நிறுவனம் அதிர்ந்திருக்கும்., அதிரடி லீக்: ரியல்மி எக்ஸ்9 ப்ரோ விலை, சிறப்பம்சங்கள் கசிவு!

|

ரியல்மி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ் 9 ப்ரோ ஆகும். தற்போது வரை இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பான கசிவுகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது.

நிறுவனம் அதிர்ந்திருக்கும்., அதிரடி லீக்: ரியல்மி எக்ஸ்9 ப்ரோ கசிவு!

இதுகுறித்து கடந்த மார்ச் மாதத்தில் வெளியான கசிவில் ரியல்மி எக்ஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் 108 எம்பி கேமரா சென்சார் மற்றும் 90 ஹெர்ட்ஸ் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் ரியல்மி எக்ஸ் 9 மற்றும் ரியல்மி எக்ஸ் 9 ப்ரோ விவரக்குறிப்புகள் மற்றும் விலை ஆன்லைனில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ரியல்மி எக்ஸ் 9 மற்றும் எக்ஸ் 9 ப்ரோவின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை ஆன்லைனில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புதிய கசிவு ரியல்மி எக்ஸ் 9 ப்ரோ விவரக்குறிப்புகள் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்த முறை மைஸ்மார்ட் பிரைஸ் மூலமாக வெய்போவில் ஆர்சனல் என்ற டிப்ஸ்டரில் கசிவுத் தகவல் வெளியாகியுள்ளது.

ரியல்மி எக்ஸ் 9 ப்ரோ குறித்து கசிந்த விவரக்குறிப்புகள்படி, ரியல்மி எக்ஸ் 9 ப்ரோ 6.55 இன்ச் சாம்சங் எக்ஸ் 3 சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் டிஸ்ப்ளே மைக்ரோ வளைந்த பேனல் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி-க்கு மாற்றாக ஸ்னாப்டிராகன் 875 சிப்செட்டை பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது. செயலி எல்பிபிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் யுஎஃப்எக்ஸ் 3.1 சேமிப்புடன் இயக்கப்படும்.

ரியல்மி எக்ஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்புறத்தில் 50 எம்பி முதன்மை கேமரா, 16 எம்பி செகண்டரி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை பி&டபிள்யூ சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. அதேபோல் டிப்ஸ்டர் மூலம் வெளியான ரியல்மி எக்ஸ் 9 ப்ரோ பிற அம்சங்கள் குறித்து பார்க்கையில்., முன் மற்றும் பின்புறத்தில் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருக்கிறது. இரட்டை ஸ்பீக்கர்கல், 6 சீரிஸ் அலுமினிய பிரேம், என்எஃப்சி, டால்பி சவுண்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன.

ரியல்மி எக்ஸ் 9 ப்ரோ சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கையில், ரியல்மி எக்ஸ் 9 இரட்டை சேமிப்பு விருப்பங்களில் வரக்கூடும். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.30,900 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்புப்படி ரூ.34,300 ஆக இருக்கிறது. மேலும் தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் முதன்மை ஸ்மார்ட்போன்களை எம்ஐ 11எக்ஸ் மற்றும் ஐக்யூ 7 ஆகிய மாடல்களுக்கு எதிராக இருக்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme X9 Pro May Launching With this Features: Specs, price Leak

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X