இதுக்கு தான் ஃபேஸ்புக் வேணாம்னு சொல்றது, புரியுதா..??

By Meganathan
|

உலகம் முழுக்க சுமார் 144 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் சமூக வலைதளம் தான் ஃபேஸ்புக். உலகின் மிகப்பெரிய சமூக வலைதளம் என முகநூல் கருதப்படுகின்றது.

சவால் : ஃபேஸ்புக்ல எல்லாமே உங்களுக்கு தெரியுமா..?!

நாம் அனைவரும் தங்களது வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை முகநூலில் பதிவு செய்து வருகின்றோம். மேலும் அரசியல், பொழுதுபோக்கு என மனதில் நினைப்பவனற்றை முகநூலில் கருத்துக்களாகவும் போஸ்ட் செய்து வருகின்றோம்.

ஃபேஸ்புக் : உங்கள் காதல் 'நிலைக்க' நீங்கள் செய்ய வேண்டியது..!

எப்படி பார்த்தாலும் ஃபேஸ்புக் நமக்கும் நன்மையை தான் செய்கின்றது என நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரானால் அடுத்து வரும் ஸ்லைடர்களை பாருங்கள், அப்படியே ஷாக் ஆகிடுவீங்க...

நேரம்

நேரம்

சுமார் பத்து ஆண்டுகளாக ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தங்களது வாழ்நாளில் 40 நாட்களை ஃபேஸ்புக்கில் மட்டும் செலவழித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தினமும் ஒருவர் குறைந்தபட்சம் 17 நிமிடங்களாவது ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.

தகவல்

தகவல்

ஃபேஸ்புக் உங்களது தகவல்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப உங்களது சேவையை மேம்படுத்துவதாக 2012 ஆம் ஆண்டே அந்நிறுவனம் தெரிவித்தது.

விளம்பரம்

விளம்பரம்

ஃபேஸ்புக்கில் நீங்கள் பதிவு செய்யும் தகவல்களுக்கு ஏற்ப உங்களது டைம்லைனில் அந்நிறுவனம் விளம்பரங்களை வழங்குகின்றது.

உடல் நலம்

உடல் நலம்

பல்வேறு ஆய்வு முடிவுகளில் இருந்து ஃபேஸ்புக் பயன்படுத்துவது மனிதர்களின் நோய் எதிரிப்பு அமைப்பை பாதிப்பதோடு படைப்பாற்றலையும் பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

நண்பர்கள்

நண்பர்கள்

சராசரியாக ஃபேஸ்புக்கில் அனைவரும் 338 நண்பர்களை பெற்றிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அவைகளில் பத்து சதவீதம் பேர் யார் என்றே அவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

பல்வேறு சந்தர்ப்பங்களில் உங்களது சில போஸ்ட்கள் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட காரணமாக அமையலாம்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

உடாஹ் வேலி பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக நேரம் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் குறைகின்றதாக கண்டறியப்பட்டுள்ளது.

ட்ராக்

ட்ராக்

ஃபேஸ்புக்கில் டைப் செய்யப்படும் தகவல்கள் மற்றும் அவை பதிவேற்றம் செய்யப்படும் நேரம் போன்றவை ட்ராக் செய்யப்படுவதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஃபேஸ்புக்கில் மற்றவர்கள் அதிகம் மகிழ்ச்சியாக இருப்பதசு போன்ற போஸ்ட்களை பதிவு செய்யும் போது பெரும்பாலானோர் அதன் மூலம் ஏமாற்றப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தகவல் பறிமாற்றம்

தகவல் பறிமாற்றம்

சமூக வலைதளம் பெரும்பாலும் நண்பர் மற்றும் உறவினர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புகளை குறைக்கவே செய்கின்றன.

பயன்பாடு

பயன்பாடு

ஃபேஸ்புக் பயன்படுத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் யாரும் இதை பயன்படுத்துவதை நிறுத்திவிட முடியாது என்றாலும், பயன்படுத்தும் நேரத்தையாவது குறைக்கலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Reasons Why You Should Quit Facebook Right Now. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X