வாட்ஸ்ஆப் வீடியோ கால் எல்லோருக்குமே 'செட்' ஆகாது, ஏன்.?

சமீபத்தில் அறிமுகமான வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பு அம்சத்தில் பல சிக்கல்கள் உள்ளன மற்றும் அது வீடியோ கால் என்பதற்கே பொருத்தமற்றது.

|

மிகவும் பிரபலமான மெஸேஜிங் பிளாட்பார்ம் ஆன வாட்ஸ்ஆப் கடந்த சில மாதங்களில் பல புதிய அம்சங்களை வடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டு வருகிறது. அந்த புதிய அம்சங்களின் பட்டியலில் சமீபத்தில் இணைந்த தான் வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பு அம்சம்.

இந்த மாத முற்பகுதியில், வாட்ஸ்ஆப் அதன் பீட்டா பயனர்களுக்கு அதன் வீடியோ அழைப்பு அம்சத்தை அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் போன் ஆகிய அனைத்து பயனர்களையும் சென்றடையும் நோக்கில் வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பை அதிராகப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஏமாற்றங்கள் மிச்சம்

ஏமாற்றங்கள் மிச்சம்

மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சத்தில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள் மிச்சம் எனலாம். ஸ்கைப், பேஸ்டைம், இமோ ஆகிய வீடியோ காலிங் ஆப்ஸ்களோடு ஒப்பிடுகையில் வாட்ஸ்ஆப் வீடியோ கால் ஒரு சிறந்த தேர்வாக இல்லை.

மோசமான வீடியோ தரம்

மோசமான வீடியோ தரம்

மற்ற வீடியோ பயன்பாடுகளின் அழைப்புகளோடு ஒப்பிடும்போது வாட்ஸ்ஆப் வீடியோ கால் ஒரு மோசமான தரம் கொண்டதாகவே தெரிகிறது. படம் தெளிவாக இல்லை மற்றும் மிகவும் அவலட்சணமான ஒரு உரையாடலை வாட்ஸ்ஆப் வீடியோ கால் நிகழ்த்துகிறது.

அதிக அளவிலான டேட்டா

அதிக அளவிலான டேட்டா

மற்ற ஸ்கைப், பேஸ்டைம் உள்ளிட்ட வீடியோ அழைப்பு பயன்பாடுகளோடு ஒப்பிடுகையில் மிக அதிக அளவிலான டேட்டாவை இது எடுத்துக் கொள்கிறது என்பது மிகவும் மோசமான ஒரு விடயமாகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முற்றிலும் போலி

முற்றிலும் போலி

இந்த புதிய அம்ச அறிமுகத்தை ஸ்கேம்மர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் வாட்ஸ்ஆப் வீடியோ கால் இன்விட்டேஷன்களை இணைப்பு போல அனுப்பி வருகின்றன. அது முற்றிலும் போலியானதாகும் மற்றும் நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்வதின் மூலமாகவே எளியதாக இந்த அம்சத்தை பெற முடியும்.

2ஜி

2ஜி

ஸ்கைப் மற்றும் இமோ போலல்லாமல், வாட்ஸ்ஆப் வீடியோ அழைப்பு பெரும்பாலும் 2ஜி-யில் வேலை செய்யாமல் போகலாம் மற்றும் 3ஜி-யில் இணைக்கப்படுகிறது.

வைஃபை

வைஃபை

இந்த வழக்கில் நீங்கள் உங்கள் மொபைல் தரவுபயனப்டுத்தி வாட்ஸஆப் வீடியோ கால் நிகழ்த்தினால் ஒரு சில நிமிடங்களில் உங்கள் தரவை நிறைய இழக்க நேரிடும். நல்ல இணைப்பு மற்றும் தரவு சேமிப்பிற்கு வைஃபை பயன்படுத்துவது மிக நல்லது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப், இந்தியர்களுக்கு உரித்தான ஏழு சுவாரஸ்ய தகவல்கள்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Reasons Why WhatsApp Video Calls May Not Suit All Users. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X