அலெர்ட்! Jio, Airtel-ஐ விட்டு.. திடீர்னு கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்! ஏன்?

|

நீங்கள் ஒரு ஜியோ வாடிக்கையாளராக அல்லது ஏர்டெல் கஸ்டமராக இருந்தால் மட்டும் அல்ல.. வோடாபோன் ஐடியாவின் சேவைகளை பெறுபவராக இருந்தாலும் சரி..

சமீபத்தில் உங்கள் நெட்வொர்க்கை (அதாவது Jio அல்லது Airtel அல்லது VI நெட்வொர்க்கை) பயன்படுத்தும் பலரும் அந்தந்த சேவையில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

தெரியாது என்றால்.. கட்டாயம் தெரிந்து கொள்ளவும்!

தெரியாது என்றால்.. கட்டாயம் தெரிந்து கொள்ளவும்!

ஏனெனில் இந்தியாவின் மிகப்பெரிய மூன்று டெலிகாம் நிறுவனங்களை கைவிட்டுள்ளது வெறும் ஒரு சிலர் அல்ல. லட்சக்கணக்கான வாடிக்க்கையாளர்கள் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ சேவையை விட்டு வெளியேறி உள்ளனர்!

ஏன்? என்ன காரணம்? எந்தெந்த நெட்வொர்க்கை விட்டு எத்தனை பேர் வெளியேறி உள்ளனர்? ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற டெலிகாம் நிறுவனங்களின் தற்போதைய நிலை என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரூ.240-க்கு இப்படி ஒரு லாபகரமான Jio திட்டம் இருக்குனு பலருக்கும் தெரியாது!ரூ.240-க்கு இப்படி ஒரு லாபகரமான Jio திட்டம் இருக்குனு பலருக்கும் தெரியாது!

ஏர்டெல், ஜியோவிற்கே இந்த நிலைமையா?

ஏர்டெல், ஜியோவிற்கே இந்த நிலைமையா?

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா என அனைத்துமே, கடந்த ஜூலை 2022-இல் பல எண்ணிக்கையிலான ஆக்டிவ் யூசர்களை (அதாவது நிறுவனத்தின் சேவைகளை தொடர்ச்சியாக பெற்றுவந்த பயனர்களை) இழந்துள்ளன.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம், தலா 1 மில்லியன் ஆக்டிவ் யூசர்களை இழந்துள்ளது. இதன் விளைவாக கடந்த ஜூலை மாதத்தில் இவ்விரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையானது முறையே 382 மில்லியன் மற்றும் 356 மில்லியன் ஆக குறைந்தது.

வோடாபோன் ஐடியாவின் நிலை இன்னும் மோசம்!

வோடாபோன் ஐடியாவின் நிலை இன்னும் மோசம்!

சமீப காலமாக விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியாவானது ஏற்கனவே நிதி தொடர்பான சிக்கல்களாலும், ஏர்டெல் மற்றும் ஜியோவிடம் இருந்து வரும் நெருக்கடிகளாலும் - போராடி வருகிறது!

இதற்கிடையில் இந்நிறுவனம், கடந்த 2022 ஜூலையில் 1.7 மில்லியன் பயனர்களை இழந்துள்ளது. இதன் விளைவாக விஐ-யின் ஆக்டிவ் யூசர்களின் எண்ணிக்கை ஆனது 217 மில்லியன் ஆக குறைந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

திடீரென்று மக்கள் கொத்து கொத்தாக வெளியேற என்ன காரணம்?

திடீரென்று மக்கள் கொத்து கொத்தாக வெளியேற என்ன காரணம்?

நிபுணர்களின் கூற்றுப்படி, கடந்த குளிர்காலத்தில் இந்திய டெலிகாம் ஆபரேட்டர்களால் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுகள் ஆனது, மொபைல் சேவைகளுக்காக மக்கள் செய்யும் செலவை அதிகரித்தது.

அதன் விளைவாகவே ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ வாடிக்கையாளர்கள் தத்தம் சேவைகளை விட்டு வெளியேறி, தங்கள் பட்ஜெட்டிற்கு ஏதுவான திட்டங்களை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்துள்ளன.

இப்போதே இப்படியென்றால்.. 5G வந்ததும்?

இப்போதே இப்படியென்றால்.. 5G வந்ததும்?

4ஜி சேவைகளை வழங்குவதில் முன்னோடிகளாக திகழும் ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கே இந்த நிலைமை என்றால், இவ்விரு நிறுவனங்களும் "விலை உயர்வான" 5G சேவைகளை அறிமுகப்படுத்தியவுடன் என்னென்ன நடக்கும் என்பதை யூகிக்கவே முடியவில்லை.

குறிப்பாக, தொடர்ச்சியான இயலாமையை வெளிப்படுத்தும் வோடாபோன் ஐடியாவின் நிலை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

5ஜி வந்ததும் 4ஜி விலை குறையுமா?

5ஜி வந்ததும் 4ஜி விலை குறையுமா?

அதுகுறித்த சரியான தகவல்கள் இல்லை! இந்தியாவில் 5ஜி அறிமுகமானதும் 4ஜி திட்டங்களின் விலைகள் குறைக்கப்படுமா?

கண்டிப்பாக 5ஜி திட்டங்களின் விலை அதிகமாகவே இருக்கும். ஆக மக்கள் தொடர்ந்து 4ஜி சேவைகளிலேயே இருப்பார்களா? அல்லது 5ஜி சேவைக்கு மாறுவார்களா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் கிடைக்க, இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகலாம்!

இப்படியொரு நிலையிலும்.. தொடர்ந்து கெத்து காட்டும் ஜியோ!

இப்படியொரு நிலையிலும்.. தொடர்ந்து கெத்து காட்டும் ஜியோ!

பெரிய எண்ணிக்கையிலான ஆக்டிவ் யூசர்களை இழந்து இருந்தாலும் கூட, ஆக்டிவ் யூசர்ஸ் மார்க்கெட்டில், ஜியோ நிறுவனம், 37.7% பங்குகளுடன் அதன் "தலைமையை" தக்க வைத்துக்கொண்டுள்ளது.

அதே நேரத்தில் ஏர்டெல் மற்றும் விஐ-யின் ஆக்டிவ் யூசர்ஸ் சந்தை பங்குகள் ஆனது (ஜூலை மாதத்தில்) முறையே 35.2% மற்றும் 21.4% ஆக இருந்தன.

சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!

இதெல்லாம் சரி.. BSNL நிலை என்ன?

இதெல்லாம் சரி.. BSNL நிலை என்ன?

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆனது 0.01 மில்லியன் யூசர்களை சேர்த்துள்ளதாக அறிவித்து உள்ளது.

அதுமட்டுமில்லாமல், கடந்த ஜூலை மாதத்தில் இந்நிறுவனத்தின் வயர்டு பிராட்பேண்ட் பயனர்களின் எண்ணிக்கை ஆனது 3.9 மில்லியனாக உயர்ந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Reason Behind Why Reliance Jio Airtel Vodafone Idea Lost Millions of Active Users Recently

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X