வாய்ப்பை மிஸ் பண்ணாதிங்க:ரியல்மீ இளைஞர்கள் தின விற்பனை-அட்டகாச தள்ளுபடிகள் அறிவிப்பு!
ரியல்மீ இளைஞர்கள் தின விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையானது ஆகஸ்ட் 24 முதல் ஐந்து நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

இளைஞர்கள் தின விற்பனை
ரியல்மீ நிறுவனம் இளைஞர்கள் தின விற்பனையை அறிவித்துள்ளது. ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ள சலுகையானது ரியல்மி.காம், அமேசான் இந்தியா, பிளிப்கார்ட் மற்றும் அதன் ஆஃப்லைன் கடைகள் வழியாக ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 28 வரை நடக்கிறது. இந்த விற்பனையில் ரியல்மீ பொருட்களுக்கு 60 சதவீதம் வரை விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆடியோ சாதனங்கள்
ரியல்மீ இளைஞர்கள் தின விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆடியோ சாதனங்கள் என அனைத்துக்கும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர்தின விற்பனையானது ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28 முதல் ஐந்து நாட்களுக்கு நடக்கிறது.

60 சதவீதம் வரை தள்ளுபடி
இந்த அறிவிப்பில் ஸ்மார்ட்போன்கள், இயர்போன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க முடியும் என நிறுவனம் கூறுகிறது. இதில் அறிவிக்கப்பட்டுள்ள ஃபிளாஷ் ஒப்பந்தங்கள் தினமும் மதியம் 12 மணிக்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் விற்பனை அறிவிப்பு
இந்த ஐந்து நாட்களில் ரியல்மி 6, ரியல்மீ எக்ஸ் 2 ப்ரோ மற்றும் பிற சாதனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை அறிவிப்பில் ரியல்மீ 6, ரியல்மீ எக்ஸ் 2 ப்ரோ, ரியல்மீ எக்ஸ் மற்றும் ரியல்மீ எக்ஸ் 50 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களில் விலை குறைவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மீ வாட்ச் மற்றும் ரியால்மீ பேண்ட்
அதுமட்டுமின்றி ரியல்மீ வாட்ச் மற்றும் ரியால்மீ பேண்ட் ஆகியவற்றுக்கும் ரியல்மீ இளைஞர் தின விற்பனையில் தள்ளுபடிகள் கிடைக்கிறது. ரியல்மி பேண்ட் மதியம் 12 மணிக்கு ஃபிளாஷ் விற்பனையில் ரூ .1,169 தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

4.5 மணிநேர பேட்டரி ஆயுள்
ரியல்மீ பட்ஸ் கியூ ஒரு புதிய ஆடியோ சாதனமாகும், இது ஜூன் 2020 இந்தியாவில் ரூ.1,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சாதனம் 4.5 மணிநேர பேட்டரி ஆயுள் வரை கிடைக்கின்றன. இந்த ஆடியோ சாதனங்களில் தள்ளுபடிகள் என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ரியல்மீ 6 ஸ்மார்ட்போன் தள்ளுபடி
ரியல்மீ 6 போனில் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இதில் 4 ஜிபி + 64 ஜிபி மாறுபாடுக்கு ரூ.13,999 க்கு கிடைக்கும். அதேபோல் 6 ஜிபி + 64 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.14,999 எனவும் 6 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.15,999 விலையிலும், 8 ஜிபி + 128 ஜிபி மாறுபாடு ரூ.16,999 என்ற விலையிலும் realme.com, பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும்.

10000mAh பவர் பேங்க்
ரியல்மீ பட்ஸ் வயர்லெஸ் ரூ.1,599 விலையில் கிடைக்கிறது. ரியல்மீ 30W டார்ட் சார்ஜ் 10000mAh பவர் பேங்க் ரூ.1,899 விலையிலும், ரியல்மீ பேண்ட் ரூ.1,299 விலையிலும்,
ரியல்மீ வாட்ச் ரூ.3,499 விலையிலும் கிடைக்கிறது. ரியல்மீ பட்ஸ் ஏர் ரூ.3,899 மற்றும் ரியல்மீ பட்ஸ் ஏர் நியோ ரூ.2,499 விலைக்கும் கிடைக்கும் ன தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications