ஜியோவில் மார்ச் வரை எல்லாமே இலவசம், உறுதி செய்யும் காரணங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ சேவைக் கடந்த சில மாதங்களில் அதிகளவு பயனர்களை ஈர்த்துள்ளது. அதிகபட்சம் 16 மில்லியன் என்ற பயனர் எண்ணிக்கையைக் கடந்து ஜியோ எண்ணிக்கை இருக்கின்றது.

By Meganathan
|

அன்லிமிட்டெட் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் என எல்லாச் சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் போது பயனர்கள் அவற்றை விடக்கூடாது என்ற காரணத்தினால் கவரப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 31 ஆம் தேதி வரை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தச் சேவைகள் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்சமயம் இவற்றைக் கிட்டத்தட்ட உறுதி செய்யும் சில காரணங்களை இங்குப் பார்ப்போமா?

ஜியோ அழைப்புகளின் எண்ணிக்கை

ஜியோ அழைப்புகளின் எண்ணிக்கை

ஜியோ நம்பர்களின் மூலம் மற்ற நெட்வர்க் அழைப்புகளை மேற்கொள்வதில் ஏற்பட்டிருக்கும் கோளாறு காரணமாக அழைப்புகளைச் சீராக மேற்கொள்ள இயலவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக ஜியோ மூலம் ஜியோ அழைப்புகளை மேற்கொள்ளும் பணிகளை மேற்கொள்வதில் ஜியோ ஈடுபட்டுள்ளது.

கால் கோளாறுகளைச் சரி செய்தல்

கால் கோளாறுகளைச் சரி செய்தல்

ஜியோ சேவை துவங்கப்பட்ட நாள் முதல் கால் அழைப்புகளை மேற்கொள்வதில் சிக்கல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஜியோ தனது பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவைகளை எவ்வித இடர்பாடுமின்றி வழங்க முடியாத காரணத்தினால் இலவச சேவைகள் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க ஜியோ முடிவு செய்யலாம்.

100 மில்லியன் பயனர்

100 மில்லியன் பயனர்

ரிலையன்ஸ் ஜியோ சேவையில் கூடுதலாக 100 மில்லியன் என்ற பயனர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தனது இலவச சேவைகளை நீட்டிக்கலாம். தற்சமயம் வரை கிட்டதட்ட 25 மில்லியன் என்ற எண்ணிக்கையைக் கூடுதலாக இலவச சேவைகளை நீட்டிக்கும் பட்சத்தில் 100 மில்லியன் என்ற எண்ணிக்கையை அடைய முடியும் என அந்நிறுவனம் முடிவு செய்திருக்கலாம் எனச் சந்தை வட்டாரங்களில் கூறப்படுகின்றது.

டிராய் விதிமுறைகள்

டிராய் விதிமுறைகள்

ஜியோ சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதைத் துவக்கத்தில் டெலிகாம் நிறுவனங்கள் எதிர்த்த போதிலும் பின் ஜியோ இன்று வரை இலவச சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது. இந்நிலையில் ஜியோ சேவைகள் மார்ச் 2017 வரையிலும் நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

அதிவேக இண்டர்நெட்

அதிவேக இண்டர்நெட்

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வேகம் மிகவும் அதிகமானதாக இருந்து வருகின்றது. வணிக ரீதியிலான அறிமுகத்திற்குப் பின் வேகம் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. கனெக்டிவிட்டி மற்றும் குறைந்த வேகம் போன்ற பிரச்சனைகள் கூறப்பட்டு வருகின்றது. ஜியோ அறிமுகச் சேவை மற்றும் இலவச சேவைகள் தொடர்ந்து மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Reasons Why Reliance Jio Welcome Offer Could Be Extended Until March 2017

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X