சரியான போட்டி: ரியல்மி X2 ப்ரோ Vs ரெட்மி K20 ப்ரோ: எது சிறந்தது?

|

கடந்த வாரம் சந்தையில் வந்த ரியல்மி எக்ஸ் 2 ப்ரோவின் விலையும் ரெட்மி கே20 ப்ரோவின் சராசரியாக ஒரே நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டிற்குமான அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மே எக்ஸ் 2 ப்ரோ:

ரியல்மே எக்ஸ் 2 ப்ரோ:

ரியல்மே எக்ஸ் 2 ப்ரோ 6.5 இன்ச் டியூ-டிராப் நோட்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே (2400x1080) பிக்சல்கள் கொண்டது. மேலும் முழுநீள டிஸ்ப்ளே வசதி அதாவது டிஸ்பிளேயிற்கும் விளிம்பிற்கும் சிறிய இடைவெளி மட்டுமே உள்ளது.

ரெட்மி கே 20 ப்ரோ:

ரெட்மி கே 20 ப்ரோ:

ரெட்மி கே 20 ப்ரோ 1080 x 2340 பிக்சல்கள், ஓஎல்இடி டிஸ்பிளே வசதி உள்ளது. 91.9 டிஸ்பிளேயுடன் கொண்ட இந்த போனின் டிஸ்பிளேயுக்கும் அதன் விழிம்பிற்கும் குறைவான இடைவெளி மட்டுமே உள்ளது.

ரியல்மி சற்று முன்னேற்றம்

ரியல்மி சற்று முன்னேற்றம்

டிஸ்பிளே வசதிகளை பொருத்தமட்டில் ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஒரு படி முன்னேறியுள்ளது, ஏனெனில் அதன் டிஸ்பிளே அமைப்பு பெரியது மற்றும் மென்மையான பயனர் அனுபவத்தை வழங்குவதற்கான புதுப்பிப்பு வசதியும் கொண்டுள்ளது.

ரியல்மே எக்ஸ் 2 ப்ரோ, ரெட்மி கே 20 ப்ரோ செயல்திறன்:

ரியல்மே எக்ஸ் 2 ப்ரோ, ரெட்மி கே 20 ப்ரோ செயல்திறன்:

ரியல்மே எக்ஸ் 2 ப்ரோ குவால்காமின் ஸ்னாப்டிராகன் 855+ ஆக்டா கோர் வசதி கொண்டது. 8 ஜிபி / 12 ஜிபி ரேம் வகையில் கிடைக்கிறது. அதேபோல் கூடுதலாக 128/256 ஜிபி மெமரி கார்ட் பொருத்திக் கொள்ளலாம். ரெட்மி கே 20 ப்ரோ, முந்தைய குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 ஆக்டா கோர் கோர் கொண்டது. 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளுடன் கிடைக்கிறது. இதிலும், ரியல்மே எக்ஸ் 2 ப்ரோ முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது.

எக்ஸ் 2 ப்ரோ கேமரா வசதி:

எக்ஸ் 2 ப்ரோ கேமரா வசதி:

எக்ஸ் 2 ப்ரோ பின்புறத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை குவாட்-கேமரா அமைப்பைப் பெறுகிறது, அதைத் தொடர்ந்து 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர், 8 மெகாபிக்சல் அகல-கோண கேமராவை பெற்றுள்ளதோடு 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் உள்ளது. அதோடு முன்புறத்தில், 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் உள்ளது.

பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தாய்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.!பப்ஜி கேம் விளையாடுவதை கண்டித்த தாய்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.!

ரெட்மி கே 20 ப்ரோ கேமரா:

ரெட்மி கே 20 ப்ரோ கேமரா:

ரெட்மி கே 20 ப்ரோ, 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் எஃப் / 1.8 இல் மூன்று கேமரா அமைப்பைப் பெறுகிறது, பி.டி.ஏ.எஃப் மற்றும் லேசர் ஏ.எஃப். இரண்டாவது கேமரா எஃப் / 2.4 மற்றும் 2 எக்ஸ் ஆப்டிகல் ஜூமில் 8 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. மூன்றாவது எஃப் / 2.4 இல் 13 மெகாபிக்சல் சென்சார் கொண்ட 124 டிகிரி அல்ட்ரா வைட் கேமரா உள்ளது. அதோடு பாப்-அப் 20 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஷூட்டர் இதில் உள்ளது. இதில் கே 20 ப்ரோ ஒரு கூர்மையான செல்ஃபி ஷூட்டரைப் பெறுகிறது, ​​எக்ஸ் 2 ப்ரோவில் முதன்மை கேமரா அமைப்பு பெற்றுள்ளது.

பேட்டரி மற்றும் சார்ஜிங்:

பேட்டரி மற்றும் சார்ஜிங்:

ரியல்மே எக்ஸ் 2 ப்ரோ 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இது ஒரு மணி நேரத்திற்குள் மொபைல் போனை முழுமையாக சார்ஜ் செய்யக்கூடியது. ரெட்மி கே 20 ப்ரோவும் அதே 4000 எம்ஏஎச் பேட்டரியை பெறுகிறது. இருப்பினும், சார்ஜிங் உள்ளமைவுடன் சிறிதில் மாற்றம் உள்ளது. ரியல்மே எக்ஸ் 2 ப்ரோ இந்த சூழ்நிலையிலும் அதே பேட்டரி அளவைக் கொண்டுள்ளது. கே 20 ப்ரோவை விட விரைவான சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

விலை நிர்ணயம்:

விலை நிர்ணயம்:

ரியல்மே எக்ஸ் 2 ப்ரோ இந்தியாவில் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அடிப்படை 8 ஜிபி / 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ .29,999, 12 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ .33,999. ரெட்மி கே 20 ப்ரோ, 8 ஜிபி / 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ .27,999 ஆகவும், 8 ஜிபி / 256 ஜிபி வேரியண்டிற்கு ரூ .30,999 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Realme X2 Pro Vs Redmi K20 Pro: Which One Is Your Favorite

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X