5ஜி போனில் இதுதான் விலை கம்மி: புதிய Realme V11 5G அறிமுகம்.. மிஸ் பண்ணிடாதீங்க.!

|

ரியல்மி நிறுவனம் ரியல்மி வி 11 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட 5ஜி ஸ்மார்ட்போன்களில் மிகவும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மி எக்ஸ் 7 திகழ்கிறது. ஆனால், இனி நிலைமை அப்படி இருக்காது என்பது உறுதிப்படுத்தும் விதத்தில் மிகவும் குறைந்த விலையில் இந்த புதிய Realme V11 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

ரியல்மி நிறுவனம் இந்த புதிய Realme V11 5G ஸ்மார்ட்போனை சீனா சந்தையில் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், விரைவில் இந்திய சந்தையிலும் பட்ஜெட் பிரிவில் இந்த Realme V11 5G அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Realme V11 5G முக்கிய சிறப்பம்சம்

Realme V11 5G முக்கிய சிறப்பம்சம்

Realme V11 5G ஸ்மார்ட்போன் மீடியாடேக் டைமென்சிட்டி 700 சிப்செட் உடன் 6ஜிபி ரேம் விருப்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6.5' இன்ச் எச்.டி பிளஸ் டிஸ்பிளேவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. ரியல்மி எக்ஸ் 7 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.19,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை விட குறைந்த இந்த Realme V11 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரூ. 4,999 விலையில் Lava Z1 ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. உடனே முந்துங்கள்..ரூ. 4,999 விலையில் Lava Z1 ஸ்மார்ட்போன் வாங்கலாம்.. உடனே முந்துங்கள்..

ரியல்மே வி 11 5 ஜி முழு சிறப்பம்ச விபரம்

ரியல்மே வி 11 5 ஜி முழு சிறப்பம்ச விபரம்

 • 6.52' இன்ச் 720 × 1200 பிக்சல்கள் எச்டி பிளஸ் டிஸ்பிளே
 • மீடியா டெக் டைமன்சிட்டி 700 சிப்செட்
 • 4 ஜிபி + 128 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ்
 • 1TB வரை எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜ்
 • அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI இயங்குதளம்
 • டூயல் கேமரா அமைப்பு
 • 13 எம்பி பிரைமரி சென்சார்
 • 2 எம்பி டெப்த் சென்சார்
 • 8 எம்பி செல்ஃபி ஸ்னாப்பர்
 • பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர்

  பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர்

  • டூயல் சிம்
  • 5 ஜி மற்றும் 4 ஜி எல்டிஇ வோல்டிஇ|
  • வைஃபை 802.11 பி / ஜி / என்
  • புளூடூத்
  • ஜிபிஎஸ்
  • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 5000 எம்ஏஎச் பேட்டரி
  • BSNL ரூ.18 திட்டம்: 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் & SMS நன்மை.. எத்தனை நாட்களுக்குத் தெரியுமா?BSNL ரூ.18 திட்டம்: 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் & SMS நன்மை.. எத்தனை நாட்களுக்குத் தெரியுமா?

   Realme v11 5G விலை

   Realme v11 5G விலை

   Realme v11 5G போனின் 4GB + 128GB வேரியண்ட் மாடல் இந்திய மத்தின்படி தோராயமாக ரூ. 13,518 என்ற விலையிலும், இதன் 6GB + 128GB மாடல் தோராயமாக ரூ. 15,800 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வைப்ராண்ட் ப்ளூ மற்றும் கோய்ட் க்ரெய் ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Realme V11 5G Is a Budget Smartphone With Specs Like HD Plus Display and 5G Support : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X