இது மோசடி மாதிரில இருக்கு.! 28 நாள் ரீசார்ஜ் பிளான் பின்னணியில் உள்ள பகிரங்கமான உண்மை.!

|

Jio, Airtel மற்றும் Vi பயனர்கள் ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்யும் போது, 28 நாள் வேலிடிட்டி, 84 நாள் வேலிடிட்டி என்று பல்வேறு வேலிடிட்டி உடன் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்களைக் கட்டாயமாகக் கவனித்திருப்பார்கள். ஏன், நீங்களே இந்த விஷயத்தை எல்லாம் கட்டாயம் நோட் செய்திருப்பீர்கள். இந்த ரீசார்ஜ் திட்டங்களுக்கு பின்னணியில் மறைத்திருக்கும் ஒரு பகிரங்கமான மறைமுக உண்மையைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

28 நாள் வேலிடிட்டி பின்னால் இப்படி ஒரு உண்மை மறைக்கப்பட்டுள்ளதா?

28 நாள் வேலிடிட்டி பின்னால் இப்படி ஒரு உண்மை மறைக்கப்பட்டுள்ளதா?

நம்மில் பெரும்பாலானோர் வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை நிராகரித்துவிடுகிறோம். இதற்கான முக்கிய காரணம், அவை அதிக விலை கொண்டதாக இருக்கிறது. இதற்குப் பதிலாக நாம், பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் ஒரு மாதத்திற்கு நெருக்கமான ரீசார்ஜ் திட்டத்தையோ அல்லது 3 மாதத்திற்கு நெருக்கமான ரீசார்ஜ் திட்டத்தையோ தான் ரீசார்ஜ் செய்கிறோம். இதனால், நமக்கு லாபம் என்று சிலர் கருதலாம், ஆனால், உண்மை அதுவல்ல.

28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை வைத்து டெலிகாம் நிறுவனங்கள் எப்படி லாபம் பார்க்கின்றன?

28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை வைத்து டெலிகாம் நிறுவனங்கள் எப்படி லாபம் பார்க்கின்றன?

இந்த திட்டங்களால் டெலிகாம் நிறுவனத்திற்கு மாட்டும் தான் ஏகபோக லாபம் கிடைக்கிறது என்பதே உண்மையாகும். மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை நாம் தேடும் போது, ​​28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களைத் தான் நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால், ஒரு மாதத்திற்கு 30 அல்லது 31 நாட்கள் இருக்கும் போது, டெலிகாம் நிறுவனங்கள் ஏன் 28 நாள் வேலிடிட்டி உடன் மட்டும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன என்று என்றாவது யோசித்துள்ளீர்களா?

Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!Unknown Number விபரங்களை இலவசமாக தெரிந்துகொள்வது எப்படி? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

ஒரு மாதத்திற்கு 30 அல்ல 31 நாள்.. பிறகு ஏன் 28 நாட்களுக்கு மட்டும் வேலிடிட்டி?

ஒரு மாதத்திற்கு 30 அல்ல 31 நாள்.. பிறகு ஏன் 28 நாட்களுக்கு மட்டும் வேலிடிட்டி?

ஏன் டெலிகாம் நிறுவனங்கள் இரண்டு நாட்கள் குறைவான வேலிடிட்டியை தருகிறது? சில அடிப்படைக் கணக்கீடுகளைச் செய்து பார்த்தால், இதற்குப் பின்னால் இருக்கும் உண்மை உங்களுக்கே புரிந்துவிடும். இப்படி 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது, ஒரு வருடத்தில் 13 முறை ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை. ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் தான் என்றாலும் கூட, நீங்கள் 13 மாதத்திற்கு ரீசார்ஜ் செய்கிறீர்கள்.

இது தான் தந்திரமா? 12 மாத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்கிறோமா? எப்படி?

இது தான் தந்திரமா? 12 மாத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்கிறோமா? எப்படி?

இங்கு தான் நிறுவனங்கள் உங்களைச் சாமர்த்தியமாக அவர்களின் வலையில் சிக்க வைக்கிறார்கள். 12 மாதங்களுக்கு 28 நாள் என்ற விதத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் போது, உங்களுக்கு 336 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், ஒரு வருடத்திற்கு 365 நாட்களை நாம் கொண்டுள்ளோம். இந்த திட்டங்களால், 29 நாட்கள் நமக்குக் குறைவாகிறது. எனவே, பயனர்கள் சுழற்சியை முடிக்க ஒரு கூடுதல் முறை ரீசார்ஜ் செய்ய முனைகின்றனர் என்பதே உண்மை.

WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!

இதனால் டெலிகாம் நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?

இதனால் டெலிகாம் நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?

இத்தகைய தந்திரமான அமைப்பு மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூடுதல் பணம் சம்பாதிக்கின்றன. இது எவ்வளவு கூடுதல் என்று தெரியுமா? ஜூலை 2022 நிலவரப்படி, ஏர்டெல் 35.48 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த பயனர்கள் ஏர்டெல் ரூ.179 திட்டத்திற்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரீசார்ஜ் செய்தால், நிறுவனம் சுமார் ரூ.6,350 கோடி வருமானம் ஈட்டும். இதேபோல், ஜியோவுக்கு சுமார் 40.8 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர், இதன் மூலம் சுமார் ரூ.8,527 கோடியை Jio சம்பாதிக்கும்.

84 நாள் ரீசார்ஜ் திட்டம் பின்னால் கூட இப்படி ஒரு தந்திரம் கையாளப்படுகிறதா?

84 நாள் ரீசார்ஜ் திட்டம் பின்னால் கூட இப்படி ஒரு தந்திரம் கையாளப்படுகிறதா?

84 நாள் ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யும் போதும், உங்களுக்கு வெறும் 336 நாள் செல்லுபடி தான் கிடைக்கிறது. இதன் மூலமும், ஒரு வருடக் கணக்கை முடிக்க நீங்கள் கூடுதலாக 1 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது. வெவ்வேறு ஆபரேட்டர்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை வெவ்வேறு விலை வரம்புகளில் வெவேறு நன்மைகளில் வழங்கினாலும், இறுதியில், ஒரு ஆண்டிற்கு நீங்கள் ஒரு முறை கூடுதலாகத் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டியதுள்ளது.

உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!உங்க போன் ஸ்லோவா இருக்கா? அடிக்கடி ஹேங் ஆகுதா? இதை செஞ்சா போன் ஸ்பீடு பிச்சுக்கும்.!

இழப்பு இல்லாத நியாயமான ரீசார்ஜ் திட்டம் வேண்டுமா? அப்போ இதை தான் செய்யணும்!

இழப்பு இல்லாத நியாயமான ரீசார்ஜ் திட்டம் வேண்டுமா? அப்போ இதை தான் செய்யணும்!

நீங்கள் மலிவான திட்டத்தைத் தேர்வுசெய்ய விரும்பினால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதன் வேலிடிட்டியை மேலும் குறைக்கும் என்பதை மறக்காதீர்கள். இதனால், நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். உங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என்றாலும், நியாயமான ரீசார்ஜ் திட்டம் வேண்டும் என்றால், நீங்கள் ஒரு வருடம் முழுமையாகச் செல்லுபடியாகும் 365 நாள் ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

மக்களுக்காக TRAI போட்ட உத்தரவு என்ன தெரியுமா?

மக்களுக்காக TRAI போட்ட உத்தரவு என்ன தெரியுமா?

இந்த தந்திரம் TRAI இன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு இப்போது நிறுவனங்கள் 30 நாள் முழுமையாகச் செல்லுபடியாகும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. 12 மாதங்களுக்குப் பதிலாக 13 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய நுகர்வோரின் வேண்டுகோளைப் பார்த்து, TRAI - இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாதாந்திர செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்க உத்தரவிட்டது.

இப்போது 30 நாள் வேலிடிட்டி உடன் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கிறதா?

இப்போது 30 நாள் வேலிடிட்டி உடன் Jio, Airtel, Vi ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கிறதா?

காலண்டர் மாதத்தின் 30 அல்லது 31 நாட்களைப் பொருட்படுத்தாமல் மாதாந்திர வேலிடிட்டியுடன் வரும் திட்டத்தை டெலிகாம் ஆபரேட்டர்கள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது முழு மாதத்தில் 30 நாள் செல்லுபடியாகும் திட்டமாகும். அதேபோல், ஏர்டெல் மற்றும் விஐ கூட இப்போது முழு மாதம் செல்லுபடியாகும் மாதாந்திர வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி ரீசார்ஜ் செய்யும் போது, இந்த விஷயங்களை அறிந்து ரீசார்ஜ் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Reason Behind Why Jio Airtel and Vi Offers 28 Days Validity Plan But Not 30 Days Monthly Recharge

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X