உலக நாட்டு செய்திகளை கலக்கும் 3 தமிழர்கள்: எதற்கு தெரியுமா?

|

தினந்தினம் உலகம் முழுவதும் ஏராளமான சம்பவங்களும் சாதனைகளும் நிகழ்ந்து வருகின்றன. அவற்றில் சில செய்திகள் வாதங்களுக்கு உட்படுத்தப்பட்டும், சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த நிகழ்வில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் சமீப காலமாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.

பல்வேறு சம்பவங்கள் அரங்கேற்றம்

பல்வேறு சம்பவங்கள் அரங்கேற்றம்

உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்களும் சாதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சில செய்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிறது. கடந்த ஒரு வாரத்தில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ

கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் சுந்தர்பிச்சை ஒரு தமிழர் என்பது உலகறிந்த ஒன்று. அவர் கூகுள் நிறுவனத்தின் மூலம் பயனர்களுக்கு சிறந்த பயன்பாட்டை வழங்குவதற்கும், பல்வேறு புதுமைகளை புகுத்துவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து திட்டங்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.!திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து திட்டங்களை நீக்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்.!

கூகுளின் தாய் நிறுவனத்துக்கு நியமனம்

கூகுளின் தாய் நிறுவனத்துக்கு நியமனம்

கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களாகிய லாரி பேஜி மற்றும் செர்ஜி பிரைன் ஆகிய இருவரும் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், சுந்தர்பிச்சை, கூகுளின் தாய் நிறுவனம் மற்றும் துணை நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

ஆல்பபெட்  நிறுவனத்தின் தலைமை நிர்வாகி

ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி

சுந்தர் பிச்சை, கூகுளின் சிஇஓ-வாக பணியாற்றுவதோடு, ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பதவியையும் கூடுதலாக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா நோக்கியாதான்: ரூ.8,600-க்கு அட்டகாச ஸ்மார்ட் போன்!நோக்கியா நோக்கியாதான்: ரூ.8,600-க்கு அட்டகாச ஸ்மார்ட் போன்!

பல்வேறு புகார்களில் நித்தியானந்தா

பல்வேறு புகார்களில் நித்தியானந்தா

பலாத்கார வழக்கு, பெண்கள், குழந்தைகள் கடத்தல், நில மோசடிகள் என பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியவர் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. இந்த வழக்குகளை எதிர்கொள்ள முடியாமல் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் நித்தியானந்தா. ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என தனிநாடு பெயர் சூட்டியுள்ளார் நித்தியானந்தா. அத்துடன் நிற்காமல் இந்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறார் சாமியார் நித்தியானந்தா.

அவமானத்தை கண்டு கொள்ளமாட்டேன்

அவமானத்தை கண்டு கொள்ளமாட்டேன்

நான் ஜாலியா இருக்கிறதை பார்த்து ஏன் வயிறு எரிய வேண்டும், உங்களால் முடிந்தால் நீங்களும் ஜாலியா இருங்க.. நான் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் என் ஆசிரமங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மான அவமானத்தை பத்தியெல்லாம் கவலைப்படவில்லை. நான் ஒரு புறம்போக்கு, என்னை யாராலும் எதுவுமே செய்ய முடியாது. என் மீதும், சங்கத்தின் மீதும் நடத்தும் தாக்குதல் திட்டமிட்ட குற்றம் என கூறுகிறார்.

கைலாஷ் நாட்டின் பிரதமர் நித்தியானந்தா

கைலாஷ் நாட்டின் பிரதமர் நித்தியானந்தா

இவர் நாட்டுக்கு இந்துக்கள் செல்லலாம், அந்த நாட்டில் நித்தியானந்தா தான் பிரதமர். அவருக்கு கீழ் பத்து துறை உள்ளதாம். மேலும் அங்கு செல்வதற்கு தனி பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளும் அவரால் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

மனசாட்சி வேண்டாமா: கஸ்டமர் கேருக்கு 24,000 முறை கால் செய்த 71 வயது முதியவர் கைது!மனசாட்சி வேண்டாமா: கஸ்டமர் கேருக்கு 24,000 முறை கால் செய்த 71 வயது முதியவர் கைது!

தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர்

தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர்

சந்திரயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சிதைந்த பகுதிகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு செய்து அவ்வப்போது படங்களை வெளியிட்டு வந்தது. இந்த படங்களை ஆராய்ந்த தமிழக பொறியாளர் சண்முக சுப்பிரமணியன், நாசாவுக்கு ஒரு இ மெயில் அனுப்பினார்.

S என பெயரிட்ட கவுரவும்

S என பெயரிட்ட கவுரவும்

அதில் விக்ரம் லேண்ட்ரனின் சிதைந்த பகுதிகளின் இருப்பிடம் குறித்து தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் ஆய்வு செய்த நாசாவும் விக்ரம் லேண்டரின் சிதைந்த பகுதிகளின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அதற்கு S என பெயரிட்டுள்ளதாக பிரகடனம் செய்தது.

நாசாவின் வழிகாட்டி சண்முக சுப்பிரமணியன்

நாசாவின் வழிகாட்டி சண்முக சுப்பிரமணியன்

தற்போது நாசாவுக்கே வழிகாட்டியாக இருந்த சண்முக சுப்பிரமணியனை ஒட்டுமொத்த உலகமும் வியப்புடன் திரும்பிப் பார்க்கிறது. சண்முக சுப்பிரமணியன் ட்விட்டர் பக்கத்தில் உலகின் முன்னணி ஊடகங்களின் மூத்த பத்திரிகையாளர்கள் அவரை தொடர்பு கொள்வது எப்படி? உங்களுக்கு இ மெயில் என்ன? எங்களுக்கு எப்போது பேட்டி தருவீர்கள்? என வரிசை கட்டி முற்றுகையிட்டு நிற்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Recently 3 Tamil people trending in world news

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X