ஒரே நாளில் 5 தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் Realme; இதோ முழு லிஸ்ட்!

|

நீங்களொரு "வெறித்தனமான" ரியல்மி ரசிகர் என்றால், வருகிற ஜூலை 26 ஆம் தேதி நடக்கவுள்ள Realme AIoT Launch Event பற்றிய அறிமுகமே உங்களுக்கு தேவைப்படாது; அதுபற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்து இருக்கலாம்.

ஆனால் குறிப்பிட்ட நாளில், ரியல்மி நிறுவனம் என்னென்ன தயாரிப்புகளை அறிமுகம் செய்யப்போகிறது என்பது பற்றிய போதுமான விவரங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது தொடர்பான தொகுப்பே இது.

ஜூலை 26-ல் 1 இல்ல... 2 இல்ல.. மொத்தம் 5 அறிமுகங்கள்!

ஜூலை 26-ல் 1 இல்ல... 2 இல்ல.. மொத்தம் 5 அறிமுகங்கள்!

அதன் பெயர் குறிப்பிடுவது போலவே, வரவிருக்கும் ரியல்மி வெளியீட்டு நிகழ்வு AIoT டிவைஸ்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூலை 26 ஆம் தேதியன்று நாம் பல்வேறு வகையான Ecosystem தயாரிப்புகளை எதிர்பார்க்கலாம்.

பொசுக்குனு Redmi K50i வாங்கிட்டா.. பொறுமையா உட்காந்து வருத்தப்படனுமா!?பொசுக்குனு Redmi K50i வாங்கிட்டா.. பொறுமையா உட்காந்து வருத்தப்படனுமா!?

இந்நிகழ்வு சரியாக எப்போது தொடங்கும்; லைவ் ஸ்ட்ரீமிங்-ஐ பார்ப்பது எப்படி?

இந்நிகழ்வு சரியாக எப்போது தொடங்கும்; லைவ் ஸ்ட்ரீமிங்-ஐ பார்ப்பது எப்படி?

ரியல்மி ஏஐஓடி லான்ச் ஈவென்ட் ஆனது வருகிற ஜூலை 26 ஆம் தேதி (இந்திய நேரப்படி) மதியம் 12:30 மணிக்கு தொடங்கும். வழக்கம் போல இந்நிகழ்வு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் யூட்யூப் சேனல் வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

குறிப்பிட்ட நாளில் என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும் என்பதில் பெரிய குழப்பங்கள் எதுவும் இல்லை. ஏனெனில் "அந்த பட்டியலை" Realme நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி விட்டது.

05. புதிய ரியல்மி நெக்பேண்ட்: 24-மணிநேர பேட்டரி லைஃப்-ஐ வழங்கும்!

05. புதிய ரியல்மி நெக்பேண்ட்: 24-மணிநேர பேட்டரி லைஃப்-ஐ வழங்கும்!

அது Realme Buds Wireless 2S ஆகும். ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 2எஸ் ஆனது மிகவும் பிரபலமான Realme Buds Wireless 2 இன் 'அப்கிரேடட் வெர்ஷன்' ஆக இருக்கும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 11.2mm ட்ரைவர்ஸ், ENC (Environmental Noise Cancellation), டூயல் கனெக்ஷன், 88ms லோ லேட்டன்சி மோட் மற்றும் 24-மணிநேர பேட்டரி லைஃப் உடன் வரும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் 2எஸ் ஆனது இரண்டு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்: அது பிளாக் மற்றும் ப்ளூ ஆகும். இது ரூ.2,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?Nothing நிறுவனத்திற்கு நன்றி கூறும் Samsung ரசிகர்கள்! அப்படி என்ன நடந்தது?

04. புதிய ரியல்மி பட்ஸ்: IPX5 ரேட்டிங் உடன் வரும்!

04. புதிய ரியல்மி பட்ஸ்: IPX5 ரேட்டிங் உடன் வரும்!

அது Realme Buds Air 3 Neo ஆகும். ரியல்மி பட்ஸ் ஏர் 3 நியோ ஆனது Realme Buds Air 2 Neo போலல்லாமல் ஒரு ஸ்டெம் (Stem) உடன் வருகிறது.

நினைவூட்டும் வண்ணம் இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் ஆனது கடந்த வாரம் தான் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; இப்போது இந்தியாவிற்கும் வருகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இதில் 10mm ட்ரைவர்ஸ், ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்5 மதிப்பீடு, ஈஎன்சி (Environmental Noise Cancellation), 88ms லோ லேடன்சி மோட், டால்பி அட்மோஸ் மற்றும் 30 மணிநேர பேட்டரி லைஃப் போன்றவைகளை பேக் செய்யும். இது ரூ.2,399 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

துரதிர்ஷ்டவசமாக, இதில் ANC (ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்) இல்லை, ஆனால் இதன் "முன்னோடிகளில்" உள்ளது.

03. புதிய ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் - 1.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவுடன்!

03. புதிய ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் - 1.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவுடன்!

அது Realme Watch 3 ஆகும். இந்த ரியல்மி வாட்ச் 3 ஆனது பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச்களில் மிகவும் விரும்பப்படும் அம்சங்களில் ஒன்றைக் கொண்டுவருகிறது - அது இன்பில்ட் மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர் காம்போ உடனான ப்ளூடூத் காலிங் அம்சம் ஆகும்.

நிறுவனத்தின் "மூன்றாம் தலைமுறை" ஸ்மார்ட் வாட்ச் ஆன இது சதுர வடிவிலான டயல் வடிவமைப்பை கர்வ்டு கிளாஸ் கவர் உடன் பேக் செய்கிறது. இதில் இடம்பெறும் டிஸ்பிளேவின் அளவு 1.8-இன்ச் ஆகும்; இதுவொரு எல்சிடி டிஸ்பிளே ஆகும். இது ரூ.4,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த ஸ்மார்ட் வாட்ச் பிளாக் மற்றும் ஒயிட் என்கிற இரண்டு கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா "இதை" UNINSTALL பண்ணுங்க.. கதறும் Google!

02. ரியல்மி நிறுவனத்தின் முதல் மானிட்டர்!

02. ரியல்மி நிறுவனத்தின் முதல் மானிட்டர்!

ஜூலை 26 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு விழாவில் Realme Flat Monitor Full HD என்கிற, ரியல்மி பிராண்டின் முதல் மானிட்டர் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த மானிட்டரின் மூன்று பக்கங்களிலும் குறைந்தபட்ச பெசல்களே இருக்கும் மற்றும் இது மிகவும் மெல்லிய வடிவமைப்பை பெறும்; இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இதன் தடிமன் வெறும் 6.9 மிமீ மட்டுமே இருக்கும்.

மேலும் இந்த ரியல்மி மானிட்டரின் பேனல் 75Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 8ms ரெஸ்பான்ஸ் டைம் வரையிலான ஆதரவையும் கொண்டிருக்கும்.

01. புதிய ரியல்மி டேப்லெட் - ரூ.20,000 க்குள் அறிமுகமாகும்!

01. புதிய ரியல்மி டேப்லெட் - ரூ.20,000 க்குள் அறிமுகமாகும்!

அது Realme Pad X ஆகும். சீனாவில் அறிமுகமான இரண்டு மாதங்களுக்கு பிறகு இது இந்தியாவிற்கு வருகிறது. ஆனால் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்தியாவில் இந்த டேப்லெட்டின் 5G செல்லுலார் வேரியண்ட்-ஐயும் அறிமுகம் செய்யும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 8,340mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் சப்போர்ட், குவாட் ஸ்பீக்கர்ஸ், ஸ்டைலஸ் சப்போர்ட், மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட், 13MP ரியர் கேமரா மற்றும் 8MP செல்பீ கேமரா போன்றவைகளை வழங்கும்.

இந்த டேப்லெட்டின் விலை ரூ.20,000 க்கு கீழ் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அது உண்மையாகும் பட்சத்தில் இந்திய டேப்லெட் சந்தையில் இது ஒரு "கேம் சேஞ்சராக" இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Photo Courtesy: Realme

Best Mobiles in India

English summary
Realme to Launch 5 New Products in India including First Monitor 5G Tablet on July 26

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X