Home
News

Realme X7 மற்றும் Realme X7 Pro போனை வெறும் 70% கட்டணம் மட்டும் செலுத்தி வாங்க ஒரு நல்ல சான்ஸ்..

ரியல்மி நிறுவனம் ஒரு வழியாக இன்று தனது ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி நிறுவனம் ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் முழு விபரங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி

ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி

ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் வரும் பிப்ரவரி 12ம் தேதி முதல் பிளிப்கார்ட், ரியல்மி வலைத்தளம் மற்றும் ஆப்லைன் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி பிப்ரவரி 10ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

ரியல்மி எக்ஸ் 7 போனின் 6ஜிபி மற்றும் 128 ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ.19,999 என்ற விலையிலும், இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.21,999 என்ற விலையிலும் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மாடல் ரூ.29,999 என்ற விலையில் கிடைக்கும்.

70% தொகை மட்டும் செலுத்தினால் போதும்

70% தொகை மட்டும் செலுத்தினால் போதும்

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் நெபுலா மற்றும் ஸ்பேஸ் சில்வர் வண்ணங்களில் வருகிறது. ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ மிஸ்டிக் பிளாக் மற்றும் பேண்டஸி வண்ணங்களில் வருகிறது. ரியல்மி தற்பொழுது அறிமுகம் செய்துள்ள ரியல்மி அப்கிரேட் ப்ரோக்ராம் மூலம் பயனர்கள் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை வெறும் 70% தொகையை மட்டும் செலுத்திப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் கேஷ் பேக் சலுகை

கூடுதல் கேஷ் பேக் சலுகை

இத்துடன் கூடுதல் கேஷ் பேக் சலுகையையும் நிறுவனம் வழங்குகிறது. ICICI வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ.2000 மதிப்பிலான இன்ஸ்டன்ட் கேஷ் பேக் சலுகை கிடைக்கிறது. அதேபோல், Axis கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1500 மதிப்பிலான கேஷ் பேக் சலுகை கிடைக்கிறது. மிரட்டலான 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ மாடலை செலக்ட் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Realme X7, Realme X7 Pro launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X