VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!

|

நீங்களொரு VLC மீடியா பிளேயர் யூசராக இருந்தால் நிச்சயம் குழப்பத்தில் இருப்பீர்கள்! ஏனெனில் ஒரு கிராஸ்-பிளாட்ஃபார்ம் ஆன விஎல்சி மீடியா பிளேயரின் (VLC media player) இணையதளத்தை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஆனால் VLC மீடியா பிளேயரோ இன்னமும் நன்றாக வேலை செய்கிறது! அதெப்படி..? இதோ VLC இன்னும் தடை செய்யப்படவில்லை என்பதை நிரூபிக்கும் 6 முக்கிய காரணங்கள்!

இதே தான் கடந்த பிப்ரவரியிலும் நடந்தது!

இதே தான் கடந்த பிப்ரவரியிலும் நடந்தது!

தொடர்ச்சியாக, விஎல்சி மீதான தடை குறித்த செய்திகள் வெளியானதே தவிர, அது குறித்து இந்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மேலும் VLC மீதான இந்த தடை முற்றிலும் புதியதும் அல்ல. VLC-இன் தாய் நிறுவனமான VideoLan கடந்த பிப்ரவரி 2022-இல் கூட தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த நேரத்திலும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் இருந்து "தடை" குறித்து எந்த விளக்கமும் வெளியாகவில்லை!

உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!உஷார்! டவுன்லோட் செய்ததும் பெயர் & ஐகானை மாற்றிக்கொள்ளும் 35 ஆபத்தான ஆப்கள்!

இந்நிலைப்பாட்டில் கடந்த வாரம்.. மீண்டும் தடை!

இந்நிலைப்பாட்டில் கடந்த வாரம்.. மீண்டும் தடை!

கடந்த வாரம் தொடர்ச்சியான ட்வீட்களின் வழியாக, VideoLan ஆனது இந்தியாவில் (மீண்டும்) தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இருப்பினும் கூட, தற்போது வரையிலாக VLC இயங்குதளம் நன்றாக வேலை செய்வதை பார்க்க முடிகிறது! குழப்பமாக இருக்கிறதா?

சரி வாருங்கள்! இந்தியாவில் விஎல்சி மீடியா பிளேயர் ஏன் இன்னும் தடை செய்யப்படவில்லை என்பற்கான 6 முக்கியமான காரணங்களை பார்ப்போம்; அப்போது தான் உங்களின் குழப்பம் தீரும்!

01.Google, Apple ஆப் ஸ்டோர்களில்..?

01.Google, Apple ஆப் ஸ்டோர்களில்..?

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலுமே விஎல்சி ஆப் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.

வழக்கமாக அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ஆப்கள், ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக அகற்றப்படும்.

சமீபத்தில் தடை செய்யப்பட்ட பிஜிஎம்ஐ கேம் அதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் VLC இன்னமும் அப்படியே தான் இருக்கிறது!

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

02. Software-ஐ இன்ஸ்டால் செய்து இருந்தால்..?

02. Software-ஐ இன்ஸ்டால் செய்து இருந்தால்..?

நீங்கள் ஏற்கனவே உங்களின் பிசி-களில் விஎல்சி சாப்ட்வேர்-ஐ பதிவிறக்கம் செய்து இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லாமல் அதை தொடர்ந்து பயன்படுத்த முடிகிறது.

03. ஆண்ட்ராய்டு டிவியில்..?

03. ஆண்ட்ராய்டு டிவியில்..?

VLC ஆப் ஆனது இன்னமும் ஆண்ட்ராய்டு டிவிகளில் இயங்குகிறது. மேலும் இது FireTV-யிலும் இயங்குகிறது; நன்றாக வேலை செய்கிறது.

Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே Google Pay, Paytm-இல் சைலன்ட் ஆக காணாமல் போகும் பணம்! உடனே "இதை" செய்யுங்க!

04. Windows -இல் உள்ள Microsoft ஆப் ஸ்டோரில்..?

04. Windows -இல் உள்ள Microsoft ஆப் ஸ்டோரில்..?

VLC ஆனது இன்னும் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் டவுன்லோட் செய்யும் விருப்பமும் அணுக கிடைக்கிறது.

நீங்கள் விண்டோஸ் 10 அல்லது விண்டோஸ் 11 ஓஎஸ்-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால், மைக்ரோசாஃப்ட் ஸ்டோரை திறந்து, VLC-ஐ சேர்ச் செய்யுங்கள், அதை உங்களால் பதிவிறக்கம் செய்ய முடியும்.

05. VLC மீதான தடைக்கு.. அரசின் பதில்..?

05. VLC மீதான தடைக்கு.. அரசின் பதில்..?

Internet Freedom Foundation ஆனது விஎல்சி மீதான தடை குறித்த கூடுதல் விவரங்களை DoT-யிடம் கோரியது. பின்னர், குறிப்பிட்ட தகவல் அறியும் உரிமை விண்ணப்பமானது GoI_MeitY க்கு மாற்றப்பட்டது. பிறகு MeitY -யிடம் இருந்து வந்த பதில் என்னே தெரியுமா? - "அது குறித்து எந்த தகவலும் இல்லை!" என்பதே ஆகும்!

Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!

06. Google Search-இல்..?

06. Google Search-இல்..?

எல்லாவற்றை விட முக்கியமாக, கூகுள் சேர்ச் வழியாக "www.videolan.org/vlc/ வலைத்தளம் இன்னமும் அணுக கிடைக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஏதேனும் ஒரு வெப் ப்ரவுஸரில் இருந்து www.videolan.org/vlc/ க்கு செல்ல வேண்டும். விஎல்சி-ஐ டவுன்லோட் செய்து, பின் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும். அவ்வளவு தான்!

Best Mobiles in India

English summary
Reasons Why VLC Media Player is not get banned in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X