புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ள பேஸ்புக்.!

பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களுக்காக செய்துள்ள புதிய அப்டேட் என்னென்ன?அவை குறித்து ஒரு பார்வை.!

By Ilamparidi
|

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றும் உலகம் முழுவதும் அதிக பயனாளர்களைக் கொண்டதுமான பேஸ்புக் நிறுவனம் தனது வலைத்தளத்தை பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களுடனும் பயன்படுத்த சிறந்தமுறையிலும் வடிவமைத்துள்ளது.

பிசிக்கல்செக்யூரிட்டி கருவிகளுடனும் மற்றும் செய்திகளுடன் தொடர்புடைய வீடியோக்கள் மட்டும் திரையில் தோன்றுகிற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல அப்டேட்களை பேஸ்புக் செய்துள்ளது.

புதிய பாதுகாப்பு கருவிகள்:

புதிய பாதுகாப்பு கருவிகள்:

'டேட்டா பிரைவசி டே' வான 28-01-2017 அன்று முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் தனது வலைத்தளத்திற்கான புதிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இந்த அம்சங்களை உள்ளடக்கி பிரைவசி செட்டிங்ஸ் பகுதிகள் உடனடியாக மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்ட விஷயங்கள் யாவும் சேர்க்கப்படும், பேஸ்புக் நிறுவனம் இதனை பிரைவசி செய்துள்ளது. மேலும் ஆன்லைன் பாதுகாப்பு அம்சங்களுக்காக வேண்டி 32 வழிகாட்டிகளுடனும் கைகோர்த்துள்ளது 44 மொழிகளில் இத்தகைய பாதுகாப்பு அம்சங்களுடன் பேஸ்புக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

டூ ஸ்டெப் அத்தெண்டிகேஷன்:

டூ ஸ்டெப் அத்தெண்டிகேஷன்:

பேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டதில் குறிப்பிட தகுந்த ஒன்று டூ ஸ்டெப் அத்தெண்டிகேஷன் ஆகும் பாஸ்வேர்ட் உள்ளிட்டவைகளை விட
இம்முறை சிறந்ததாகும் மற்றும் யுஎஸ்பி உள்ளிட்ட பிசிக்கல் கருவிகளை பயன்படுத்துகிற வாய்ப்பையும் அளித்துள்ளது மேலும் க்ரோம் உள்ளிட்ட ஆண்ட்ராய்டு கருவிகளில் இக்கருவிகளை உபயோகிக்க வேண்டுமெனில் அதற்கு என்எப்சி வயர்லெஸ் வசதி தேவை.

சீரமைக்கப்பட்டு செய்திப்பகுதி:

சீரமைக்கப்பட்டு செய்திப்பகுதி:

முகநூல் நிறுவனத்தின் புதிய பாதுகாப்பு அம்சங்களைத்தாண்டி அதன் நியூஸ் பீட் பகுதியும் சீரமைக்கப்பட்டுள்ளது இவ்வாறு சீரமைக்கப்பட்ட நியூஸ் பீட் பகுதியில் செய்திகளுடன் தொடர்புடைய விடியோக்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதனால் தேவையற்ற விடியோக்கள் உங்கள் செய்திப்பகுதியில் இடம்பெறுவது தவிர்க்கப்படும்.

ட்ரெண்டிங்:

ட்ரெண்டிங்:

முகநூல் நிறுவனத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் ட்ரெண்டிங் நியூஸ் வசதியும் புதுப்பிக்கப்பட்டுள்ளது அதாவது ட்ரெண்ட் போன்ற வசதிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளது பயனாளர்களின் பெரும்பான்மையானோர் பின்தொடர்கிற நிகழ்வுகளை மட்டுமே அப்போதைய ட்ரெண்ட் செய்தியாக்குகிற வசதி அமைக்கப்பட்டுள்ளது ஏனெனில் தவறான செய்திகளை ட்ரெண்ட் ஆக்காவண்ணம் இந்த செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்லைடு ஷோ:

ஸ்லைடு ஷோ:

முகநூல் நிறுவனமானது மேலும் ஸ்லைடு ஷோ ஆப்ஷன்கள் 'டேக்' ஆப்ஷன் உள்ளிட்டவற்றை முழுவதுமாக பயனாளர்களுக்கு சிறந்தமுறையில் வழங்குகிறவகையில் சிறப்பாக வடிவமைத்துள்ளது இந்தவாய்ப்புகளானது எல்லா முகநூல் உபயோகிப்பாளர்களையும் சேர சிலகாலம் ஆகலாம்.

Best Mobiles in India

English summary
Recent Facebook updates which made the platform safer and better than before.Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X