Home
News

ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வசதி இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அப்டேட் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

குறிப்பாக இந்த அப்டேட் ஆனது டிஸ்பிளே, கேமரா மற்றும் மென்பொருள் செயல்திறன் போன்றவற்றில் சிறந்த மேம்பாடுகளை கொண்டுவருகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் வழங்கப்பட்டு இருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. அதோடு 6.44 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC, அட்ரினோ 650 ஜி.பீ.யு மற்றும் 12 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

இந்த சாதனத்தின் பின்புறம் 64 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர் எஃப் / 1.8, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா வசதி உள்ளது. ஸ்மார்ட்போனில் முன்பக்கத்தில் இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பு உள்ளது, இதில் 32 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 616 முதன்மை சென்சார் எஃப் / 2.5 லென்ஸும், 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸும் உள்ளது.

ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

ரியல்மே எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி 65W சூப்பர் சார்ஜிங் ஆதரவோடு 4,200 எம்ஏஎச் பேட்டரி வசதியும் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5 ஜி, 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இதில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் அம்சம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் வசதியுடன் ரியல்மே எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.

ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

மேலும் 6ஜிபி ரேம் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மே எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி மாடல் ரூ.39,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் மற்றும் 12ஜிபி ரேம் மாடல்கள் முறையே ரூ.41,999 மற்றும் 47,999-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme X50 Pro 5G Get UI 2.0 based on Android 11: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X