India

இஸ்ரோவின் GSAT-24 சாட்டிலைட் ஏன் பிரெஞ்சு ராக்கெட்டில் ஏவப்பட்டது? GSLV-க்கு என்ன ஆச்சு?

|

இஸ்ரோ (ISRO) செய்யாத சாதனையா? இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் தொட்டு பார்க்காத எல்லைகளா? அப்படி இருக்கும் போது இந்திய செயற்கைகோள் ஆன ஜிசாட்-24 ஏன் ஒரு பிரெஞ்சு ராக்கெட் வழியாக விண்ணில் ஏவப்பட்டது என்கிற குழப்பம், சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம்.

அதற்கு என்ன காரணம்? என்பதோடு சேர்த்து, GSAT-24 என்றால் என்ன? இந்த சாட்டிலைட்டின் நோக்கம் என்ன? இதற்காக இஸ்ரோவின் சக்திவாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏன் பயன்படுத்தப்படவில்லை? எல்லா விவரங்களையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்!

இந்த செயற்கைகோள் ஏன் இந்தியாவில் இருந்து ஏவப்படவில்லை?

இந்த செயற்கைகோள் ஏன் இந்தியாவில் இருந்து ஏவப்படவில்லை?

நேற்று (அதாவது வியாழன், ஜூன்.23, 2022), நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்-க்காக (NewSpace India Limited - NSIL) இஸ்ரோவால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் ஜிசாட்-24 செயற்கைக்கோள், பிரெஞ்சு நிறுவனமான ஏரியன்ஸ்பேஸில் (Arianespace) உள்ள அதன் ஏரியன் 5 ஸ்பேஸ் லான்ச்சில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த இடத்தில், ஒரு இந்திய செயற்கைகோள் ஆனது தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள குரோவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது ஏன்? என்கிற எழுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அது குறித்த விளக்கத்தை அறியும் முன் ஜிசாட்-24 என்றால் என்ன? அதன் நோக்கங்கள் என்னென்ன என்பதை பற்றி "டக்-டக்கென்று" பார்த்து விடலாம்; அப்போது தான் நம்மால் சில குறிப்பிட்ட விடயங்களை புரிந்துகொள்ள முடியும்.

ஜிசாட்-24 என்றால் என்ன?

ஜிசாட்-24 என்றால் என்ன?

ஜிசாட்-24 என்பது 4180 கிலோ எடையுள்ள 24-கு பேண்ட் கம்யூனிகேஷன் சாட்டிலைட் (24-Ku band communication satellite) ஆகும். இரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இதன் முக்கிய நோக்கம் - பான் இந்தியா கவரேஜின் கீழ் டிடிஎச் பயன்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதே ஆகும்.

NSIL என்று அறியப்படும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் ஆனது ஜிசாட்-24 செயற்கைக்கோளின் முழு கேப்பாசிட்டி-ஐயும் டாடா பிளே-விற்காக (Tata Play) குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அப்போ இவ்ளோ வருஷம் Windows 98-ஐ வச்சி தான் Mars-ல தண்ணீ தேடுனீங்களா?அப்போ இவ்ளோ வருஷம் Windows 98-ஐ வச்சி தான் Mars-ல தண்ணீ தேடுனீங்களா?

இஸ்ரோ, இப்படி செய்வது இதுவே முதல் முறை!

இஸ்ரோ, இப்படி செய்வது இதுவே முதல் முறை!

கமெர்ஷியல் பயன்பாட்டிற்காக, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் மற்றும் அதற்கு சொந்தமான மற்றும் அதன் நிதியுதவியுடன், இஸ்ரோவால் கட்டமைக்கப்பட்ட முதல் டிமாண்ட் ட்ரைவன் சாட்டிலைட் (demand driven satellite) இதுவாகும்.

இந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆனது BSS Ku-band இன் கீழ், செயற்கைக்கோள் அடிப்படையிலான DTH மற்றும் VSAT சேவைகளை அதிகரிப்பதற்கான முதன்மை நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நாம் இங்கே பேசும் 24 கு-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் ஆனது மேம்படுத்தப்பட்ட எஃபெக்டிவ் ஐசோட்ரோபிக் ரேடியடட் பவர் வழியாக (Effective Isotropic Radiated Power - EIRP) இந்திய நிலப்பகுதி, அந்தமான் & நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளை "கவரேஜ் செய்யும்".

இதனால் நமக்கு என்ன பயன்?

இதனால் நமக்கு என்ன பயன்?

மேம்படுத்தப்பட்ட EIRP ஆனது ஒரே ஸ்பெக்ட்ரமுக்குள் அதிக DTH சேனல்கள், அதிக HD சேனல்கள் அல்லது கூடுதல் ரெயின் ஃபேட் மார்ஜின் (Rain fade margin) உடன் கூடிய சிஸ்டம் ரோபஸ்ட்னஸ்-ஐ (System robustness) உருவாக்கும்.

மேலும் டெலிகம்யூனிக்கேஷன்ஸ் மற்றும் டிஜிட்டல் சினிமா, ஹை ஸ்பீட் பேக்ஹால் லிங்க்ஸ், பல்க்-டேட்டா டிரான்ஸ்பர் போன்ற வளர்ந்து வரும் ஆப்களுக்கும் இது பக்கபலமாக இருக்கும்.

இது ஏன் ஒரு பிரெஞ்சு ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது?

இது ஏன் ஒரு பிரெஞ்சு ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது?

எளிமையாக கூற வேண்டும் என்றால் - தற்போது வரையிலாக, ​​4 டன்களுக்கு மேல் எடையுள்ள செயற்கைக்கோளை புவிசார் சுற்றுப்பாதைக்குள் தூக்கி செல்லும் திறன் கொண்ட விண்வெளி ஏவுகணை ராக்கெட், இந்தியாவிடம் இல்லை. முன்னரே குறிப்பிட்டபடி, ஜிசாட்-24 ஆனது 4180 கிலோ எடையை கொண்டது, அதாவது 4 டன்களை விட அதிகம்!

Metaverse: ஓவர் பில்ட்-அப் செய்யப்படுகிறதா? அல்லது உண்மையான தொழில்நுட்ப புரட்சியா?Metaverse: ஓவர் பில்ட்-அப் செய்யப்படுகிறதா? அல்லது உண்மையான தொழில்நுட்ப புரட்சியா?

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால்..?

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால்..?

ஒரு சுற்றுப்பாதையானது பூமியின் சுழற்சி காலத்திற்கு சமமான சுற்றுப்பாதை காலத்தைக் கொண்டுள்ளது. எனவே (Ground observers) கிரவுண்ட் அப்சர்வர்களுக்கு, (மேலே உள்ள) எதுவும் அசைவற்றதாக தெரியும், அதாவது வானத்தில் ஒரு நிலையான இடத்தில் இருப்பது போலவே தெரியும்!

இதனாலேயே, தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் புவிசார் சுற்றுப்பாதையிலேயே வைக்கப்படுகின்றன.

எனவே பூமியை அடிப்படையாகக் கொண்ட செயற்கைக்கோள் ஆண்டெனாக்கள் (அதாவது பூமியில் அமைந்துள்ள ஆண்டெனாக்கள்) அவற்றை கண்காணிக்க சுழல வேண்டிய அவசிய இல்லை. ஆனாலும் செயற்கைக்கோள்கள் வானில் எங்கே உள்ளது என்பதை நிரந்தரமாக சுட்டிக்காட்டும்.

அப்போது இந்திய ராக்கெட்டின் அதிகபட்ச

அப்போது இந்திய ராக்கெட்டின் அதிகபட்ச "சக்தி" தான் என்ன?

இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஆன GSLV Mk3 மூலம், அதிகபட்சமாக 4 டன் எடையுள்ள சாட்டிலைட்டை புவிசார் சுற்றுப்பாதைக்கு தூக்கி செல்ல முடியும்.

ஆனால் அதே GSLV Mk3 மூலம் GSAT-24 போன்ற சற்றே அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை புவிசார் சுற்றுப்பாதைக்குள் செலுத்த முடியாது. இரண்டிற்கும் வெறும் 180 கிலோ மட்டுமே வித்தியாசம் என்றாலும் கூட, முடியாது என்றால் முடியாது தான்!

Photo Courtesy: NSIL, ISRO, Wikipedia

Most Read Articles
Best Mobiles in India

English summary
Here is the reason behind why the Indian satellite GSAT 24 was launched using a French rocket Why not ISRO's powerful rocket GSLV?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X