தட்டி தூக்கலாம்., சும்மா இல்ல ரூ.6000 தள்ளுபடி: ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி வாங்க சரியான நேரம்- டைம் இல்ல!

|

இந்திய சந்தைககளில் சமீப காலமாக மிகவும பிரபலமான ஸ்மார்ட்போனாக இருப்பது ரியல்மி சாதனங்கள். ரியல்மி சாதனங்களில் மிகவும் பிரபலமானது ரியல்மி எக்ஸ் 7 மேக் 5ஜி ஸ்மார்ட்போனாகும். தற்போது ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி சாதனம் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி சாதனம் ரூ.6000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது பிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. மேலும் இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்

புதிய ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்

புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் சிறந்த ஸ்மார்ட்போன் அதிக தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் சாதனம் 5ஜி அம்சத்தோடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி சாதனத்தின் விலை மற்றும் தள்ளுபடிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5 ஜி சலுகைகள்

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5 ஜி சலுகைகள்

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்துக்கு மட்டுமே ரூ.6000 தள்ளுபடியுடன் வருகிறது. அதேபோல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்கள் மூலம் இந்த சாதனத்தை வாங்கும் நபர்களுக்கு சலுகை கிடைக்கிறது. ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆனது அடிப்படை மாடல் ஆகும். இதன் விலை ரூ.26,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999-க்கு கிடைக்கிறது.

12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட்

12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்ட்

அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் சாதனமும் மேம்பட்ட ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி மாடலாக இருக்கிறது. இந்த ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி 12 ஜிபி ரேம் மாடலானது ரூ.29,999 ஆக இருந்த நிலையில், இந்த சாதனம் தற்போது ரூ.26,999-க்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் அறிவிக்கப்பட்ட தள்ளுபடியுடன் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் அறிவிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் சலுகையானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே தள்ளுபடிகள்

குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே தள்ளுபடிகள்

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் வழங்கப்படும் இந்த சலுகையானது செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது மெர்குரி சில்வர் மற்றும் ஆஸ்டிராய்டு பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080 x 2400 பிக்சல்கள்) ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் கூடிய சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமென்ஷன் 1200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் கூடுதல் சேமிப்பு விரிவாக்கத்துக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் இதில் இருக்கிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது 50 வாட்ஸ் சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இதில் 4500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை 16 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது டால்பி அட்மோஸ் மற்றும் உயர் ரெஸ் ஆடியோ வசதியோடு வருகிறது. மேலும் இந்த சாதனத்தில் பாதுகாப்பு வசதிக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.

64 மெகாபிக்சல் பின்புற கேமரா

64 மெகாபிக்சல் பின்புற கேமரா

ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தின் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் பின்புற கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் கேமரா அம்சங்களில் 4கே வீடியோ பதிவு, சூப்பர் நைட் மோட், பனோரமா ஏஐ, போர்ட்ரைட் மற்றும் எச்டிஆர் ஆதரவு ஆகியவை அடங்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme x7 max 5g Smartphone Gets Huge Discount in Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X