உங்க ஃபேஸ்புக் போஸ்ட்களுக்கு லைக்ஸ் வரலையா? இது தான் காரணம்.!!

By Meganathan
|

எந்நேரமும் ஃபேஸ்புக் பயன்படுத்துறோம், ஆனா நாம போடும் எல்லா போஸ்ட்களுக்கும் ஒரே அளவு லைக்ஸ் வராது என்பதை கவனித்துள்ளீர்களா? லைக்ஸ் குறித்து அதிகம் வருந்துவோரில் நீங்களும் ஒருவர் என்றால், இனி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஃபேஸ்புக் பதிவுகளுக்கு லைக்ஸ் குறைவதற்கான காரணம் குறித்த ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளில் ஃபேஸ்புக் லைக்ஸ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களைக் கவரும் அருமையான பதிவுகளுக்கும் லைக்ஸ் குறைகின்றது என்றால் காரணம் பதிவில் மட்டும் இருக்காது. பெரும்பாலும் பதிவு செய்த நேரத்தில் தான் கோளாறு இருக்கின்றது என்கின்றது லித்தியம் டெக்னாலஜீஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு. உடனே போஸ்ட் போட நல்ல நேரம் பார்க்க வேண்டுமா என நினைக்க வேண்டாம். அதிகம் பேர் இருக்குமிடத்தில் நல்ல வியாபாரம் நடக்கும் என்பதைப் போல், ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஃபேஸ்புக் பயன்படுத்தும் போது பதிவிட்டால் அது அதிகம் பேர் பார்க்க நேரிடும். அதிகம் பேர் பார்க்கும் போது லைக்ஸ் தானாக அதிகரிக்கும்.

உங்க ஃபேஸ்புக் போஸ்ட்களுக்கு லைக்ஸ் வரலையா? இது தான் காரணம்.!!

ஃபேஸ்புக்கில் எந்நேரத்தில் பதிவுகளை மேற்கொள்வது நல்லது, பொதுவாக நம் பகுதிகளில் பயனர்கள் வார இறுதி அல்லது வாரத் துவக்க நாட்களில் அதிகளவு ஃபேஸ்புக் பயன்படுத்துவர். மேலும் மாலை வேலைகளில் வெளியாகும் பதிவுகளுக்கு அதிகளவு லைக்ஸ் கிடைப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்று பெரும்பாலான வியாரங்களின் முக்கிய விளம்பர மையமாக ஃபேஸ்புக் இருக்கின்றது. வியாபாரிகளுக்கு நன்மை செய்யும் விதமாக ஃபேஸ்புக் விளம்பரங்கள் அதன் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன. சில தகவல்களுடன் பணம் கொடுத்தால் போதும் ஃபேஸ்புக் தனது பயனர்களுக்கிடையே உங்களது தகவல்களை கொண்டு சேர்க்கும் பணியினை செய்து வருகின்றது. இந்த ஆய்வில் சுமார் 14.4 கோடி ஃபேஸ்புக் பதிவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Best Mobiles in India

English summary
Reason why you are not getting enough likes on Facebook Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X