நல்ல ஆபர்ல வருதுன்னு அவசரப்பட்டு iPhone 13 வாங்கிடாதீங்க.. ஏனென்றால்?

|

ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் சீரீஸின் கீழ் வெளியான லேட்டஸ்ட் மாடல் மீது "திடீரென்று" ஆபர்களும், விலை குறைப்புகளும் அறிவிக்கப்படுகின்றன என்றால்.. அதே சீரீஸின் கீழ் புதிதாக ஒரு மாடல் வரப்போகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்; அதுதான் புத்திசாலித்தனம்!

இந்த புரிதல் ஒருபக்கம் இருக்க, ஆபர்களால் நிரம்பி வழியும் பழைய மாடலை வாங்கலாமா? அல்லது வரவிருக்கும் புதிய மாடலை வாங்கலாமா? என்கிற கேள்விக்கான பதிலையும் நாம் தேட வேண்டியது அவசியமாகிறது.

அதிலும் நீங்கள் ஒரு பெரிய பட்ஜெட்டில் ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்குகிறீர்கள் என்றால், சொல்லவே வேண்டாம். மிகவும் கவனமாக - வாங்கலாமா? வேண்டாமா? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஏற்கனவே உள்ள ஐபோன் 13 Vs இன்னும் அறிமுகம் ஆகாத ஐபோன் 14!

ஏற்கனவே உள்ள ஐபோன் 13 Vs இன்னும் அறிமுகம் ஆகாத ஐபோன் 14!

ஒருவேளை நீங்கள் ஒரு புதிய ஐபோனை வாங்க திட்டமிட்டு இருந்தால், சமீப நாட்களாக ஐபோன் 13 மீதான தாறுமாறான ஆபர்களால் ஈர்க்கப்பட்டு இருந்தால், கொஞ்சம் நிதானிக்கவும்.

ஏனெனில், இன்னும் சில மாதங்களில் புதிய ஐபோன் 14 சீரீஸ் மாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் சரியான வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் எங்களிடம் இல்லை.

ஏன் ஐபோன் 13-ஐ வாங்க வேண்டாம்?

ஏன் ஐபோன் 13-ஐ வாங்க வேண்டாம்?

ஒவ்வொரு ஆண்டை போலவே, இந்த ஆண்டும் ஆப்பிள் அதன் ஐபோன் 14 சீரீஸின் கீழ் நான்கு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆப்பிள் ஐபோன் யூசர்கள் மற்றும் ரசிகர்கள், மேக்ஸ் மற்றும் ப்ரோ மாடல்களுடன் ஒப்பிடும் போது வெண்ணிலா மாடலின் மீதே அதிக கவனம் செலுத்துவார்கள். ஏனெனில் அதுதான் இருப்பதிலேயே விலை குறைவான மாடலாக வெளியாகும்.

ஏன் ஐபோன் 14-க்காக காத்திருக்க வேண்டும்?

ஏன் ஐபோன் 14-க்காக காத்திருக்க வேண்டும்?

குறிப்பாக இந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகும் ஐபோன் 14 மாடல் ஆனது ஐபோன் 13-இன் அதே விலை நிர்ணயத்தில் தான் வெளியாகும் என்று ஒரு வதந்தி பரவுகிறது. நினைவூட்டும் வண்ணம், ஐபோன் 13 ஆனது இந்தியாவில் ரூ.79,990 என்கிற ஆரம்ப விலையில் வெளியானது.

"ஒரே மாதிரியான" விலை மட்டுமல்ல, ஐபோன் 13 மாடலை வாங்காமல் ஐபோன் 14 மாடலுக்காக நீங்கள் காத்திருக்க பல சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமான நான்கு காரணங்கள் இதோ:

கேமரா: சும்மா களைகட்டும்!

கேமரா: சும்மா களைகட்டும்!

ஐபோன் 13 உடன் ஒப்பிடும்போது ஐபோன் 14 ஆனது சற்றே பெரிய சென்சார்களை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக டூயல் ரியர் கேமரா செட்டப் தான். ஆனால் ஐபோன் 14 ஆனது அதன் "முன்னோடிகளை" விட அதிக லோ லைட் கேமரா செயல்திறனை வழங்கும் என்று கூறப்படுகிறது.

செல்பீ கேமராவை பொறுத்தவரை, ஹை-எண்ட் கேமரா காம்போனென்ட்களை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சிறந்த செல்பீ மற்றும் வீடியோ கால் அனுபவத்தை வழங்க உதவலாம்.

ரூ.10,000 பட்ஜெட்ல இப்படி ஒரு 5G போன்-ஆ! என்ன மாடல்? எப்போ அறிமுகம்?ரூ.10,000 பட்ஜெட்ல இப்படி ஒரு 5G போன்-ஆ! என்ன மாடல்? எப்போ அறிமுகம்?

பேட்டரி: இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா!

பேட்டரி: இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா!

ஐபோன் 13 மாடல் ஆனது ஏற்கனவே ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. வரவிருக்கும் ஐபோன் 14, அதைவிட இன்னும் சிறந்த பேட்டரி செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைக்கும், நேற்றைக்கும் அல்ல, பல ஆண்டுகளாகவே ஐபோன் யூசர்களுக்கு பேட்டரி லைஃப் எப்போதுமே ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது; ஆனால் ஐபோன் 13 சீரீஸில் இந்த சிக்கல் ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டது. மேலும் வரவிருக்கும் ஐபோன் 14 சீரீஸில், பேட்டரி செயல்திறன் இன்னும் மேம்படுத்தப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஓவர்-ஆல் பெர்பார்மன்ஸ்:  எப்போதும் போல இருக்கும்!

ஓவர்-ஆல் பெர்பார்மன்ஸ்: எப்போதும் போல இருக்கும்!

முன்னதாக வெளியான லீக்ஸ் அறிக்கைகளின்படி, ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் ஏ16 பயோனிக் சிப்செட்டுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. அதே சமயம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 மேக்ஸ் மாடல்கள் ஆனது ஐபோன் 13 சீரீஸில் உள்ள ஏ15 பயோனிக் சிப் உடன் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

இது சாத்தியமாகும் பட்சத்தில், உலகளாவிய சிப் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும். ஒருவேளை இது நடக்காமலும் போகலாம். ஏனெனில் ஆப்பிள் வழக்கமாக தன் முழு சீரீஸிலும் ஒரே சிப்பை தான் பயன்படுத்தும், ஐபோன் 14 சீரீஸிலும் நாம் அதையே எதிர்பார்க்கலாம், தவறில்லை.

ஆகமொத்தம் பெர்பார்மன்ஸ் என்று வரும் போது, அடுத்த ஐபோனில் எப்போதும் போல எந்த சிக்கலும் இருக்காது அவ்வளவு தான் சொல்ல முடியும். ஏனெனில் ஏ16 பயோனிக் சிப்செட்டில் பெரிய அளவிலான அப்டேட்ஸ் இருக்காது என்று கூறப்படுகிறது.

அறிமுகம்: அருகில் தான் உள்ளது!

அறிமுகம்: அருகில் தான் உள்ளது!

இப்போதும் கூட ஒரு ஐபோன் 13 மாடலை வாங்குது, நல்ல யோசனை தான். ஆனால் ஐபோன் 14 மாடலுக்காக காத்திருப்பது அதை விட நல்ல யோசனை. அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும் கூட, ஐபோன் 14 சீரீஸின் அறிமுகம் சரியான நேரத்தில் நடக்கும், எந்த தாமதமும் இருக்காது என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனே வாங்க கிடைக்கும். ஆனால் ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான ஒரு மாதத்திற்கு பிறகே வாங்க கிடைக்கும். ஆக அறிமுகமான வேகத்தில் உங்களால் ஐபோன் 14 மாடலை வாங்க முடியும்.

ஒட்டுமொத்தமாக, எப்படி பார்த்தாலும்.. ஐபோன் 13-ஐ வாங்குவதை விட ஐபோன் 14-க்காக காத்திருப்பதே பெஸ்ட்!

Best Mobiles in India

English summary
Want to buy a new Apple iPhone, Here are the reasons why you need to wait for iPhone 14 instead buying iPhone 13

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X