கேலக்ஸி எஸ்6 வாங்குவதற்கு பதில் ஐபோன் 6 வாங்கிடலாம்
தற்சமயம் வெளியாகியிருப்பதில் சிறந்த ஆன்டிராய்டு கருவியாக சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடான கேலக்ஸி எஸ்6 இருக்கின்றது. இதற்கு பல காரணங்களை கூற முடியும்.
ஆனால் ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பிடும் போது இது எந்தளவு உண்மை என்பது உங்களுக்கு தெரியுமா, ஆன்டிராய்டு கருவிகளோடு ஒப்பிடும் போது சிறந்ததாக இருக்கும் கேலக்ஸி எஸ்6 ஐபோன் 6 உடன் ஒப்பிடும் போது சிறப்பானதாக இல்லை என உங்களுக்கு தெரியுமா..

டச் விஸ்
முந்தைய ஆன்டிராய்டு கருவிகளை விட சிறந்த டச் விஸ் தொழில்நுட்பத்தினை கேலக்ஸி எஸ்6 வழங்கினாலும் ஐபோனுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் மேலும் சிறப்பான தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கின்றது.

டிஸ்ப்ளே
கேலக்ஸி எஸ்6 கருவியில் டிஸ்ப்ளேவினை தவிர்த்து பின்புற பேனலிலும் கொரில்லா கிளாஸ் 4 கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பது பார்க்க அழகாக காட்சியளித்தாலும் அதிக பயன்பாடுகளுக்கு பின் அவை நிச்சயம் பாழாகி விடும். ஆப்பிள் ஐபோனில் அலுமினியம் கொண்ட பேக் பேனல் தினசரி பயன்பாடுகளிலும் எவ்வித அழுக்கும் இல்லாமல் பார்த்து கொள்கின்றது.

மெட்டல் போன்
கேலக்ஸி எஸ் 6 மற்றும் எஸ்6 எட்ஜ் வெளிபுற வடிவமைப்பில் சிறப்பானதாக காட்சியளித்தாலும் பேக் பேனலில் இருக்கும் கொரில்லா கிளாஸ் சற்று பின்னடைவை ஏற்படுத்துகின்றது.

சென்சார்
பொதுவாக ஆன்டிராய்டு கருவிகளுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் கருவிகளில் மிக பெரிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். கேலக்ஸி எஸ்6 இல் இடம் பெற்றிருக்கும் சில சென்சார்கள் ஐபோன் 6 கருவியில் இல்லை என்றாலும் சிறப்பான புகைப்படங்களை எடுப்பதில் இன்றும் ஆப்பிள் தான் முன்னணியில் இருக்கின்றது.

ஓஎஸ் அப்டேட்
ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளம் அப்டேட் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் பெரும்பாலான ஐபோன்களுக்கு வழங்கப்பட்டு விடும், ஆன்டிராய்டின் நிலை அனைவரும் அறிந்ததே.

அனுபவம்
தயாரிப்பை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலும் ஐபோன் சார்ந்த கருவிகளுக்கு ஹார்டுவேர் முதல் மென்பொருள் வரை அனைத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும். கேலக்ஸி எஸ்6 கருவி பயன்படுத்த நல்ல அனுபவத்தை வழங்கினாலும் முழுமையான அனுபவத்தை பெற சில காலம் காத்திருக்க தான் வேண்டும்.


Click it and Unblock the Notifications