Home
News

வாங்குனா இந்த கேமிங் போனை மட்டும் தான் வாங்கணும்.. Red Magic 9 Pro வின் தெறிக்கவிட்ட ஸ்பெக்ஸ்.. என்ன விலை?

சீனாவில் ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) தொடர் கேமிங் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் 2 ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இவற்றின் விலை மற்றும் சிறப்பம்ச தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ரெட் மேஜிக் 9 ப்ரோ சீரிஸ் இன் கீழ் ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) மற்றும் ரெட் மேஜிக் 9 ப்ரோ பிளஸ் (Red Magic 9 Pro+) என 2 புதிய மாடல்களை நிறுவனம் இப்போது அறிமும் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் டார்க் நைட் (Dark Knight) நிறத்தில் வருகிறது.

Red Magic 9 Pro: வாங்குனா இந்த கேமிங் போனை மட்டும் தான் வாங்கணும்..

அதேபோல், இவை ட்ரான்ஸ்பரென்ட் மாடலாக டியூட்டிரியம் ஃப்ரண்ட் டிரான்ஸ்பரன்ட் டார்க் நைட் (Deuterium Front Transparent Dark Night) மற்றும் டியூட்டிரியம் ஃப்ரண்ட் டிரான்ஸ்பரண்ட் சில்வர் விங்ஸ் (Deuterium Front Transparent Silver Wings) என்று மொத்தம் 3 விதியசமான நிறங்களில் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் இந்த முறை பன்ச்-ஹோல் அல்லது கேமரா கட்டவுட் என்று எதுவுமே வைக்கப்படவில்லை.

உலகின் முதல் அண்டர்-டிஸ்பிளே கேமிங் போன் (World's first under screen display gaming phone):

இது ஒரு முழு டிஸ்பிளே ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்பி கேமரா இன்-டிஸ்பிளே கேமராவாக இடம்பெற்றுள்ளது. இந்த போனின் டிஸ்பிளே 6.8' இன்ச் 2480 x 1116 தெளிவுத்திறன் கொண்ட முழுத்திரை AMOLED டிஸ்ப்ளேவாக வருகிறது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட், 2160Hz அல்ட்ரா-ஃபிரிக்வேன்சி PWM டிம்மிங், DCI-P3 வண்ண வரம்பின் முழு கவரேஜையும் கொண்டுள்ளது. இது HDR10+ ஐ ஆதரிக்கிறது.

இந்த ஃபோன்கள் அண்டர்-டிஸ்ப்ளே கேமராவுடன் வருகின்றன, இது BOE இன் கீழ் அண்டர்-டிஸ்பிளே Q9+ ஒளிரும் பொருளால் மூடப்பட்டிருக்கிறது. இது கேமராவை மறைகிறது. இந்த சாதனம் LPDDR5X RAM மற்றும் UFS4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட்டை கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப் (Snapdragon 8 Gen 3 SoC):

இதில் 10,182mm² வேப்பர் சேம்பர் அறை, ஒரு புதிய அலாய் ஃபேன் + வாட்டர்பால் ஏர் டக்ட் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப் மூலம் உருவாக்கப்படும் வெப்பத்தை 25 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க இது உதவுகிறது. இதில் CUBE எனர்ஜி எஞ்சின் உள்ளது. இந்த போன் ரெட் கோர் ஆர்2 ப்ரோ என அழைக்கப்படும் ரெட் மேஜிக்கின் இன்-ஹவுஸ் கேம் சிப்பை உள்ளடக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Red Magic 9 Pro தொடர் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான REDMAGIC OS 9.0 உடன் வருகிறது. புதிய OS உடன் வரும் ஒரு முக்கிய அம்சம் X Gravity 2.0 மென்பொருளாகும். இது கன்ட்ரோலர் அல்லது கீபோர்டு போன்ற வெளிப்புற சாதனங்களை தடையற்ற மேப்பிங்கிற்குப் பயன்படுத்த அனுமதிக்கிறது. Red Magic 9 Pro ஆனது 6500mAh பேட்டரி + 80W ஃபாஸ்ட் சார்ஜ் உடன் வருகிறது.

165W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் (165W Ultra Fast Flash Charging):

இது சாதனத்தை 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும். ரெட் மேஜிக் 9 ப்ரோ+, மறுபுறம், 5500mAh பேட்டரி + 165W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்குடன் வருகிறது. இது வெறும் 16 நிமிடங்களில் முழு சார்ஜை வழங்குகிறது. இரண்டு மாடல்களும் USB 3.2 gen2 மற்றும் TYPE-C போர்ட்டை ஆதரிக்கின்றன. கேமிங்கிற்கான 520Hz டச் ஷோல்டர் பட்டன்கள், மேஜிக் சவுண்ட் ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளது.

3 இன்பில்ட் மைக்குகள், Wi-Fi 7, IR ரிமோட் கண்ட்ரோல், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் NFC ஆகியவை உள்வரும் மற்ற அம்சங்களில் அடங்கும். இது 50 மெகாபிக்சல் OIS உடன் வருகிறது. ரெட் மேஜிக் 9 ப்ரோ சீரிஸ் 50 மெகாபிக்சல் JN1 அல்ட்ரா-வைட் சென்சார் கொண்டுள்ளது. சுவாரஸ்யமாக, சில காரணங்களுக்காக 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸும் சேர்க்கப்பட்டுள்ளது.

Red Magic 9 Pro போன்களின் விலை என்ன (Red Magic 9 Pro and Red Magic 9 Pro+ Price)?

Red Magic 9 Pro சாதனம் 8ஜிபி/256ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 51650 விலையில் வருகிறது. இதன் 16ஜிபி/256 ஜிபி மாடல் Red Magic 9 Pro+ விலை 64563 ஆகிறது. இது 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வ விற்பனை தொடங்குவதால், அனைத்து தளங்களிலும் முன் விற்பனை உடனடியாக தொடங்கும்.

Best Mobiles in India

English summary
Red Magic 9 Pro and Red Magic 9 Pro Plus Launched With Full Screen Display Snapdragon 8 Gen 3 SoC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X