புது Realme Watch வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஜூன்.23 வரை வெயிட் பண்ணுங்க!

|

கேலண்டர், அலாரம், கடிகாரம், ரேடியோ, கேமரா என எப்படி ஒரு ஸ்மார்ட்போனிற்குள் எல்லாமே அடக்கமானதோ, அதை போலவே ஸ்மார்ட்வாட்சுகளும் கிட்டத்தட்ட வழிந்து நிரம்பும் அம்சங்களுடனேயே அறிமுகம் செய்யப்படுகின்றன.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை வைத்திருப்பதை போலவே ஒரு ஸ்மார்ட்வாட்ச்சை அணிந்து இருப்பதும் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது.

பட்ஜெட் + பிராண்ட் என்றாலே அது ரியல்மி தான்!

பட்ஜெட் + பிராண்ட் என்றாலே அது ரியல்மி தான்!

"ஒரு டீசன்ட் ஆன பட்ஜெட்டில், ஒரு பிராண்டட் ஸ்மார்ட்வாட்ச்" என்றதுமே நம் பலரின் புத்திக்குள்ளும் ரியால்மி வந்து குதிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் பட்ஜெட் + பிராண்ட் என்றாலே அது ரியல்மி தான்.

அப்படியான ரியல்மி நிறுவனத்தின் அடுத்த அறிமுகம், இந்தியாவில் வருகிற ஜூன் 23 அன்று மதியம் 12:30 மணிக்கு நடக்கும் என்கிற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவொரு ஸ்மார்ட்வாட்ச்சின் அறிமுகம் ஆகும்; குறிப்பிட்ட மாடலின் பெயர் - ரியல்மி டெக்லைஃப் வாட்ச் ஆர்100 (Realme Techlife Watch R100) ஆகும்.

ரியல்மி டெக்லைஃப் வாட்ச் ஆர்100-இல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியல்மி டெக்லைஃப் வாட்ச் ஆர்100-இல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.32 இன்ச் அளவிலான கலர் டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பை பொறுத்தவரை, இது ஒரு வட்ட வடிவ டயலை கொண்டிருக்கும் மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகும்.

நினைவூட்டும் வண்ணம், இதற்கு முன்னதாக இதே சீரிஸின் கீழ், ரியல்மி டெக்லைஃப் வாட்ச் எஸ்100 மற்றும் ரியல்மி டெக்லைஃப் வாட்ச் எஸ்இசட் 100 என்கிற இரண்டு மாடல்கள் அறிமுகமாகி உள்ளனர்.

முதலில் லீக்ஸ்... பின்னர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!

முதலில் லீக்ஸ்... பின்னர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மா, ரியல்மி நிறுவனம் வருகிற ஜூன் 23 ஆம் தேதி அன்று மதியம் 12:30 மணிக்கு ரியல்மி டெக்லைஃப் வாட்ச் ஆர்100-ஐ அறிமுகப்படுத்தலாம் என்று வெளியிட்ட லீக்ஸ் தகவலை தொடர்ந்து ரியல்மி நிறுவனம் குறிப்பிட்ட அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலே குறிப்பிட்ட பிரதான அம்சங்களுடன் ரியல்மி டெக்லைஃப் வாட்ச் ஆர்100 ஆனது பிளாக் மற்றும் கிரீம் என்கிற இரண்டு வண்ண விருப்பங்களில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

VPN பயன்படுத்த தடை; இந்திய அரசாங்கம் அதிரடி உத்தரவு; இந்த லிஸ்டில் Google Drive-வும் இருக்கு!VPN பயன்படுத்த தடை; இந்திய அரசாங்கம் அதிரடி உத்தரவு; இந்த லிஸ்டில் Google Drive-வும் இருக்கு!

மீபத்தில் தான் ரியல்மி டெக்லைஃப் வாட்ச் எஸ்இசட்100 அறிமுகமானது!

மீபத்தில் தான் ரியல்மி டெக்லைஃப் வாட்ச் எஸ்இசட்100 அறிமுகமானது!

நினைவூட்டும் வண்ணம் ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தான் அதன் ரியல்மி டெக்லைஃப் வாட்ச் எஸ்இசட்100-ஐ அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.2,499 ஆகும்.

லேக் ப்ளூ மற்றும் மேஜிக் க்ரே என்கிற இரண்டு வண்ணங்களில் வாங்க கிடைக்கும் இந்த வாட்ச் 1.69 இன்ச் அளவிலான எச்டி கலர் டிஸ்ப்ளே, ஸ்கின் டெம்ப்ரேச்சர் மெஷர்மென்ட்டிற்கான (Skin temperature measurement) சென்சார்கள், சிங்கிள் சார்ஜில் 12 நாட்கள் பேட்டரி லைஃப் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

அதற்கும் முன்னதாக ரியல்மி டெக்லைஃப் வாட்ச் எஸ்100 அறிமுகமானது!

அதற்கும் முன்னதாக ரியல்மி டெக்லைஃப் வாட்ச் எஸ்100 அறிமுகமானது!

எஸ்இசட் 100 மாடலுக்கு முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில், ரியல்மி டெக்லைஃப் வாட்ச் எஸ்100 அறிமுகம் செய்யப்பட்டது. அது இந்தியாவில் ரூ.2,499 என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் பிளாக் மற்றும் க்ரே வண்ண விருப்பங்களின் கீழ் வெளியானது.

ரியல்மி டெக்லைஃப் வாட்ச் எஸ்100 மாடலின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 530 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 1.69-இன்ச் அளவிலான (240x280 பிக்சல்ஸ்) கலர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஹார்ட் ரேட், எஸ்பிஓ2 லெவல் மற்றும் பல...

ஹார்ட் ரேட், எஸ்பிஓ2 லெவல் மற்றும் பல...

தவிர இது 24x7 ஹார்ட் ரேட் மானிட்டரை வழங்க ஃபோட்டோபிளெதிஸ்மோகிராபி (PPG) சென்சாரையும் கொண்டுள்ளது. உடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்கின் டெம்ப்ரேச்சர் மற்றும் ப்ளட் ஆக்ஸிஜன் (SpO2) லெவலை அளவிடும் திறனையும் கொண்டது

மேலும் இது வெதர் ஃபோர்காஸ்ட், ம்யூசிக் கண்ட்ரோல், ஃபைண்ட் மை போன், கேமரா அக்செஸ் உள்ளிட்ட பல ரீலோடட் அம்சங்களையும், கிளாக், அலாரம், ஸ்டாப்வாட்ச், டைமர் மற்றும் ஃப்ளாஷ்லைட் போன்ற வழக்கமான வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் டான்சிங், ரைட்டிங், ரன்னிங், மற்றும் வால்க்கிங் உள்ளிட்ட 24 ஸ்போர்ட்ஸ் மோட்களும் இடம்பெற்றுள்ளன

12 நாட்கள் வரை பேட்டரி லைஃப்!

12 நாட்கள் வரை பேட்டரி லைஃப்!

ரியல்மி டெக்லைஃப் வாட்ச் எஸ்100 ஆனது ஐபி68-சான்றளிக்கப்பட்ட மெட்டாலிக்-ஃபினிஷ் கட்டமைப்பில் வந்தது. மேலும் ப்ளூடூத் வி5.1 கனெக்டிவிட்டி மற்றும் குறைந்தபட்சம் ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐஓஎஸ் 11-இல் இயங்கும் டிவைஸ்களுக்கான ஆதரவு, 12 நாட்கள் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் 260mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் பேக் செய்தது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Techlife Watch R100 to launch in India on June 23 may packs color display and bluetooth calling and more. Check details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X