Red Magic 8 Pro Plus Transformers Edition: பயமே அறியாத வீரர்களுக்கான போன் இதான்! ஆட்டோபாட்ஸ் ரோல்!
இந்த ஸ்மார்ட்போனை பார்த்தாலே ஒரு கெத்து வருது.. அப்படியே மீசையை முறுக்கிவிட்டு, இந்த போன்ன கைல பிடிச்சா, செம தோரணையா தான் இருக்கும் போல என்று நம்மை உணர வைக்கிறது ரெட் மேஜிக் 8 ப்ரோ ப்ளஸ் டிரான்ஸ்ஃபார்மர் எடிஷன் சாதனம்.
கெத்தான தோற்றத்தில், செம ஸ்பெக்ஸ் உடன் ஒரு அற்புதமான ஸ்மார்ட்போனை வாங்க உங்களுக்கு விருப்பமா? அப்போ, இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் நழுவ விடக் கூடாது. Red Magic 8 Pro Plus Transformers Edition சாதனம் இப்போது உலக சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதை வாங்க 1 அல்ல, 2 அல்ல, பல காரணங்கள் இருக்கிறது. அது என்ன என்று பார்க்கலாம் வாங்க.

கிஸ்டாப் (Giztop) ஆனது ரெட் மேஜிக் 8 ப்ரோ பிளஸ் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் எடிஷன் மாடல் ஸ்மார்ட்போனை வெறும் $1199 என்ற விலைக்கு அனைத்து உலகளாவிய நுகர்வோருக்கும் வழங்குகிறது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 98,529 என்ற விலையை நெருங்குகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் கேமர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் என்பதனால், குறைந்த அளவு எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வாங்க கிடைக்கும்.
அதாவது, குறைந்த ஸ்பெஷல் எடிஷன் யூனிட்களை மட்டுமே வடிக்கையாளர்களால் வாங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான கேமிங் ஃபோனைப் பெறுவதற்கான வாய்ப்பு இப்போது சிறப்பாக இருக்கிறது என்பதனால், நல்ல வாய்ப்பை தவறவிடாதீர்கள். Red Magic 8 Pro Plus Transformers எடிஷன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது 6.8' இன்ச் AMOLED FHD+ கேமிங் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தை ஆதரிக்கிறது. இந்த டிஸ்ப்ளே SGS லோ-ப்ளூ லைட் கேர் சான்றிதழுடன் வருகிறது. இது நீண்ட நேரம் பார்ப்பதற்கு ஏற்றதாக அமைகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் சமீபத்திய Snapdragon 8 Gen 2 ஆக்டா கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த கேமிங் ஸ்மார்ட்போன் 16ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 512 ஜிபி UFS 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
பின்புறத்தில், 50MP பிரைமரி கேமரா மற்றும் 8MP + 2MP செகண்டரி கேமராக்கள் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக இதன் முன்பக்கத்தில், 16MP சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் 165W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 13 OS அடிப்படையிலான RedMagic OS 6.0 இல் இயங்குகிறது.

ரெட் மேஜிக் 8 ப்ரோ பிளஸ் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் எடிஷன் கேமிங் ஆர்வலர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அழகான ப்ளூ மற்றும் ரெட் நிற ஆப்டிமஸ் பிரைம் தீம் உடன் வருகிறது. சமீபத்திய ICE 11.0, 9 அடுக்குகள் கொண்ட சூப்பர் கூலிங் சிஸ்டம் உடன் வருகிறது. இது அதிக ஆக்ஷன்-பேக் கேம்ப்ளேயின் போது உங்கள் வெப்பத்தை குறைவாக வைத்திருக்க அனுமதிக்கிறது இதில் அல்ட்ரா-லீனியர் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளது.
இது 96kHz லாஸ்லெஸ் ஆடியோ மற்றும் 48ms லோ-லேடன்சி, டூயல் IC டச் கேமிங் ஷோல்டர் கீகள், 4D கேம் ஷாக் அம்சம் போன்றவை மற்ற சுவாரஸ்யமான அம்சங்களுடன் வருகிறது. சிறந்த கேமிங் போனை வாங்க விரும்புபவர்கள், இந்த Red Magic 8 Pro Plus Transformers எடிஷன் ஸ்மார்ட்போன் சாதனை உடனே வாங்கலாம்..


Click it and Unblock the Notifications








