சூப்பர் பவர்ஃபுல் போன்.. அண்டர் டிஸ்பிளே Camera.. 6500mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்.. எந்த மாடல்?
நுபியா (Nubia) நிறுவனம் அதன் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலான அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடல் நுபியாவின் ரெட் மேஜிக் 10 ப்ரோ (Red Magic 10 Pro) ஸ்மார்ட்போன் சாதனமாக இருக்குமென்று MIIT லீக் தகவல்கள் குறிப்பிடுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சக்தி வாய்ந்த பல அம்சங்களுடன் வருகிறது என்றாலும், இதில் குறிப்பிட்டு கூறும்படி, இந்த புதிய Red Magic 10 Pro சாதனம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகனின் புதிய சக்தி வாய்ந்த சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது.
நுபியா நிறுவனம், கடந்த ஆண்டு ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) ஸ்மார்ட்போன் சாதனத்தை NX789J என்ற மாடல் எண்ணுடன் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நடுவே, Nubia நிறுவனம் சீனாவில் உள்ள MIIT அனுமதியை தற்போதுப் பெற்றுள்ளது. இந்த புதிய அனுமதி பெற்ற சாதனம் NX789J மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்புடன் நுபியா ரெட் மேஜிக் 10 ப்ரோ (Nubia ரெட் மேஜிக் 10 ப்ரோ):
இந்த மாடல் எண்ணுடன் காணப்படும் சாதனம் Red Magic 10 Pro ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. நுபியா ரெட் மேஜிக் 10 ப்ரோ (Nubia ரெட் மேஜிக் 10 ப்ரோ) MIIT சான்றிதழ் அதன் விவரக்குறிப்புகள் பற்றி குறிப்பிடத்தக்க எதையும் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், இது விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அநேகமாக, இது சீனாவில் அடுத்த மாதம் நவம்பர் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும்.
இந்த போனில் ஸ்னாப்டிராகன் 9 எலைட் சிப்செட் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. Xiaomi 15 சீரிஸ், OnePlus 13, Honor Magic 7 series, iQOO 13 மற்றும் Realme GT 7 Pro ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களில் இந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், ரெட் மேஜிக் 10 ப்ரோ, கூறப்பட்ட சிப்செட் மூலம் இயக்கப்படும் முற்றிலும் கேமிங்கை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும். அறிக்கைகளின்படி, ரெட் மேஜிக் 10 ப்ரோ ஒரு சுயாதீன கேமிங் சிப், ஒருங்கிணைந்த ஆக்டிவ் கூலிங் சிஸ்டம் மற்றும் பிரத்யேக கேமிங் பட்டன்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6500mAh-க்கும் அதிகமான பேட்டரியுடன் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.
OLED டிஸ்பிளேவுடன் அண்டர் டிஸ்பிளே கேமரா:
ஸ்னாப்டிராகன் 8 எலைட் கொண்ட மிகப்பெரிய பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலாக இந்த ரெட் மேஜிக் 10 ப்ரோ மாறும் என கூறப்படுகிறது. Red Magic 10 Pro ஆனது 1.5K தெளிவுத்திறன் கொண்ட OLED முழுத்திரை டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இதை முழுத்திரை என்று கூற காரணம் இருக்கிறது மக்களே. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் எந்தவித நாட்ச் மற்றும் கேமரா துளைகளை உங்களால் பார்க்க முடியாது.
இது முன்பக்க கேமராவை அண்டர்-டிஸ்ப்ளே கேமராவாக வழங்குகிறது. ரெட் மேஜிக் 10 ப்ரோ அதன் முன்னோடியான ரெட் மேஜிக் 9 ப்ரோ தொடருடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும் என்று இந்த லீக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ரெட் மேஜிக் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், அதனை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் கிடைக்கப்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








