Home
News

கனவு பலித்தது.. நிஜமாவே 8000mAh பேட்டரி தான்.. மின்னல் வேக சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் தான்.. எந்த போன்ல தெரியுமா?

ரியல்மி (Realme) நிறுவனம் வரும் டிசம்பர் 11, 2024 ஆம் தேதி 7000mAh திறன் கொண்ட பேட்டரி உடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ 7 (Realme GT Neo 7) என்ற மாடல் பெயருடன் அறிமுகம் செய்யவுள்ளது. இதனை தொடர்ந்து நிறுவனம் விரைவில் 8000mAh பேட்டரியுடன் புதிய போனை அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியாகியுள்ளது.

ரியல்மி நிறுவனம் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி சீனாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான Realme GT Neo 7 போனை அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி வரிசையில் மிகப்பெரிய பேட்டரி திறனை (big battery smartphone) கொண்ட போனாக வெளிவருமென்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. Realme GT Neo 7 ஸ்மார்ட்போனில் நிறுவனம் 7000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது.

கனவு பலித்தது.. நிஜமாவே 8000mAh பேட்டரி தான்.. மின்னல் வேக சார்ஜிங்..

கனவு பலித்தது.. நிஜமாவே 8000mAh பேட்டரி தான் வெளிவருது:

இந்த அம்சத்தின் உதவியுடன் ரியல்மி ஜிடி நியோ 7 (Realme GT Neo 7) போன் பயனர்கள், நீண்ட நேரம் வரை போனை சார்ஜ் செய்யாமல் பயன்படுத்த முடியும். இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை ரியல்மி நிறுவனம் சீன சந்தையில் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்கிறது. இதனை தொடர்ந்து உலக சந்தை மற்றும் இந்திய சந்தையில் இந்த சாதனம் ஜனவரி 2025 இல் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு நடுவே, ரியல்மி நிறுவனம் 7000mAh பேட்டரியை விட மிக பெரிய பேட்டரி சக்தியை வழங்கும் மற்றொரு புதிய போனை உருவாக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுளள்து. புதிதாக உருவாக்கப்படும் ஸ்மார்ட்போனில் ரியல்மி நிறுவனம் 8000mAh பேட்டரியை (realme 8000mah battery phone) கொண்டுவர இருப்பதாக டெக் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன. 8000mAh பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்யும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் (fast charging technology) ரியல்மி உருவாக்குவதாக கூறப்படுகிறது.

8000mAh பேட்டரி கொண்ட realme ஸ்மார்ட்போன்:

ரியல்மியின் 8000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் சாதனம் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரியல்மி தவிர, சாம்சங் (Samsung), ஒப்போ (Oppo) மற்றும் டெக்னோ (Tecno) போன்ற மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் கூட, இப்போது 8000mAh பேட்டரி போன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களாக இந்த நிறுவனங்கள் அவற்றின் பேட்டரி மேம்மடுதல் மற்றும் கேமரா மேம்படுத்தல்களை (camera upgrade) உருவாக்கி வருகிறது.

ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த Realme GT 7 Pro ஸ்மார்ட்போனில் 5,800mAh பேட்டரியை வழங்கியுள்ளது. அதேபோல், சீன சந்தையில் அறிமுகம் செய்த 6,500mAh பேட்டரியை (battery) வழங்கியுள்ளது. அடுத்தபடியாக வெளிவரவிருக்கும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) போனில் 8,000mAh பேட்டரி உடன் 70 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் ஏறும் திறன் கொண்ட பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், Oppo Find X9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் நாம் 7,500mAh திறன் கொண்ட பேட்டரி உடன் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை எதிர்பார்க்கலாம். இந்த மாதம் அறிமுகமாகவுள்ள ரியல்மி ஜிடி நியோ 7 (Realme GT Neo 7) சாதனம் 7,000mAh பேட்டரி உடன் ரேப்பிட் பாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இனி வரும் காலத்தில் பெரிய பேட்டரி திறன் கொண்ட சாதனங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme to bring 8,000mAh battery smartphone in 2025 after Realme GT 7 Pro launch on December 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X