உண்மையாவே மேஜிக் தான்: 18 ஜிபி ரேம் உடன் Red Magic 7S, 7S Pro- பேரு முக்கியமில்ல தரம் தான்!

|

Red Magic 7S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அதிகாரப்பூர்வமாக நுபியா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில் இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. அது ரெட் மேஜிக் 7எஸ் மற்றும் ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோ ஆகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட் மேஜிக் 7 தொடரின் வாரிசு ஸ்மார்ட்போன்கள் இதுவாகும். மேஜிக் எனும் குறிப்பிடும் அளவு என்ன அம்சங்கள் இருக்கிறது என பார்க்கலாம்.

கேமர்களை ஈர்க்கும் வகையில் பிரத்யேக வடிவமைப்பு

கேமர்களை ஈர்க்கும் வகையில் பிரத்யேக வடிவமைப்பு

சமீபத்திய ரெட் மேஜிக் 7எஸ் தொடர் ஆனது முந்தைய மாடல்களை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. தி ரெட் மேஜிக் 7எஸ் மற்றும் 7எஸ் ப்ரோ ஆகியவை கேமர்களை ஈர்க்கும் வகையில் பிரத்யேக வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. காரணம் அதிக கிராஃபிக்ஸ் அம்சங்களுடன் கூடிய கேம்களின் அழுத்தத்தை தாங்கும் திறன் இதில் இருக்கிறது.

பிரத்யேகமான ICE மேஜிக் கூலிங் சிஸ்டம்

பிரத்யேகமான ICE மேஜிக் கூலிங் சிஸ்டம்

ரெட் மேஜிக் 7எஸ் ஆனது செங்குத்தான பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 7எஸ் ப்ரோ ஆனது சதுர கேமரா அமைப்பை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேகமாக பிராண்டின் ICE மேஜிக் கூலிங் சிஸ்டம் பதிப்பு 9.0 பொருத்தப்பட்டுள்ளது. இது ஒன்பது அடுக்கு குளிரூட்டும் ஆதரவைக் கொண்டுள்ளது.

Red Magic 7S சிறப்பம்சங்கள்

Red Magic 7S சிறப்பம்சங்கள்

Red Magic 7S சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.8 இன்ச் AMOLED முழு HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 167Hz வரையிலான மிகப்பெரிய புதுப்பிப்பு வீதத்துடன் 720Hz டச் விகிதத்தையும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது சமீபத்திய மற்றும் மேம்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதுமட்டுமல்ல அனைத்தும் மேம்பட்ட அம்சங்கள் தான்.

ஒவ்வொன்றும் மேம்பட்ட ஆதரவு

ஒவ்வொன்றும் மேம்பட்ட ஆதரவு

Red Magic 7S ஸ்மார்ட்போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. டிடிஎஸ் ஆதரவோடு கூடிய டூயல் ஸ்பீக்கர்கள், டிரிபிள் கேமிங் மைக்குகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. Nubia Red Magic 7S ஸ்மார்ட்போனானது 64 எம்பி முதன்மை கேமராவுடன் 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 8 எம்பி ஷூட்டர் இதில் உள்ளது. 120W ஏர் கூல் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4500 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Red Magic 7S Pro சிறப்பம்சங்கள்

Red Magic 7S Pro சிறப்பம்சங்கள்

Red Magic 7S Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.8 இன்ச் AMOLED முழு HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே நிலையான 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேகமான Red Magic X Qualcomm LTM டிம்மிங் தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 18 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி நேட்டிவ் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது.

135W ஏர்-கூல்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

135W ஏர்-கூல்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது அதே 7எஸ் கேமரா அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆனால் முன்புற கேமராவை பொறுத்தவரை இதில் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த செல்பி கேமரா திரையின் கீழ்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 135W ஏர்-கூல்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Red Magic 7S, 7S Pro விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Red Magic 7S, 7S Pro விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Nubia Red Magic 7S ஆனது CNY 3,999 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.47,400 ஆகும். ரெட் மேஜிக் 7S Pro ஸ்மார்ட்போனின் விலை CNY 5,199 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.61,600 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் மாடல்களானது ஒற்றை டார்க் நைட் வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய ரெட் மேஜிக் ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய கிடைக்கும் தன்மையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

Best Mobiles in India

English summary
Red Magic 7S, 7S Pro Launched by Nubia With 18GB RAM, 135W Air Cooled Fast Charging

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X