மே 31 அறிமுகம் உறுதி., அதுவும் இந்தியாவில்: ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் விலை, அம்சம் இதுதான்!
ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் சாதனம் மே 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி உடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ்
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மே 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யும் எனவும் அன்றைய தினம் மதியம் 12:30 மணிக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் இந்தியாவில் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி உடன் வரும் முதல் தொலைபேசியாக இது இருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்
அதேபோல் ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் உடன் புதிய ஸ்மார்ட்டிவி 4கே ஐ 43 இன்ச் மற்றும் 50 இன்ச் அளவுகளில் டால்பி மற்றும் வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் சாதனத்தின் சேமிப்பு மற்றும் வண்ண விருப்பங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் இரண்டு சேமிப்பு விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது.

8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம்
ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மெர்குரி சில்வர், அஸ்டெராய்ட் பிளாக் மற்றும் மில்க்கி வே ஆகிய வண்ண விருப்பத்தில் கிடைக்கும். அதேபோல் ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் சாதனங்களின் விலை குறித்து பார்க்கலாம். ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.27,999 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.30,999 ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே
ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் ஸ்மார்ட்போன் 6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. 0: 9 விகித விகிதம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. 91.7% உடல் விகித அளவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு உடன் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இதில் இருக்காது என கூறப்படுகிறது. ரியல்மி யுஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி உடன் 50 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் 16 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யும் எனவும் கூறப்படுகிறது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா
ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் என டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி வசதிக்கென 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
File Images


Click it and Unblock the Notifications