 Gamepad) கேம்பேட் சாதனம் Type-C போர்ட் உடன் வருகிறது. இது ஜீரோ லேடன்சி உடன் கேமிங் அனுபவத்தை சிறப்பிக்க செய்கிறது. இது 2 கஸ்டம் பேக் ட்ரிக்கர் கிரிப்களை கொண்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள Type-C போர்ட் 110 முதல் 185mm அட்ஜஸ்ட்மென்ட் வசதியுடன் வருகிறது.

இந்த பிரத்தியேக அட்ஜஸ்ட்மென்ட் மூலம் ஏராளமான ஸ்மார்ட்போன் சாதனங்களுடன் இந்த கேம்பேட் டிவைஸ் இணக்கமாகிறது. தெரியாதவர்களுக்கு, உங்கள் போனில் உள்ள Type-C சார்ஜிங் போர்ட்டை இந்த டிவைஸ் உடன் இணைப்பதன் மூலம், இந்த கேம்பேட் சாதனத்தை பயன்படுத்தலாம். இந்த Type-C போர்ட் உடன் இணைக்கும் பொழுது உங்கள் சாதனமும் சார்ஜ் செய்யப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.
Red Magic Shadow Blade 2 Gamepad விலை என்ன?
கேம்பேட்டை நீங்கள் சார்ஜ் செய்யும் பொழுது, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போனும் சார்ஜ் செய்யப்படுகிறது. இறுதியாக இந்த Red Magic Shadow Blade 2 Gamepad சாதனம் மாற்ற கூடிய லெப்ட் மற்றும் ரைட் கேம்பேட் ஷெல்களை ஆதரிக்கிறது. இதன் விலை பற்றி பேசுகையில், உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பல விலை பிரிவில் இது விற்பனைக்கு வந்துள்ளது.
இந்திய மதிப்பின் படி, இந்த Red Magic Shadow Blade 2 Gamepad சாதனம் ரூ.7000 விலை புள்ளியில் விற்பனைக்கு வந்துள்ளது, இது பிளாக் நிறத்தில் மட்டும் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது ரெட் மேஜிக் பிராண்டின் வலைப்பக்கம் வழியாக ஆர்டர் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








