4ஜி விட 8 மடங்கு வேகமானது: ஜியோ 5ஜி சோதனை: வெளியான சூப்பர் தகவல்.!

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்;டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

 ஜியோ 5ஜி நெட்வொர்க் ஸ்பீட் டெஸ்ட்

தற்போது ஜியோ 5ஜி நெட்வொர்க் ஸ்பீட் டெஸ்ட் ஸ்கிரீன்ஷாட் வெளியாகியுள்ளது. அதில் பதிவிறக்க வேகம் மற்றும் பதிவேற்றவேகத்தை தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது. அதாவது வெளியாகியுள்ள ஸ்கிரீன்ஷாட்-இல் 420Mbps பதிவிறக்க வேகம்(download speed) மற்றும் 412Mbps பதிவேற்ற வேகத்தை(upload speed) பார்க்க முடிகிறது.

ந்த 5ஜி பதிவிறக்க வேகம் 4ஜி

மேலும் இந்த 5ஜி பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட 8 மடங்கு வேகமாகவும், பதிவேற்ற வேகம் 15 மடங்கு வேகமாகவும்
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாட்டில் உள்ள 1000 நகரங்களுக்கான 5ஜி நெட்வொர்க் கவரேஜ் திட்டத்தை நிறைவு
செய்துள்ளதாக ஜியோ நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

 பைபர் திறனை அதிகரித்து, அனைத்து

குறிப்பாக பைபர் திறனை அதிகரித்து, அனைத்து இடங்களிலும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்நிறுவனம்
தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தலைவர் கிரண் தாமஸ் கூறியது என்னவென்றால்,
ஜியோ நிறுவனம் 5ஜி திட்டத்தை 1000 நகரங்களில் நிறைவேற்றி உள்ளது. பின்பு 5ஜி இணைப்பின் வாயிலாக சுகாதாரம் மற்றும்
தொழிற்சாலை ஆட்டோமேஷன் ஆகியவற்றில் சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது.

 முப்பரிமாண வரைபடம் குறித்த

இதனுடன் முப்பரிமாண வரைபடம் குறித்த சோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப தேவைகள் அவசியமாக இருக்கின்றன என்று கூறியுள்ளார் இன்போகாம் தலைவர் கிரண் தாமஸ்.மேலும் ஜியோ நிறுவனத்தின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும்இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் நன்மை, JioTV,JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தா உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை
வழங்குகிறது.

 ரூ.601-ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.601-ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.499-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.601-க்கு ரீசார்ஜ்செய்ய கிடைக்கும்.அதன்படி ரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, ஒருவருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 6ஜிபி கூடுதல் டேட்டா உள்ளிட்ட பல்வேறுநன்மைகள்இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

 ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்

முன்பு ரூ.666-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

 கூடுதல் டேட்டா சலுகை

கூடுதல் டேட்டா சலுகை

முன்பு ரூ.888-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்யகிடைக்கும். அதன்படி ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். முன்பு ரூ.2599-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.3119-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு
நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 10ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

News Source: 91mobiles

Most Read Articles
Best Mobiles in India

English summary
Recent jio 5G Speed ​​Test Results: Full Details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X