உங்களிடம் இந்த Apple டிவைஸ் இருந்தால் பிளைட்டில் செல்ல தடை.! காரணம் என்ன தெரியுமா?

|

விமானத்தில் அடிக்கடி பயணம் செய்யும் நபரா நீங்கள்? உலகச் சுற்றுலா செல்ல திட்டமிடுகிறீர்களா? உங்களிடம் ஆப்பிள் தயாரிப்பு சாதனங்கள் இருக்கிறதா?

அப்படியானால், உங்கள் பயணத்திற்கு முன்பாக இந்த தகவலைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பின்பு பிளைட்டில் பயணம் செய்யுங்கள். சமீபத்தில், Lufthansa வெளியிட்ட தகவலின் படி, இனி பிளைட்டில் Apple AirTag பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உங்க லக்கேஜில்

உங்க லக்கேஜில் "இந்த" Apple டிவைஸ் இருந்தால் விமானத்தில் பறக்க தடையா?

விமானப் பயணத்திற்கு ஆப்பிளின் ஒரு குறிப்பிட்ட சாதனம் ஆபத்தை உருவாக்குவதாகக் கூறி, காரணம் காட்டி இந்த புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Lufthansa மூலம் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகள் இனி AirTag சாதனத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி, புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான விமானப் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை நிகழ் நேரத்தில் கண்காணிக்க (Track Luggage In Real-Time) ஏர்டேக் டிவைஸை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

விமான பயணிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சாதனத்திற்கே தடையா?

விமான பயணிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சாதனத்திற்கே தடையா?

உலகளவில் உள்ள விமான பயணிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சாதனங்களில் ஆப்பிள் AirTag ஒன்றாக இருக்கிறது.

இது விமான பயணத்தின் போது பயணிகளின் சாமான்கள் தவறாக இடம் மாற்றப்பட்டாலோ அல்லது விமான நிறுவனத்தால் தவறாகக் கையாளப்பட்டாலோ அவற்றைக் கண்காணிக்க இந்த ஆப்பிள் ஏர்டேக் உதவுகிறது.

இருப்பினும், லுஃப்தான்சா, ICAO வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி AirTag சாதனத்தை இப்போது பயன்படுத்தத் தடை செய்துள்ளது.

MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?MS Dhoni அறிமுகம் செய்த புது ட்ரோனி ட்ரோன்.! இந்த Drone கம்பெனிக்கு சொந்தக்காரர் தோனியா?

ஆக்டிவேட் செய்யப்பட்ட ஏர்டேக்குகளை லக்கேஜ்களில் வைத்தால் ஆபத்தா?

ஆக்டிவேட் செய்யப்பட்ட ஏர்டேக்குகளை லக்கேஜ்களில் வைத்தால் ஆபத்தா?

ஏர்டேக்குகள் மீதான தடையை (AirTag Ban) உறுதிப்படுத்துமாறு விமான நிறுவனத்திடம் கேட்கப்பட்டதாக Apple Insider இன் அறிக்கை வெளிப்பட்டது.

அதைத் தொடர்ந்து, லுஃப்தான்சாவின் சமீபத்திய ட்வீட்டில், "ஆக்டிவேட் செய்யப்பட்ட ஏர்டேக்குகளை லக்கேஜ்களில் வைப்பதனால், அவை ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டு, தடை செய்ப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி பயணத்தின் போது AirTag அணைக்கப்பட வேண்டும்" என்று டிவீட் குறிப்பிடுகிறது.

ICAO வழிகாட்டுதல்களை லுஃப்தான்சா எப்படி தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டது?

ICAO வழிகாட்டுதல்களை லுஃப்தான்சா எப்படி தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டது?

ஏர் டேக்குகளை தடை செய்வதற்கான காரணம் என லுஃப்தான்சா விமான நிறுவன வழிகாட்டுதல்களைக் குறிப்பிட்டுள்ளது.

"ICAO வழிகாட்டுதல்களின்படி, பேக்கேஜ் டிராக்கர்கள் ஆபத்தான பொருட்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டவை. மேலும், அவற்றின் டிரான்ஸ்மிஷன் செயல்பாடு காரணமாக, டிராக்கர்கள் சோதனை செய்யப்பட்ட சாமான்களில் இருந்தால், அவற்றை விமானத்தின் போது ஆஃப் அல்லது செயலிழக்கப்பட வேண்டும்," என்று அது குறிப்பிடுகிறது.

இதை தான் லுஃப்தான்சா தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டுள்ளது.

WhatsApp பயனர்களே ஜாக்கிரதை.! அசல் போல போலி வாட்ஸ்அப்.! உங்க போன்ல WhatsApp பயனர்களே ஜாக்கிரதை.! அசல் போல போலி வாட்ஸ்அப்.! உங்க போன்ல "இது" இருக்கா?

ICAO விதியின் படி எந்த ஆப்பிள் சாதனத்தை விமானத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது?

ICAO விதியின் படி எந்த ஆப்பிள் சாதனத்தை விமானத்தில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது?

இருப்பினும், ICAO வழிகாட்டுதல்களைக் காரணமாகக் காட்டி, லுஃப்தான்சா ஏர் டேக்கை தடைசெய்தது தவறானது என்பதை அறிக்கை வெளிப்படுத்துகிறது.

லுஃப்தான்சா பேசும் கட்டுப்பாடு லித்தியம்-அயன் பேட்டரிகள் கொண்ட சாதனங்களைக் குறிப்பிடுகிறது.

இதில் 15' இன்ச் ஆப்பிள் மேக்புக் ப்ரோ (Apple MacBook Pro), செப் 2015 பிப்ரவரி 2017 க்கு இடையில் வாங்கப்பட்டது போன்ற பெரிய சாதனங்கள் செக்-இன் அல்லது ஹேண்ட் பேக்கேஜ் ஆக எடுத்துச் செல்லும் போது மட்டுமே இந்த விதி பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிளின் ஏர்டேக் பேட்டரி எப்படிப்பட்டது? உண்மை இது தானா?

ஆப்பிளின் ஏர்டேக் பேட்டரி எப்படிப்பட்டது? உண்மை இது தானா?

ஆப்பிளின் ஏர்டேக் (Apple AirTag) ஒரு சிறிய பேட்டரியில் இயங்குகிறது. இது வழிகாட்டுதல்களின் கீழ் சிக்கலாகக் கருதப்படுவதற்கு ஒப்பீட்டளவில் மிகச் சிறியது என்பதே உண்மை.

அதேபோல, ஏர்டேக் லித்தியம்-அயன் பேட்டரிகள் அல்லாத CR2032 செல்களைப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவை விதிமுறைகளின் கீழ் வராது என்று ICAO தெரிவித்துள்ளது.

விஷயம் முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது.

Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!Jio 5G & Airtel 5G யூஸ் பண்ண புது சிம் கார்டு வாங்க வேண்டுமா? உடனே படிங்க.!

ஏர்டேக் மீது தடை என்றால், லுஃப்தான்சா ஸ்மார்ட் வாட்ச்களையும் தடை செய்யுமா?

ஏர்டேக் மீது தடை என்றால், லுஃப்தான்சா ஸ்மார்ட் வாட்ச்களையும் தடை செய்யுமா?

அப்படி, CR2032 செல்கள் மூலம் விமானங்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்பட்டால், அதே செல்லில் இயங்கும் பல ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் நாம் விமானங்களில் தடை விதிக்க வேண்டும்.

ஆப்பிள் ஏர்டேக் மீதான லுஃப்தான்சாவின் தடைக்குப் பின்னால் மறைமுகமாக ஒரு காரணம் மறைந்திருக்கிறது.

ஏர்லைனை அடிக்கடி பயணிகளின் லக்கேஜ்களை தவறாக இடம் மாற்றிவிட்டு, பின்னர் அதைக் கண்டுபிடிக்கும் சங்கடத்தைக் குறைக்கவே இதுபோன்ற ஒரு நடவடிக்கையை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்போது இந்த விதியை வேறு எந்த ஏர்லைனும் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reason Why Airline Bans Passengers To Carry Apple AirTag With Their Luggage

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X